செவ்வாய், 26 அக்டோபர், 2010

இராசராச சோழனின் ஏக ஆதிபத்தியம் - முனைவர் தொ.பரமசிவன்

சென்ற கட்டுரையில் முதலாம் இராச ராசனை ஏகாதிபத்தியவாதி என்று குறிப்பிட்டிருந்தோம். இந்தச்சொல்லாடல் நவீன காலத்தியது அல்லவா என்று சில வாசகர்கள் குழம்பியிருக்கலாம். முதலில் இந்தச்சொல்லினுடைய பொருளை ஆழ்ந்து நோக்க வேண்டும்.மற்ற எல்லாவற்றையும் நிராகரித்துத் தான் ‘மட்டுமே’ மேலெழும்பும் ஒரு நபரை அல்லது சித்தாந் தத்தையே ஏகஆதிபத்தியம் என்கிறோம். அமெரிக்கா என்பது ஒரு அரசின் ஏகாதிபத்தியம் என்றால் மற்ற விளையாட்டுக்களை எல்லாம் அழித்து மேலெழும்பும் கிரிக்கெட் விளையாட்டுக் கலாச்சார ஏகாதிபத்தியம் அல்லவா?
சங்கராச்சாரியாரின் அத்வைத சித்தாந்தம் ஒரு தத்துவ ஏகாதிபத்தியம் அல்லவா? உலக மெல்லாம் தனக்கு மட்டுமே என்பது சங்க காலம் தொடங்கி மன்னர்களின் நோக்கமாக இருந் திருக்கிறது.
“ தென்கடல் வளாகம் பொதுமையின்றி
வெண்குடை நிழற்றிய ஒருமையோர் “

என்று சங்க இலக்கியம் மன்னர்களின் ஏகாதிபத்திய உணர்வைக்குறிப்பிடுகிறது.
“ அகிலமெலாம் கட்டி ஆளினும்
கடல் மீது ஆணை செல்லவே நினைப்பார்”
என்று பட்டினத்தாரும் பாடுவார்.
இராசராசனின் மெய்க்கீர்த்தியின் ( மெய்க் கீர்த்தி = மன்னர்களின் புகழ்ப்பாட்டு முன்னுரை) முதல் இரண்டு அடிகளைப் பாருங்கள்:
“ திருமகள் போலப்பெருநிலச்செல்வியும்
தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொள ”

என்பது முதல் இரண்டு அடிகளாகும். செல்வங்களும் நிலவளமும் பூமியில் வேறு யாருக்கும் கிடையாது என்பது அவனது நோக்கமாகும்.
சோழமண்டலம் மட்டுமல்லாமல் பாண்டி மண்டலம், சேர மண்டலம் ஆகியவற்றோடும் ஈழ மண்டலத்தையும் வென்று தனக்கு மும்முடிச் சோழன் என்று தானே பெயர் சூட்டிக் கொண் டவன் அவன். அவை மட்டுமின்றி வேங்கை நாடு,கங்கை பாடி,தடிகை பாடி, நுழம்பபாடி, ஈழ மண்டலம், இவை எல்லாவற்றையும் வெற்றி கொண்டவன் அவன். அதாவது இன்றைய கர்நாடகத்தில் வடகிழக்குப் பகுதி,ஆந்திரத்தின் தென்பகுதி கேரளத்தின் தென்பகுதி இவை யெல்லாம் அவன் ஆட்சியின் கீழ் வந்தன.
அந்தந்த நாட்டுப் பண்டாரங்களைக் (பண்டாரம் = கருகூலம்) கொள்ளையடித்த செல்வமே 216 அடி உயரமுள்ள கற்கோபுரத்தை உருவாக்கியது.வென்ற நாடுகள் அனைத்துக்கும் அவன் தனது 9 பட்டப் பெயர்களையே சூட்டி னான். எடுத்துக்காட்டாக பாண்டி நாட்டுக்கு ராஜராஜப்பாண்டி மண்டலம் என்று பெயர் சூட்டினான். தஞ்சைக் கோவில் கல்வெட்டு ஒன்று “ உடையார் ஸ்ரீராஜராஜதேவர் மலைநாடு எறிந்து கொடுவந்த பண்டாரத்திலிருந்து எடுத்துச்செய்த” பொன்னாலான அணிகலன்களைப் பற்றிப் பேசு கிறது. அதாவது சேரநாட்டு அரச பண்டாரத்தைக் (கருகூலத்தை) கொள்ளையடித்துக் கொண்டுவந்த பொன்னால் கோவில் இறைவனுக்கு நகைகள் அளித்துள்ளான்.
ஐப்பசி மாதம் சதைய நட்சத்திரத்தில் பிறந்தவன்.எனவே தன்னுடைய பிறந்த நாளை கேரளா உட்பட எல்லாக் கோவில்களிலும் கொண் டாட ஏற்பாடு செய்தவன் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டோம்.
அவரது மெய்க்கீர்த்தியின் மூன்றாவது அடி “ காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி” என்பதாகும்.
அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கல் வெட்டு ஒன்றில் இவ்வரியை அடுத்து “மலை யாளிகள் தலையறுத்து” என்ற தொடர் காணப் படுகிறது.
தஞ்சைக்கோவிலுக்குத் தான் மட்டுமின்றித் தன் பணியாளர்கள அனைவரையும் நன்கொடை அளிக்கச் செய்திருக்கிறான்.தன்னுடைய பெயரே எல்லா இடங்களிலும் விளங்க வேண்டும் என்பதற்காகப் பணியாளர்களுக்கு மிக உயர்ந்த விருதாகத் தன்னுடைய பெயரான ‘ராஜராஜன்’ என்பதை அளித்துள்ளான்.
ராஜராஜப் பெருந்தச்சன்
ராஜராஜப் பெருந்தையான்
(ரத்தினங்களைத் துணியில் தைப்பவர்)
ராஜராஜப் பெருநாவிசன்
என்பவை போன்ற பட்டங்களை அளித் துள்ளான்.
அதுமட்டுமில்லாமல் அளவு கருவிகளுக்கும் தன்னுடைய பெயரையே சூட்டியுள்ளான் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.இது மட்டுமின்றி தஞ்சைக் கோவிலுக்கான 400 ஆடல் மகளிரும் சோழ மண்டலத்திலிருந்த 112 கோவில்களிலி லிருந்து தருவிக்கப்பட்டவர்கள்.
சிவபெருமான் நடராசத் திருக்கோலமே அவன் மனம் விரும்பிய வடிவமாகும். அத்திரு மேனியை “ஆடவல்லான்” என்று குறிப்பிடும் ராச ராசன் அதற்காகவே 400 தளிச்சேரிப் பெண்டுகளை ( ஆடுமகளிர்-தேவ தாசிகள்) நியமித்தான்.
தஞ்சைக்கோவில் பணியாளர் 1100 பேரில் 400 பேர் ஆடல் மகளிர் ஆவர். இவையன்றிக் கோயிற்பாதுகாவலர்களாக ‘திருமெய்க்காப்பு’ எனப்படும் பணியாளர்களை நியமித்தார். இவர்களைச் சோழ மண்டலத்திலுள்ள பல்வேறு ஊர்ச்சபையாரும் அரசன் ஆணைப்படி அனுப்பி யுள்ளனர்.
இவையன்றி வாரிசு அரசியலின் வழிகாட்டி யாகவும் அவன் திகழ்ந்துள்ளான்.தான் வென்ற பாண்டி மண்டலத்தை ஆளத் தன் பிள்ளைகளை நியமித்து அவர்களுக்குச் சோழ பாண்டியர் என்று பட்டம் கொடுத்தார்.சோழ பாண்டியர் என்ற பெயர் தாங்கிய கல்வெட்டுக்கள் பல மதுரை-நெல்லை மாவட்டங்களில் காணப்படுகின்றன.
“இவனுக்கு 15 மனைவியர் இருந்தனர். பட்டத்தரசி தந்தி சக்தி விடங்கி ஆவார்.முதலாம் ராசேந்திரனைப் பெற்றெடுத்த பெருமைக்குரியவர் வானவன் மாதேவி” என்று வரலாற்றாளர் குறிப்பிடுகின்றனர்.
பல்வேறு ஊர்களிலுள்ள நிலங்களிலிலிருந்து தஞ்சைக்கோவிலுக்குக் காணிக்கடனாக ஆண் டொன்றுக்கு வந்த நெல் 1 லட்சத்து 20 ஆயிரம் கலம் ஆகும்.எனவே இந்தக் கோயில்பணியாளர் களில் கணிசமான அளவு கணக்கெழுதுவோர் இருந்துள்ளனர். 4 பண்டாரிகள், 116 பரிசாரகர் 6 கணக்கர்கள் 12 கீழ்க்கணக்கர்கள் இக்கோவிலில் பணி செய்துள்ளனர். கோவிலுக்குரிய விளக்கு களுக்கு நெய் அளக்க 400 இடையர்கள் நியமிக்கப் பட்டிருந்தனர். இவர்களுக்கு ‘வெட்டிக்குடிகள்’ என்று பெயர்.அதாவது சம்பளமில்லா வேலைக் காரர்கள் என்று பொருள். இவர்கள் வசம் ஒப்பு விக்கப்பட்ட எண்ணிக்கையிலான ஆடுமாடுகளின் ‘மிகுபயன்’(Surplus) மட்டுமே ஊதியமாகும். அதாவது 96 ஆடுகள் அல்லது 48 பசுக்கள் அல்லது 32 எருமைகள் ஒரு ‘ இடையன் வசம்’ ஒப்புவிக்கப் படும். இந்த எண்ணிக்கை குறையாமல் வைத்துக் கொண்டு அவன் கோவிலுக்கு நெய் அளக்க வேண்டும். எனவே இந்த ஆடுகளுக்கும் மாடு களுக்கும் “ சாவா மூவாப் பேராடுகள் அல்லது பசுக்கள் ” என்று பெயர்.அதாவது இவர்களைப் பொறுத்தமட்டில் அரசுக்கு பொருட்செலவோ நெற்செலவோ கிடையாது.
நாம் சென்ற கட்டுரையில் குறிப்பிட்டது போல அளவுகளின் துல்லியத்தன்மை ஏகாதி பத்தியத்தை அடையாளம் காட்டும் ஒரு அம்சமாகும்(கணிப்பொறிக்காலத்தை நினைவு கொள்க).
ஒரு மாநிலமும் வரியிலிருந்து தப்ப முடியாது. சோழ சாம்ராஜ்யத்தில் நிலப் பரப்பைத் துல்லியமாக அளந்து இறை வசூல் செய்யும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
“ நிலன் நாற்பத்தொன்பதரையே
நான்குமா முக்காணிக்கீழ் அரையே
ஒரு மாவரைக் கீழ் முக்காலே ஒருமாவினால்
இறைகட்டின காணிக்கடன்...”

என்று வரும் இந்நிலப்பரப்பின் அளவினைக் காண்போம்.
இக்கல்வெட்டிலிருந்து அந்நாளில் நிலப் பரப்பைக் கணக்கிட வேலி,
குழி, சதுரசாண், சதுர அங்குலி,சதுரநூல் இவற்றை அலகீடாகக் கொண் டிருந்தனர் எனத்தெரிகிறது.
மேலும், ஒரு வேலி பரப்பளவுள்ள நிலத்தை 320 சம பங்குகளாக்கி அதன் ஒரு பங்கை முந்திரி (1/320) என்றும் முந்திரிக்கும் கீழுள்ள பரப்பை மேலும் 320 சமபங்கு களாக்கி அதன் ஒரு பங்கைக் கீழ் முந்திரி (1/320 ஒ 1/320 ) என்றும் கீழ் முந்திரிக்குக் கீழ் உள்ள நிலத்தை மேலும் 320 சமபங்குகளாக்கி அதன் ஒரு பங்கைக் கீழ் கீழ் முந்திரி
(1/320 ஒ 1 /320 ஒ 1/320 ) என்றும் குறிப் பிட்டனர். கீழ் கீழ் முந்திரிக்குக் கீழுள்ள மிகச் சிறிய நிலப் பரப்பை இருபத்தைந்து சம பங்குகளாக்கி அதன் ஐந்து பங்கைக் கீழ்கீழ்கீழ் நான்குமா என்றும் பத்துப்பங்கை கீழ்கீழ்கீழ் எட்டுமா என்றும், பதினைந்து பங்கைக் கீழ்கீழ்கீழ் அரையே இருமா என்றும், இருபது பங்கைக் கீழ்கீழ்கீழ் முக்காலே ஒருமா என்றும், இருபத்து ஐந்து பங்கை கீழ் கீழ் முந்திரி என்றும் வகுத் துள்ளனர்.
இறுதியில் கணக்கிடும் மிகச்சிறிய நிலப்பரப்பின் அளவு கீழ் கீழ் முந்திரிக்குக் கீழுள்ள மேற்கூறிய நான்கு அளவு முறை களில் ஏதாவது ஒன்றினைக்கொண்டு முடியும்.
பொதுவில், நிலப்பரப்பின் அளவு முறை கீழ் கீழ் முந்திரி என்ற அளவிலேயே முடியும். நில அளவையை மேலே குறித்த முறையில் முந்திரி,அரைக்காணி,காணி, அரைமா,முக்காணி,ஒருமா, மாகாணி , கால்,அரை,முக்கால்,ஒன்று என்று கீழ் கீழ் முந்திரியிலிருந்து முந்திரி முண்டிரியாகக் கீழ் முந்திரி, முந்திரி வேலி வரையில் கூட்டி அலகிட்டு அதன் பரப்பை அட்டவணை ஒன்றில் காட்டியுள்ள வாய்ப்பாட்டின்படிக் கணக்கிட்டு வேலிக்கணக்கில் குறித்துள்ளனர்.
(செம்மலர் ஜூலை 2010 இதழில் வெளியானது)

ராசராசனை இன்னும் கொண்டாடுவதேன்? - முனைவர் தொ.பரமசிவன்

தஞ்சைப் பெருங்கோயிலின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாடப்படப் போகிறது. உலகெங்கிலுமிருந்து காணவரும் மக்களை மிரளவைக்கும் பிரம்மாண்டம் இது. ஏகாதிபட்தியத்தின் கலை வெளிப்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். சோழப்பெருமன்னன் முதலாம் ராசராசனால் (கி. பி. 985 – கி. பி. 1012)கட்டப்பட்டது இது. ஆனால் அந்தப்பெருவேந்தனே இக்கோயிலைத் தான் கட்டியதாகக் குறிப்பிடாமல் ‘கட்டுவித்ததாகக்’ குறிப்பிடுகின்றான்.
“ பாண்டியகுலாசநி வளநாட்டு தஞ்சாவூர்க் கூற்றத்து தஞ்சாவூர்
நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீ ராஜராஜீச்வரமுடையார்க்கு
நாங்குடுத்தநவும் அக்கன் குடுத்தநவும் நம் பெண்டுகள் குடுத்தநவும்
மற்றும் குடும்பத்தார் குடுத்தநவும் ஸ்ரீவிமாநத்தில் கல்லிலே வெட்டுக
என்று திருவாய்மொழிஞ்சருள வெட்டிந”

என்பது இக்கோயிலின் முதல் கல்வெட்டு.
உடையார் என்பதுஅக்காலத்தில் அரசனுக்கும் இறைவனுக்கும் பொதுவாக வழங்கிய பெயராகும். அக்காலத்து மன்னர்களின் வழக்கப்படி அரசன் இக்கோயிலுக்கு ராஜராஜேச்வரம் என்று தன் பெயரையே சூட்டியுள்ளான். அக்கன் என்று குறிப்பிடப்படுவது. அவனது தமக்கையாரான ’ஸ்ரீவல்லவரையர் வந்தியத்தேவர் தேவியார் ஆழ்வார் பரநிந்தகன் குந்தவை’யாரைக் குறிப்பிடுவதாகும்.
பெண்டுகள் என்பது மனைவியரையும் பணிமகளிரையும் குறிக்கும். அவனும் அவன் அதிகாரிகளும் கொடுத்த தங்கம்,வெள்ளியால் ஆன நகைகள்,கலங்கள் உலோகத்திருமேனிகள் தவிர இக்கோயில் முழுவதும் கல்லாலேயே ஆக்கப்பட்டது. மலைகளே இல்லாத ஒரு நிலப்பரப்பால் சூழப்பட்ட இக்கற்றளிக்குத்(கற்றளி = கற்கோவில்) தேவையான கற்கள் நார்த்தா மலையிலிருந்து (இன்றைய திருச்சி மாவட்டம்) கொண்டுவரப்பட்டது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
196 அடி உயரமுள்ள இக்கோயிலின் விமானம் (கருவறைக்கு மேல் உள்ள பகுதி) செதுக்கப்பட்ட கற்களை அடுக்கிக் கட்டப்பட்டதாகும். ஆயிரமாண்டுக் காலத்தில் எத்தனையோ புயல்,மழை இயற்கைச்சீற்றங்களைக் கண்டபோதும் ஒரு கல் கூட ஒரு சென்டிமீட்டர் அகலம் கூட விலகவில்லை என்பதுதான் இதனுடைய தொழில்நுட்பச்சிறப்பு. வெளியிலிருந்து பார்க்கும்போது கோபுரம் போலத்தெரியும் இந்த விமானம் கற்களை வட்டமாக அடுக்கியே கட்டப்பட்டதாகும். நடுவில் தளங்கள் கிடையாது. கி. பி. 1010 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் நாள் ஆறாண்டுக் காலத்தில் கட்டப்பட்ட- இக்கோயிலில் வழிபாடு துவங்கியது.
உண்மையில் இதன் பெருமையெல்லாம் இதைக்கட்டிய கல்தச்சர்கள்,சிற்ப ஆசாரிகள்,உழைப்பாளிகள் ஆகியோரின் உடல் உழைப்பையும் மதி நுட்பத்தையுமே சாரும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இக்கோயிலில் பணியாற்றியுள்ளனர். காவிரிநாட்டின் பல ஊர்களிலிருந்தும் 400 தளிச்சேரிப் பெண்டுகள் ( தளி = கோயில், சேரி = சேர்ந்து வாழும் இடம் ) கொண்டுவரப்பட்டு நியமிக்கப்பட்டனர். இவர்கள் கோயிலில் அலகிடுதல்/மெழுக்கிடுதல் போன்ற பணி செய்பவராகவும் பகலில் விளக்கேற்றுதல் போன்ற பணி செய்பவராகவும் ஆடுமகளிராகவும் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தனர்.
விளக்கெரிப்பதற்காக நானூறு இடையர்களுக்கு ஆடுகள், மாடுகள், எருமைகள் ஆகியன வழங்கப்பட்டன. இந்த ஆடுகள் ‘சாவா மூவாப்பேராடுகள்’ என அழைக்கப்பட்டன. இவர்கள் ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு உழக்கு நெய் விளக்கெரிக்கக் கோயிலுக்குக் கொடுக்க வேண்டும்
நெல் அளக்கும் மரக்காலுக்கும் நெய் அளக்கும் உழக்குக்கும் ’ஆடவல்லான்’ என்று அரசன் பெயரே சூட்டப்பட்டது. கோயிலுக்கான பாதுகாவலர்கள் “திருமெய்க்காப்புகள்” எனப்பட்டனர். தஞ்சைமண்டலத்தின் ஒவ்வொரு ஊர்ச்சபையாரும் ஒரு திருமெய்க்காப்பாளரைப் பெரியகோயிலுக்கு அனுப்ப வேண்டும். தளிச்சேரிப் பெண்டுகளைப்போல இவர்களுக்கும் ஆண்டொன்றுக்கு 100 கலம் நெல் வழங்கப்பட்டது. இக்கோவிலைக்கட்டிய சிற்பிக்கு ’இராஜராஜப்பெருந்தச்சன்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. கோவிலில் நாவிதப்பணி செய்வாருக்கும் “இராஜராஜப் பெருநாவிசன்” என்ற பட்டம் தரப்பட்டது.
இராஜராஜன் பிறந்த ஐப்பசிமாத சதைய நட்சத்திரத் திருவிழா ஐப்பசி மாதம் இக்கோவிலில் கொண்டாடப்பட்டது. ’ இந்நாட்களில் ஆடியருளும் திருமஞ்சன நீரிலும் தண்ணீர் மீதிலும் ஒருநாளைக்கு ஏல அரிசி ஒரு ஆழாக்கும் பெருஞ்சண்பக மொட்டு ஒரு ஆழாக்கும் இடப்பெற்றுள்ளன ‘ என்று ஒரு கல்வெட்டால் அறியலாகிறது. திருச்சதைய நாள் பன்னிரண்டனுக்கும் ‘திருவிழா எழுந்தருளின தேவற்குத்’ திரு அமுது செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டமையை ஒரு கல்வெட்டுக் காட்டுகின்றது. மன்னன் இக்கோவிலில் உள்ள இறைத்திருமேனிகளுக்குக் கொடுத்த தங்க அணிகலன்களின் எடை மட்டும் 1230 கழஞ்சு 4 மஞ்சாடி ஒரு குன்றி ஆகும். இது சுமார் 2 கிலோ 692 கிராம்களாகும். தங்கத்தாலான கலன்கள் இக்கணக்கில் சேராது.
இக்காலத்தவர் கருதுவதுபோல இக்கோயில் தமிழ்ச்சைவ நெறிப்படிக் கட்டப்பட்டது அன்று. காசுமீரத்துப் பாசுபத சைவ நெறிப்படிக் கட்டப்பட்டதாகும். இக்கோவிலின் கருவறையைச் சுற்றி உள்ள ஊழ்த்திருச்சுற்றில் வாமம்,அகோரம்,சதாசிவம், சத்யோஜாதம் என்ற நான்கு திருமேனிகளைக்காணலாம். மூல லிங்கம் ஈசானதேவராகும். மூலலிங்கம் ஊன்றப்பட்ட ஆவுடையார் 32 முழம் திருச்சுற்று உடையதாகும். என்னதான் வியப்பைத் தந்தாலும் தஞ்சைப்பெருங்கோவில் ஏகாதிபத்தியத்தின் 10ஆம் நூற்றாண்டு வெளிப்பாடு என்று கூறுவதே பொருந்தும். ஏகாதிபத்தியத்துக்கென்று சில கலாச்சார வெளிப்பாடுகள் உண்டு. அவற்றில் ஒன்று அளவின் பிரம்மாண்டம்(133 அடி உருவத்திருவள்ளுவர் சிலை , பிரமிடுகள் போன்றவையும் இப்படித்தான். ) மற்றொரு பண்பு பொருட்களையும் மனிதர்களையும் தரவரிசைப்படுத்தும் நுட்பம்.
ஒரு நகைக்கான வர்ணனையில் முத்துக்களின் தர வரிசை இவ்விதமாக ஒரு கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது:-

‘ஸ்ரீராஜராஜ தேவர் ஸ்ரீபாதபுஷ்பமாக அட்டித்திருவடி தொழுத இரண்டாந்தரத்தில் முத்தில் கோத்த முத்து வட்டமும் அனுவட்டமும் ஒப்பு முத்துங் குறுமுத்தும் நிம்பொளமும் பயிட்டமும் அம்புமுதுங்கறடும் இட்டையுஞ் சப்பத்தியுஞ் சக்கத்துக்குளுர்ந்த நீரும் சிவந்த நீரும் உடைய முத்து ஆயிரத்தைந்நூற்று இரண்டினால் நிறை நாற்பத்தியொரு கழஞ்சே ஒன்பது மஞ்சாடியும். . . . . . ’
ஏகாதிபத்தியத்தின் மற்றொரு பண்பு அளவுகளின் கூர்மை அல்லது ஆணைகளின் துல்லியத்தன்மை)
‘ நிலன் இருபத்தைஞ்சே இரண்டு மா முக்காணி அரைக்காணிக் கீழ்
ஒன்பது மா முந்திரிகைக்கீழ் அரையினால் பொன் இருநூற்று நாற்பத்தாறுகழஞ்சரையே மூன்று மா முக்காணியும் . . ’
என்று ஒரு ஆணை செல்கிறது.
ஆனால் இந்தப்பேரரசு எளிய மக்கள் வாழ்விடங்களான பறைச்சேரி, கம்மளச்சேரி, வண்ணாரச்சேரி,ஊர் நத்தம்,பாழ் நிலம், ஊடறுத்துப்போகும் வாய்க்கால்கள் ஆகியவற்றை இறையிலி நிலங்களாக அறிவித்திருக்கிறது. அந்த நிலையே ஆங்கிலேயர் ஆட்சிக்காலம்வரை தொடர்ந்தது. எப்படியிருந்தாலும் தீண்டாச்சேரியும் பறைச்சேரியும் வாழ்ந்த காலம்தான் அது. பறைச்சுடுகாடும் கம்மாளச்சுடுகாடும் தனித்தனியாக இருந்த காலம்தான் அது. இந்தப் ‘பொற்காலம்’ பற்றி நிறையவே இன்னும் பேச வேண்டும்.
அப்படியானால் ராசராசனைத் தமிழுலகம் இன்னமும் ஏன் கொண்டாடுகிறது?ராசராசன் தில்லையிலே அவன் காலத்திலேயும் நிலைபெற்றிருந்த பார்ப்பன மேலாதிக்கத்துக்கு எதிராகவே இக்கோவிலைக் கட்டியிருக்கிறான். தேவாரத்திருப்பதியங்களைப் பாட நாற்பத்தியெட்டுப்பேரை நியமித்திருக்கிறான். அதன் விளைவாகத்தான் தில்லைக்கோவிலின் மேன்மையைக் கொண்டாடிய சேக்கிழார் தஞ்சைப்பெருங்கோவிலைப்பற்றி மறைமுகமாகவேனும் ஒரு சொல் பாடவில்லை. .
- (செம்மலர் ஜூலை 2010 இதழில் வெளியானது)

திங்கள், 25 அக்டோபர், 2010

கறுப்புச் சட்டைக் காரருக்கு செங்கொடி மரியாதை

விடுதலை அடைந்த இந்தியாவில் கம்யூனிஸ்டுகளின் மீதான அடக்கு முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. நாடெங்கும் கம்யூனிஸ்டுகள் வேட் டையாடப்பட்டனர். கம்யூனிஸ்டு கள் அடுக்குமுறைக்கு அடிபணிய மறுத்து முடிந்த வகையில் எல்லாம் போராடினர். தமிழகத்திலும் ஏராள மான சிகப்பு மலர்கள் கொடிய அடக்கு முறையால் வீழ்த்தப்பட்டன. சேலம் சிறைகூட இந்த இரத்த வேட்டைக்கு தப்பவில்லை. 22 கம்யூனிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடலூர் சிறையிலும் துப்பாக்கிச் சூடு. இரணி யன், மாரி, மணவாளன், தூக்கு மேடை பாலு, திருப்பூர் பழனிச்சாமி, அன்னை லட்சுமி என தியாகிகள் பட்டியல் நீண்டு கொண்டே போனது இக்காலகட்டம்தான். சதி வழக்குகள், கொலை வழக்குகள் என சிறைக்கூடங்களில் கம்யூனிஸ்டு களை பூட்டிக் கொக்கரித்தது ஆளும் வர்க்கம். கட்சி மீது தடையும் நீடித்த காலம்.
பாட்டாளி வர்க்கத்திற்காக உடல், பொருள், ஆவியை அர்ப்பணித்தும் கம்யூனிஸ்டுகள் போராடிக் கொண்டிருந்தபோது பல வார, மாத, தின ஏடுகள் தங்கள் எழுத்தாயுதத்தை அடக்குமுறைக்கு எதிராக உயர்த்தத் தவறின. ஆளும்வர்க்க அடக்கு முறையை நியாயப்படுத்தி செய்தி வெளியிட்ட ஏடுகளே அதிகம்.
இந்த நெருக்கடியான சூழலில் "திராவிடர் கழகம் மட்டும் கம்யூ னிஸ்டுகளுக்கு துணை நின்றது. தோள் கொடுத்தது" என்கிறார் என். ராம கிருஷ்ணன்.
திராவிடர் கழகத்தின் ஏடான ‘விடுதலை’ கம்யூனிஸ்டுகள் மீதான தாக்குதல் குறித்த விபரங்களை வெளியிட்டது. தாக்குதலைக் கண்டி த்து கட்டுரைகள் வெளியிட்டது. சித்ரவதைகளை, அடக்குமுறையை கண்டித்து ஏஐடியுசி தலைவர் சர்க் கரைச் செட்டியார் விடுத்த அறிக்கை விடுதலையில் வெளியானது.
பெரியார், சேலம் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தலையங்கம் தீட்டினார். 1950 பிப்ரவரி 15ஆம் நாள் விடுதலையில் இது வெளிவந்தது. அந்த நெடிய தலையங்கத்தில் பெரியார் எழுதுகிறார்:
"சேலம் பலி 22 ஆகிவிட்டது. காயம்பட்டவர்களில் எத்தனை பேர் அதிகார வெறிக்குப் பலியானார் களோ தெரியவில்லை. ரயில் விபத் தோ பஸ் விபத்தோ ஏற்பட்டால் விபத்தில் மாண்ட உயிர்களின் பெயர்கள் உடனே வெளிவந்துவிடு கின்றன. ஆனால் சேலம் பலிப் பட்டி யல் மட்டும் வெளிவராத காரணம் தெரியவில்லை"
"தங்கள் கொள்கைக்காக உயிர் விட்ட ஒப்பற்ற வீரர்களை அதி காரவர்க்கம் மரக் கட்டைகளாகக் கருதி இருக்கிறதா? அல்லது அவர்க ளும் மனிதர்கள், அவர்களுக்கும் குடும்பங்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் உண்டு என்று கருதி இருக் கிறதா? சவங்களைக் கூட இவர்கள் கண்ணில் காட்டியதாகத் தெரிய வில்லை"
"ஊரெங்கும் 144 தடையும், ஊர் வலத்திற்குத் தடையும் தொழிலாளர் வாய்களில் அடக்குமுறை துணி முடிச்சும் இல்லாதிருந்தால் சேலம் நிகழ்ச்சிக்கு நாள்தோறும் கண்டனம் சரமாரியாகக் கொட்டுவதை காண லாம். இன்று மூச்சு பேச்சு இல்லை. தமிழ் நாட்டில் சுடுகாட்டு அமைதி நிலவிக் கொண்டிருக்கிறது. 22 பிணங்களும் தொழிலாளர் உலகைக் கண்டு ஏராளமாகச் சிரிக்கின்றன. நினைக்க நினைக்க நெஞ்சம் துடிக் கிறது."
இப்படி எழுதியதோடு நின்று விடாமல் மார்ச் 5ஆம் நாள் மாநிலம் முழுதும் கண்டனக் கூட்டங்கள் நடத்த பெரியார் அறைகூவல் விடுத்தார். எம்.ஆர். ராதா தலைமை யேற்று கண்டன ஊர்வலம் நடத்தி னார். அவர் வெள்ளைக் குதிரையில் வந்தார். பெரியார், குத்தூசி குருசாமி போன்றோர் கம்யூனிஸ்டுகளை ரகசியமாக சந்தித்து ஆதரவும் உத விக்கரமும் நீட்டினர். ராமநாதபுரம், திருப்பூர், சென்னை, பொள்ளாச்சி உட்பட தமிழகம் முழுவதும் பல இடங்களில் எம்.ஆர். ராதா ‘ரத்தக் கண்ணீர்’ நாடகத்தையும்; ‘பேப்பர் நியூஸ்’ ‘முருகன்’ போன்ற நாடகங்க ளையும் நடத்தி நிதி திரட்டி உதவி னார். பல தோழர்கள் சிறையில் இரு ந்து விடுதலை அடைய பெரியாரும், திராவிட இயக்கத் தலைவர்கள் குத்தூசி குருசாமி போன்றோரும் செய்த உதவிகள் நிறையவே உண்டு. இந்த மாபெரும் தோழமைக்காக தோழர் எம். கல்யாண சுந்தரம் நன்றி தெரிவித்து குத்தூசி குருசாமிக்கு எழுதிய கடிதம் ஒரு வரலாற்று ஆவணமாகும். அதில் அவர் எழுதி னார்:
"என்னுடைய விடுதலை திராவி டர் கழகம் - கம்யூனிஸ்ட் கட்சியின் ஐக்கியத்தின் வெற்றியாகும். ஜனநாயக சக்திகளின் வெற்றியாகும்"
"கம்யூனிஸ்ட் கட்சியும் தொழி லாளி விவசாயி மக்களின் இயக்கங் களும் காங்கிரஸ் பாசிஸ்ட் அடக்கு முறைக்கு பலியானபோது விடு தலைப் பத்திரிகை செய்துள்ள சேவை சரித்திரத்தில் இடம் பெற வேண் டியது"
இப்படி அன்று கம்யூனிஸ்டுகள் நெருப்பு வளையத்தில் சிக்கித் தவித்தபோது துணை நின்றவர்கள் திராவிடர் கழகத்தவர்களே. இந்த உறவும் தோழமையும் கம்யூனிஸ்டுக ளிடம் என்றும் பசுமையாகவே இருக்கும். இதன் வெளிப்பாட்டை இன்னொரு செயலில் எதிரொலிக்கக் காண்கிறோம்.
"1965ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் நாள் குத்தூசி குருசாமி சென்னையில் காலமானார். அவரது உடல் ஷெனாய் நகரிலிருந்த அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அப்பொழுது நடைபெற்ற ஒரு சம்பவத்தினை பிரபல கல்வியாளரும் தமிழக பள்ளிக் கல்வித் துறையின் இயக்குநராக இருந்தவருமான நெ.து. சுந்தர வடிவேலு விவரிக்கிறார்" என தனது நூலில் குறிப்பிட்டுள்ள என். ராமகிருஷ்ணன் அந்த விவரங்களை சுந்தர வடிவேல் நூலிலிருந்து அப் படியே தருகிறார்.
"நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்ச்சியொன்று நினைவிற்கு வரு கிறது.
குத்தூசி குருசாமியாருக்கு இறுதி வணக்கம் செலுத்த பலதரப்பட் டவர்கள், பல கட்சியினர் கூடியிருந் தார்கள். அறிஞர் அண்ணாவும் எம். கல்யாண சுந்தரமும் வந்திருந்தனர். இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள்"
"இறுதி ஊர்வலம் புறப்படுவதற்கு இரண்டொரு மணி இருந்தது. அவ் வேளை செஞ்சட்டை அணியினர் வந்து சேர்ந்தார்கள். தோழர் ஏ.எஸ். கே.(ஏ.எஸ்.கே. அய்யங்கார் கம் யூனிஸ்ட், தொழிற்சங்கத் தலைவர்) ஏற்பாடு அது! தோழர் குருசாமியார், இல்லத்தின் முன் அணிவகுத்து நின்றார்கள். இறுதிப் பயணத்தில் அயனாவரம் சுடுகாடு வரை இருபுற மும் அணிவகுத்து வந்து தங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்கள்..."
"எதற்காக நன்றி? தன்னாட்சி இந்தியாவில் நம் ஆட்சிகள் செய்த முதல் பெரிய செயல் பொதுவுடை மைவாதிகளை வேட்டையாடியதே. பொதுவுடைமைக் கட்சிக்குத் தடை விதித்தனர்"
"சென்னை மாகாணத்தில் ஆயி ரக்கணக்கானவர்களை சிறையில் தள்ளிக் கொடுமைப்படுத்தினார்கள். சேலம் கடலூர் மையச் சிறைகளில் கம்யூனிஸ்டுகளை காக்கை குருவிகள் போல் சுட்டுத்தள்ளினர்."
"அக்கொடுமைகளை எதிர்த்துக் கடுமையாகக் கண்டித்தது பெரியா ரின் திராவிடர் கழகம்; ஆசிரியர் குத்தூசி குருசாமியின் அனல்பொழி யும் கட்டுரைகளும் தலையங்கங்க ளும் தொடர்ந்து கொடுமைகளை அம்பலப்படுத்தி, ஆட்சியாளர் களைத் தலை குனியச் செய்தது..."
"அக்கால கட்டத்தில் தலை மறைவாக இருந்த சில கம்யூனிஸ்ட் முன்னணியினர் குத்தூசியாரின் இல்லத்தில் அடைக்கலம் புகுந்து தப்பிச் சென்றனர். இவற்றிற்கு நன்றியாக ஏ.எஸ்.கேயின் தோழர்கள் அணிவகுத்தார்கள்"
நெ.து. சுந்தரவடிவேலுவின் மேற் கூறிய வாக்குமூலம் நமக்குப் பல செய் திகளை உறுதி செய்கிறது. அது மட் டுமா?
காலச் சூறாவளியில் என்னென்ன வோ நிகழ்ந்துவிட்டது. தமிழகத்தில் உழைக்கும் வர்க்கம் மீது கடும் அடக்குமுறைகளை திராவிடர் இயக்க வாரிசுகளாய் வந்தவர்கள் ஏவிவிட்டதும்...இன்னும்...தொடர்வதும் நம் அனுபவம்.
மீட்டெடுக்க வேண்டிய உயர் அரசியல் சமூக பண்பாட்டு வேர் களை இச்சம்பவங்கள் நமக்கு நினை வூட்டவில்லையா? (தீக்கதிர் வரலாற்றுச் சுவடு பகுதியில் இடம்பெற்ற கட்டுரை )

செவ்வாய், 12 அக்டோபர், 2010

அயோத்தி தீர்ப்பும் சங்பரிவாரமும் -அசோகன் முத்துசாமி

பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்கிற வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு எப்படி பார்த்தாலும் சங்பரிவாரத்திற்குச் சாதகமானது தான். முழு வெற்றி இல்லை என்றாலும் அவர்களுக்கு இது வெற்றிதான்.

யாருக்கும் வெற்றியோ தோல்வியோ இல்லை என்று ஆர்எஸ்எஸ்-ஸின் சர்சங் சாலக் மோகன் பகவத் கூறியிருக்கின்றார். தீர்ப்பு வேறு மாதிரி வந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார் என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் தேவையில்லை. ஏனெனில், அயோத்தியில் ராமருக்குக் கோவில் கட்ட உதவுவதன் மூலம் முஸ்லிம்கள் தங்களது தேசபக்தியை நிரூபிக்க வேண்டும் என அவர் ஏற்கனவே கூறியிருக்கின்றார் (தி ஹிந்து, 16.9.10). தொடர்ந்து பல காலமாக சங்பரிவாரம் அதைக் கூறிக் கொண்டேதான் இருக்கின்றது.

சங்பரிவாரங்களுக்கு உதவுவதுதான் தேசபக்தி என்றால், அதன் உள்ளிடை பொருள் என்ன என்பதை யோசிக்க வேண்டும். இது முஸ்லிம்களுக்கு எதிரானது மட்டுமல்ல. பொதுவாக, கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட மதச் சிறுபான்மையினருக்கும், மதச்சார்பற்ற ஜன நாயக சக்திகளுக்கும், எந்த மதப்பற்றும் இல் லாத பகுத்தறிவுவாதிகளுக்கும் எதிரானது. ஏனெனில், இவர்கள் அனைவருமே-இவர் களில் பிறப்பால் இந்துக்களாக உள்ளவர் களும் அடங்குவர்-சங்பரிவாரத்தின் வகுப்பு வாதத்திற்கு எதிரானவர்கள். சங்பரிவாரம் மசூ தியை இடித்ததை எதிர்ப்பவர்கள். மதச்சார் பற்ற தேசியத்தை வலியுறுத்துபவர்கள். பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என்பது சங்பரிவாரம் கூறு வது போல் அனைத்து இந்துக்களின் கோரிக்கை அல்ல.

ஆனால், இதை இந்துக்களுக்குக் கிடைத்த வெற்றி என்று பிரவீன் தொகாடியா கூறியிருக் கின்றார். ‘இந்த தீர்ப்பு கடவுள் ராமருக்குக் கிடைத்த வெற்றி. சர்வதேச அளவில் 100 கோடி இந்துக்களுக்குக் கிடைத்த வெற்றி’ என்று துள்ளிக் குதித்துள்ளார் (தினமணி, 1.10.10).

இந்து மகாசபை மற்றும் ராமஜென்ம பூமி அறக்கட்டளை சார்பாக வழக்காடிய வழக்கறி ஞர்கள், தீர்ப்பு வெளியானபோது வெற்றி என கைகைளை ஆட்டியதை தொலைக் காட்சி களில் பார்த்தோம். போதாக்குறைக்கு சில சாமியார்கள் கைகளை உயர்த்தி தங்களது மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் புகைப்படங் களும் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. உத்தரப் பிரதேசத்தின் பல இடங்களில் விஸ்வ இந்து பரிஷத்தினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடியுள்ளனர். அரியானா மாநிலம் பிவானி பகுதியில் விஎச்பி வெற்றி ஊர்வலம் நடத்தியிருக்கின்றது. வேறு பல இடங்களி லும் இப்படி ஊர்வலங்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்து கொண் டிருக்கின்றன.

தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக தொண்டர்கள் இனிப்பு வழங்கிக் கொண் டாடியுள்ளார்கள். ராமர் பிறந்ததும், பிறந்த இடமும் இந்த தீர்ப்பினால் உறுதிப்படுத்தப் பட்டுள்ளதால், ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று தமிழக சங்பரிவாரிகள் குதூ கலித்துள்ளனர். மசூதி இடிப்புப் புகழ் உமாபாரதி, இது தன் வாழ்வின் மகிழ்ச்சியான தருணம் என்று தெரிவித்துள்ளார். இந்த வெற்றியைக் கொண்டாடுவதில் நிதானமாகச் செயல்பட வேண்டும் என்று நரேந்திர மோடி கூறியுள்ளார். மொத்தத்தில் சங்பரிவாரத்தின் பல பிரிவுகளின் தலைவர்களும் வெற்றிச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருக்கின்றனர்.

இது ஒரு சமரசத் தீர்ப்பு என்று பலர் கருதிக் கொண்டிருக்கின்றனர். மசூதி இருந்த இடத்தை மூன்றாகப் பிரித்து, வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று தரப்பிற்கும் சமமாகப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், மூன்றில் இரண்டு பகுதி அந்த இடத்தில் ராமருக்குக் கோவில் கட்ட வேண்டும் என்கிறவர்களுக்குப் போகின்றது. அப்போதும் சங்பரிவாரம் சமாதானமடையவில்லை. ஒரு பக்கம், அனை வரும் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண் டும் என்கிறது. மறுபக்கமோ, நீதிமன்றத் தீர்ப்பை ஏற்காமல் மேல்முறையீடு செய்யப் போவதாகக் கூறுகின்றது. அல்லது சமரசப் பேச்சு வார்த்தை நடத்தி சன்னி வக்பு வாரி யத்திற்கு என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள மூன் றில் ஒரு பாகத்தை அபகரிக்க முயற்சிக்கின்றது.

‘தீர்ப்பு வெளியாகும் முன், நீதிமன்றம் என்ன தீர்ப்பளித்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மன் மோகன் சிங் உள்பட பலர் அறிவுரை வழங் கினார்கள். இப்படி மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கியவர்கள் இந்த தீர்ப்பை மதிக்க வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று இனி நாட்டில் மதமோதல்கள் ஏற்படாத வகையில் அனைத்து தரப்பினரும் சேர்ந்து அயோத்தி யில் ராமருக்கு ஆலயம் அமைக்க வேண்டும். அதுவே பாஜகவின் இலக்கு’ என்று மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார் (தினமணி, மேகு இதழ்).

கோவில் கட்ட அனுமதிக்கவில்லை என் றால் மதக்கலவரங்கள் நடக்கும் என்பது இதன் உட்பொருள் என்பதைக் கூற வேண் டியதில்லை.

மக்களின் மத நம்பிக்கை விஷயத்தில் நீதிமன்றம் எப்படித் தலையிட முடியும், எப்படி தீர்ப்பு வழங்க முடியும் என்றவர்கள்தான் இவர்கள். தங்களுக்கு எதிராக இருந்தால் தீர்ப்பை ஏற்க மாட்டோம் என்றவர்கள்தான் இவர்கள். மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று பிரதமர் மன் மோகன்சிங் கூறியதை பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் ‘வெட்கக்கேடு’ என்று வர்ணித்தார் (தி ஹிந்து, 30.9.10).

மறுபக்கமோ, மூன்றாகப் பிரித்ததை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக இந்து மகாசபை தெரிவித்துள்ளது. அதாவது அந்த இடத்தை மொத்தமாக தங்களிடம் கொடுக்க வேண்டும் என்று முறையிடப் போகின்றார்கள். அத்துடன் மசூதி இருந்த இடத்தில் ‘பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டுவதற்கு’ இந்த தீர்ப்பு வழிவகுத்துள்ளது என்று சங்பரிவாரத் தலைவர்கள் கூறிக் கொண்டிருக்கின்றனர். பிரம்மாண்ட என்கிற சொல்லைக் கவனிக்கவும். ஒரு ஏக்கருக்கும் குறைவான இடத்தில் எப்படி பிரம்மாண்ட மான கோவில் கட்டுவார்கள்? அல்லது கோவில் கட்ட வேண்டும் என்று நீண்ட கால மாகக் கூறிக் கொண்டிருக்கும் நிர்மோஹி அகாடா என்கிற அமைப்பிற்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ள ஒரு பாகத்தையும் சேர்த்தால் கூட இரண்டு ஏக் கருக்கும் குறைவாகத்தான் வரும். அதில் பிரம் மாண்டம் என்பது சன்னி வக்பு வாரியத்திற்கு ஒதுக்கப்படும் இடத்தையும் சேர்த்தால்தான் சாத்தியம் என்பதை மறக்க வேண்டாம். இன் னும் சொல்லப் போனால் சங்பரிவாரங் களுக்கு அதுவும் போதாது. பக்கத்தில் இருக் கும் இடத்தையும் சேர்த்து குறிவைப்பார்கள்.

“எங்களது நிலை சரியென்று நிரூபண மாகியுள்ளது. ராமர் சிலை இருக்கும் 110 அடி நீளமும் 90 அடி அகலமும் கொண்ட நிலம் ராமர் பிறந்த இடம் என்று தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது. இது ஒரு பிரம்மாண்ட கோவி லுக்கு வழிவகுத்துள்ளது. பிரம்மாண்டமான கோவிலுக்கு சர்ச்சைக்குரிய இடத்தைச் சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலம் எங்களுக்குத் தேவைப்படுகின்றது. அதில் ஒரு பகுதியை யாருக்காவது விட்டுக் கொடுப்பது என்கிற கேள்விக்கு இடமிருக்கிறதா என்ன?’’ என்று தொகாடியா கேட்கின்றார். (பிரன்ட்லைன், அக்.22, 2010).

சங்பரிவாரத்தைப் பொறுத்தவரையில் வழக்கில் வெற்றியோ, தோல்வியோ அதை தனது இந்து வகுப்புவாத நிகழ்ச்சி நிரலுக்குச் சாதகமாக்கிக் கொள்ளும். தீர்ப்பு அவர்களுக்கு எதிராக வந்திருந்தால் கோவில் கட்டுவதை நீதிமன்றம் தடுக்கின்றது, முஸ்லிம்கள் தடுக் கின்றார்கள் என்று கலவரம் செய்திருப்பார்கள். இப்போது சன்னி வக்பு வாரியம் அதன் பங்கை விட்டுக் கொடுக்கவில்லை என்றால் முஸ் லிம்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தை மேலும் தீவிரமாக நடத்தத் தயங்காது. அதையே அரசாங்கத்திற்கு எதிரான கலவரமாகவும் மாற்றுவார்கள். ஏனெனில், அந்த 2.77 ஏக்கர் நிலம் இப்போது மத்திய அரசாங்கத்தின் வசம்தான் இருக்கின்றது.

எப்படி பார்த்தாலும் இந்த தீர்ப்பு பிரச் சனையை தீர்க்கவில்லை. சங்பரிவாரத்தின் கைகளை வலுப்படுத்தியிருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும்.

சிலர், பிரச்சனையை இத்துடன் விட்டு விட்டு மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பார்க்க வேண்டும், வாழ்க்கையில் எவ்வள வோ இருக்கின்றது என்கிறார்கள். ஆம், அது சரிதான். வாழ்க்கையில் இதைவிட எவ்வள வோ முக்கியமான பிரச்சனைகள் இருக் கின்றன. சங்பரிவாரமும் அப்படியே கூறி யிருந்தால் பரவாயில்லை. முஸ்லிம்கள் கடந்த காலத்தை மறந்துவிட வேண்டும் என்கிறார், மோகன் பகவத். மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார், அங்கு அவருக்கு ஒரு கோவில் கட்டப்பட்டிருந்தது, அதை இடித்துவிட்டுத்தான் பாபர் மசூதி கட்டப்பட்டது, இந்த வரலாற்றுத் தவறை சரி செய்ய மசூதியை இடித்துவிட்டுக் கோவில் கட்ட வேண்டும் என்று இந்துத்துவவாதிகள் கூறிய போதெல்லாம் மதச்சார்பற்ற சக்திகள் அந்தப் பொய்யை ஏற்காதபோதும், கடந்த காலத்தை மறந்துவிடுங்கள் என்று மன்றாடி னார்கள். அப்போதெல்லாம் சங்பரிவாரம் அவர் களைப் பழித்தது. தேசத் துரோகிகள் என்றது. மரணதண்டனை விதிக்கப்படும் என்றது. இப்போது தங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்த வுடன், கடந்த காலத்தை மறக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பிரிவின ரான முஸ்லிம்களை வலியுறுத்து கின்றது. சங்பரிவாரம் ஏன் அதையே செய்யக் கூடாது என்று நீதியரசர் ராஜேந்திர சச்சார் கேட் கின்றார்.

அயோத்தி: கேள்விகளை எழுப்பும் உயர்நீதிமன்ற தீர்ப்பு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட லக்னோ பெஞ்ச், பாபர் மசூதி/ராமஜன்மபூமி நிலம் யாருக்குச் சொந்தம் என்று கடந்த அறு பதாண்டு காலமாக நடைபெற்று வந்த வழக்கில் தற்போது தீர்ப்பினை அளித் திருக்கிறது. கற்றறிந்த மூன்று நீதிபதி களும் தனித்தனித் தீர்ப்புரைகளைக் கொடுத்திருக்கிறார்கள். அவை ஆயிரக் கணக்கான பக்கங்களுக்கு வருகின்றன. தீர்ப்புரையின் சாரம் என்பது சட்டரீதியாக இருப்பதைவிட அரசியல்ரீதியாக இருப்ப தாகவே பலரும் கருதுகின்றனர். தீர்ப்பு பல கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக் கிறது. ஒரு நவீன மதச்சார்பற்ற ஜன நாயகக் குடியரசாக விளங்கும் நம் போன்ற தொரு நாட்டில் அத்தகைய கேள்வி களுக்கு விடை காண்பதற்கு உரிய இடம் உச்சநீதிமன்றம்தான். அங்கே உயர்நீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக சட்டரீதியான மேல்முறையீடு செய்வதுதான்.

இந்தத் தாவாவின் மீது தீர்வு ஏற் படுவதற்கு ஒரே வழி உச்சநீதிமன்றம் அளித்திடும் தீர்ப்புதான் என்பது மக்க ளால் அநேகமாக ஏற்றுக்கொள்ளப்பட் டிருப்பதைக் காண முடிகிறது. இது வர வேற்கத்தக்க ஒன்று. நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின்படியும் இது மிகவும் சரியானதேயாகும்.

ஆயினும், நீதிமன்றங்களின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைகளை, நீதிமன்றங்கள் நம்பிக்கையின் அடிப் படையில் அளித்திடும் தீர்ப்புகளை எல் லாம் அப்படியே கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக்கொண்டுவிடுவார்கள் என்று தவறாக வியாக்கியானம் செய் திடக்கூடாது. ஆனால் அவ்வாறுதான் திருவாளர் அத்வானி - நாட்டில் மதக் கலவரங்கள் மூலம் ரத்தக்களறியை ஏற் படுத்தி அதன் உச்ச கட்டமாக பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கும் காரணமாக இருந்த அத்வானி - ‘‘இப்போதைய நிலைமை என்பது நம்பிக்கை (எதிர்) சட்டம் என்பதல்ல, ‘மக்கள் நம்பிக்கை’ என்பது சட்டரீதியாக உயர்த்திப்பிடிக்கப் பட்டிருக்கிறது’’ என்று கூறக்கூடிய அளவிற்கு கொண்டு சென்றிருக்கிறது (“கூாந ளவைரயவiடிn nடி டடிபேநச ளை கயவைா எள டயற, வை ளை கயவைா ரயீாநடன லெ டயற”). அலகாபாத் உயர்நீதிமன்றம், பிரச்சனைக்குரிய இடம் யாருக்கும் சொந்தம் என்பது குறித்து தாக் கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களின் மீது தீர்ப்பு வழங்க வேண்டி இருந்தது. இந்த மனுக்கள் காலாவதியாகிப் போய் விட்டதாகக் கூறி ( வiஅந யெசசநன) தள்ளு படி செய்தபின், லக்னோ பெஞ்ச் இந்த இடம் குறித்து ‘நம்பிக்கை’ (‘கயவைா’ யனே ‘நெடநைக’) அடிப்படையில் இப்போது இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இது மேலும் பல ஆழமான வினாக்களை எழுப்பி யுள்ளது. உதாரணமாக, அந்த இடத்தி லிருந்த பாபர் மசூதி இடிக்கப்படாமல் இருந்திருந்தால், தீர்ப்பு இப்போது வந்திருப்பதுபோலவே வந்திருக்குமா? நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்யப் பட்ட மனுக்கள் அனைத்தும் பாபர் மசூதி இடிக்கப்படாதிருந்த சமயத்தில் பதிவு செய்யப்பட்டவைகளேயாகும். இப்போது இவ்வாறு வந்திருக்கும் தீர்ப்பானது, பாபர் மசூதி இடிக்கப்பட்டதை நியாயப்படுத்து கிறதா? பாபர் மசூதி இடிப்புச் சம்பவ மானது, சர்வதேச அளவில் கண்டிக்கப் பட்டதொரு நடவடிக்கையாகும். நாட்டின் மதச்சார்பின்மை என்னும் சித் திரத்தையே உருக்குலைத்ததொரு செய லாகும்.

அதேபோன்று, அயோத்தி காவல் நிலையத்தின், காவல் உதவி ஆய்வாள ராக இருந்த ராம் துபே என்பவர், ‘1949 டிசம்பர் 22-23 இரவில் பாபர் மசூதியின் மத்திய மாடத்திற்குக் கீழே, ராமன் மற்றும் சீதையின் சிலைகளை 50-60 பேர் கொண்ட குழு ஒன்று கள்ளத்தனமாக வைத்தது’ என்று ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தாரே, அது என்னவாயிற்று? இதன்பின் நடைபெற்ற நிகழ்வுகளை உச்சநீதிமன்றம், தன்னு டைய இஸ்மாயில் பரூக்கி (எதிர்) இந்திய அரசு (1994) என்னும் வழக்கின் தீர்ப்பில் விவரமாகப் பதிவு செய்திருக்கிறது. நீதிமன்றங்கள் ‘நம்பிக்கை’ (‘கயவைா’ யனே ‘நெடநைக’) அடிப்படையிலான விஷயங் களில் தீர்ப்பு வழங்க முடியுமா?

தீர்ப்பு வெளியான பின்னர், முஸ்லிம் களுக்கு அளிக்கப்பட்டுள்ள மூன்றி லொரு பகுதியையும் அவர்கள் விட்டு விட்டு சென்றுவிட வேண்டும் என்றும், அந்த இடத்தில் ‘பெரிய அளவில் கோவில் கட்ட’ அனுமதித்திட, நட்புட னான சமரசத்துடன் (சநஉடிnஉடையைவiடிn) முன் வர வேண்டும் என்றும் நிர்ப்பந்தம் அளிப் பது தொடங்கிவிட்டது. தென் ஆப்பிரிக் காவில் அனைவராலும் வெறுத்து ஒதுக் கப்பட்ட இனஒடுக்கல் ஆட்சி தோற் கடிக்கப்பட்டபோது, நெல்சன் மண் டேலா அரசாங்கத்தின் முன் இதுபோன்ற தொரு பிரச்சனை எழுந்தது.

மனிதாபிமானமற்ற முறையில் குற்றங் களைப் புரிந்திட்ட கயவர்களுக்கும், அவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே சமரசம் காணும் பிரச்சனை முன்வந்தது. மிக நீண்ட நெடிய விவாதத் திற்குப்பின், ஒவ்வொரு நிகழ்விலும் எது நீதியோ அதுவே சமரசத்திற்கு முன் நிபந்தனையாக இருக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு தான் அங்கே உண்மை மற்றும் சமரச ஆணையம் (கூசரவா யனே சுநஉடிnஉடையைவiடிn ஊடிஅஅளைளiடிn) அமைக்கப்பட்டது.

உண்மை என்னவெனில், பாபர் மசூதி அந்த இடத்தில் நானூறு ஆண்டுகளுக் கும் மேலாக இருந்து வந்தது. உயர்நீதி மன்றம், ராமன் அந்த இடத்தில்தான் பிறந் தான் என்று நம்புகிற மக்களின் ‘நம் பிக்கை’யினைச் சார்ந்து தீர்ப்பளித் திருக்கிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக தனியே வழக்குகள் நிலுவை யில் இருந்து கொண்டிருக்கின்றன. இவற் றின் மீதும் நீதி வழங்கப்பட வேண்டும்.

உச்சநீதிமன்றம் தற்போது சட்டத் தின் ஆட்சியின்படி (சரடந டிக டயற) மக்களின் ‘நம்பிக்கை’ யை உயர்த்திப்பிடித்து நீதி வழங்கிட வேண்டிய நிலையில் இருக் கிறது. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நீதிமன்றத்தை அணுகுவதே ஒரே தீர்வு என்று மீண்டும் வலியுறுத்திக் கூறு கிறோம். எனவே, இதற்கிடையில் முஸ் லிம் மக்களை வலுக்கட்டாயமாக உயர் நீதிமன்றம் மசூதி கட்டுவதற்காக அளித் துள்ள மூன்றிலொரு பகுதியிலிருந்தும் விரட்டியடிக்க நடைபெற்று வரும் முயற்சிகளை வலுவிழக்கச் செய்ய வைப் பது அனைவரின் கடமையுமாகும். உச்ச நீதிமன்றம், நவீன இந்தியாவின் மதச் சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களை வலுவிழக்கச் செய்யும் எவ்விதமான நிர்ப் பந்தங்களுக்கும் இடம் அளித்திடாது நீதி வழங்கிட அனுமதிக்கப்பட வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)

இங்கிலாந்திலும் தீண்டாமை நோயா? --தே.இலட்சுமணன்

இந்திய நாடு உலக அரங்கில் மெல்ல மெல்ல ஏறி வருகிறது; முன்னேறி வருகிறது என வாய் பிளக்கக் கூவினாலும், அதன் உடம் பில் சிக்கி இருக்கும் சாதி நோய், தீண்டாமை எனும் நோய் நீடிக்கின்ற வரை இந்தியாவின் முன்னேற்றம் என்பது முழுமையற்றதுதான். என்றைக்கு இருந்தாலும், அது ஓர் அவ மானம்தான்.

அந்த சாதி சனியன் இந்தியாவோடு நின் றாலும் பரவாயில்லை, பிழைக்க ஓடும், அதி லும், உழைத்துப் பிழைக்க ஓடும் வெளிநாடு களிலும் அதிலும் குறிப்பாக ஐரோப்பிய நாடு களுக்கும் அந்தத் தீண்டாமை நோயினை உடன் கட்டிக் கொண்டு ஓட வேண்டுமா? சாதி என் றால் என்ன என்று தெரியாத நாடுகளிலும், அந்த நாட்டு மக்களுக்குப் பிறவிலேயே சாதி பட்டயத்தோடு பிறக்கும் சமூக வழக்கம் ஒன்று இருக்கிறது என்பது பற்றித் தெரிய சமூ கத்தில், இந்திய மக்கள் அங்கு போய் தங்க ளுக்குள் சாதி பேசி, தீண்டாமை வழுவி கேவ லப்பட்டு போவது அவமானத்திலும் அவமா னம், பிழைக்கச் சென்ற இடத்திலும் சாதி வேற்றுமை பேசி இந்தியாவை இழிவுபடுத்து கிறார்கள். அண்மையில் வந்த இப்படிப்பட்ட ஒரு செய்தி நம்மையெல்லாம் அதிர்ச்சிக்குள் ளாக்குகிறது.

உலக நாடுகளில் மூன்றில் ஒரு பங்கை, தன் ஆதிக்கத்தின் கீழ் அடக்கி காலனி நாடு களாக வைத்து ஆண்ட, தொழிற் புரட்சி நடத்தி, உலக வர்த்தகத்தில் உச்சக் கட்டத் தில் கொடிக்கட்டி வாழ்ந்த இங்கிலாந்து நாட் டில் தான் - ஆங்கிலேயர்கள் வாழும் அந்த வெள்ளையர்கள் நாட்டில்தான் நம் இந்தியர் கள், சாதி பேதம் பேசி தீண்டாமை அனுஷ் டித்து அசிங்கப்படுத்தி வருகிறார்கள்.

இங்கிலாந்தில் வந்தேறிகளாக வாழும் மொத்த இந்தியர்களில் இரண்டு லட்சத்துக் கும் மேற்பட்ட தலித்துகளும் வாழ்கிறார்கள், பல ஆண்டுகளாக வாழ்கிறவர்களில் வெள்ளை யன் நம் நாட்டை ஆண்ட காலத்திலேயே குடி யேறிச் சென்ற இந்திய நாட்டவர்களில் தலித் துகளும் அடங்குவர். இரண்டாம் உலக யுத்தத் தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக ஏராளமான தலித்துகள் இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றியதில், அவர்களுக்கு இங் கிலாந்தில் குடியேற கூடுதலாக வாய்ப் பையும் கொடுத்தது.

அங்கு நீண்ட நாட்களாக நீடிக்கும் பிரச்ச னை என்னவென்றால், தங்களை மேல்தட்டு இந்தியர்களாக நினைத்துக் கொண்டு, அங்கு வாழும் இந்தியர்களை, தலித்துகளை ஓரங் கட்டுவதும், ஒடுக்குவதும் பல வடிவங்களில் நடந்தேறுகின்றன. நம்மவர்களாக ஒரு பகுதி யினர் தொழில் அதிபர்களாக, வர்த்தகர்களாக, நடுத்தர வியாபாரிகளாக, தொழில் வல்லுநர் களாக, மருத்துவர்களாக, வழக்கறிஞர்களாக வாழ்கிறார்கள். மற்றொரு பகுதியினர் ஆலைத் தொழிலாளர்களாக, வாகன ஓட்டிகளாக, கட்டி டப் பணியாளர்களாக, கூலித் தொழிலாளர்க ளாகக் கூட வாழ்கிறார்கள். இங்கிலாந்து நாட் டின் குடி உரிமை பெற்றவர்களாகவும் வாழ்கி றார்கள். வாழ்க்கையில் என்ன மாற்றம் ஏற்பட் டாலும் சாதிப் பித்து மட்டும் அவர்களை விட்டு வைக்கவில்லை. “கோட்டு”, “சூட்டு”, “டை”, “தொப்பி”, “ஷூ” என வேஷம் மாறினாலும், சாக்கடையாம் சாதியை மட்டும் மறந்து விடா மல் வாழ்கிறார்கள். அங்கேயும் தலித்துகள் நீதி கேட்டு, நியாயம் கேட்டு, உரிமை கேட்டு, போராடுகிறார்கள். தாங்கள் அந்நிய நாட்டிலும் அவமானப்படுத்தப்படுவதை, அதிலும் சொந்த நாட்டு மக்களாலேயே கேவலப்படுத்தப்படு வதை எதிர்த்துப் போராடுகிறார்கள்.

ஒரு இந்திய தலித் பெண்மணி வானொலி நிலையத்தில் பணிபுரிகிறார். அது ஓர் இந்திய மேல் சாதியைச் சேர்ந்தவர் நடத்தும் தனியார் வானொலி நிலையம். அந்த அம்மையார் தலித் என்று தெரிந்த உடன், நிலைய மேலாளர்- மேல்சாதியாளர், அந்த அம்மையாரை பதவி இறக்கம் செய்து விட்டார். இது என்ன கொடுமை?

ஒரு தனியார் பேருந்து நிறுவனம் - இந் தியரால் நடத்தப்படும் நிறுவனம் - நிறுவனச் சட்டத் திட்டங்களை மாற்றி விட்டது. அதன் படி ஒரு மேல்சாதி பேருந்து ஆய்வாளர், ஒரு தலித் ஓட்டுநராக இருந்தால் அவரோடு இணைந்து பணி செய்ய இயலாது என முடிவு எடுத்து விட்டார்! நிறுவன சட்டம் அந்த மறுப் புக்கு வழி செய்து கொடுத்துள்ளது. இங்கிலாந்து நாட்டில்தான் இப்படி நடக்கின்றது. ஒரு மூதாட்டி தன்னைப் பராமரிக்க ஒரு நபரை நிய மித்துக் கொண்டார் (ஊயசந வயமநச), ஆனால் அந்த மேல்சாதி இந்தியர், மூதாட்டி தலித் என்று தெரிந்த பிறகு அவரை சிறுமைப்படுத்த ஆரம்பித்து விட்டார், அசட்டை செய்ய ஆரம் பித்து விட்டார். இப்படிப்பட்ட இழிவுகள் - அவமானங்கள் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சி களாக ஆகிவிட்டன. ஆனால் இவைகளை வெளியே சொல்லி பிரச்சனைகளை பெரிதாக் கிட பாதிக்கப்பட்டவர்கள் விரும்பவில்லை, மனம் புழுங்கி வேதனைப்படுகிறார்கள். எல் லாவற்றிற்கும் அமைப்பு என்ற ஒன்று இருக்க வேண்டுமல்லவா? “ஊயளவந றுயவஉா ரு.மு” என்ற பெயரில் உள்ள மிகப்பழமை வாய்ந்த தலித் பிரச்சாரக்குழு மட்டும் அன்றாடம் நடக்கும் இந்த இழிவு, அவமதிப்பு, புறக்கணிப்புக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த சாதிப் பாகுபாட்டுக்கு எதிராக இங்கிலாந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென் றும் கோரி வருகிறது. ஆனால் இங்கிலாந்து சட்டத்தில் “சாதிப் பாகுபாடு” ஒரு கொடிய தண்டனைக்கு உரிய செயல் எனப் பார்க்கும் விதிமுறை இல்லை. அவர்கள் நாட்டில் சாதி பாகுபாடு இல்லை; ஆகவே அது சட்டத்தில் இடம் பெற வாய்ப்பில்லை. ஆனால் இதை இனப்பாகுபாடு (சுயஉந டுயறள) சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தலித் விழிப்புக்குழு பிரிட்டிஷ் அரசை வற்புறுத்தி வருகிறது. இதை ஒரு இனப்பாகுபாடாகவே (சுயஉளைஅ) பார்க்க வேண்டும் என வற்புறுத்தப்படுகிறது.

பிரிட்டிஷ் அரசு சாதி வித்தியாசம் பார்ப் பதை இன வித்தியாசம் பார்ப்பது போன்ற குற் றம் என சட்டத்தில் திருத்தம் கொண்டு வந் தால் ஐரோப்பியாவிலேயே பிரிட்டிஷ் அரசு தான் முதன் முதலாக அப்படி சட்டத்திருத் தம் கொண்டு வந்த நாடாக இருக்க வாய்ப்பு உண்டு! அநேகமாக அப்படி திருத்தம் வர லாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இங்கிலாந்தில் அரசு புதிதாக கொண்டு வந்துள்ள சமத்துவ சட்டத்தின் (நுளூரயடவைல ஹஉவ) படி சாதியையும், இனச் சட்டத் தின் ஒரு பகுதியாக பிரகடனம் செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளதாகவும், இதற்கென்று மீண்டும் நாடாளுமன்ற ஒப்புதல் பெற வேண் டியதில்லை என்ற வாதமும் வைக்கப் படுகிறது.

இரண்டு, மூன்று இனப் பிரிவு சட்டத்தில் குறிக்கப்பட்டுள்ளன. இந்த இனப்பிரிவு மக்க ளை பாகுபாடாகப் பார்ப்பது சட்டப்படி குற்றம். அதே போல் சாதி ரீதியாக பாகுபாடு பார்ப்பதும் குற்றம் என அதை இனப்பிரிவில் கொண்டு வர ஒரு சிறு திருத்தம் கொண்டு வந்தால் போதும் என்றும் வியாக்கியானம் செய்யப்படுகிறது.

ஆனால் நம் இந்திய அரசு சாதி வேறு, இனம் வேறு, ஆகவே அதில் இதை இணைக் கக் கூடாது என ஆட்சேபணை செய்யுமோ என அங்குள்ள தலித்துகளுக்கு ஐயமும், அச் சமும் உருவாகியுள்ளது. இந்த அச்சத்துக்குக் காரணமே, சில வருடங்களுக்கு முன்னால் உலக அளவிலான இனப்பாகுபாடு ஒழிப்பு மாநாடு தென் ஆப்பிரிக்காவில் நடந்த போது, இந்தியாவில் தீண்டாமை பாகுபாட்டையும் அதோடு இணைத்து பரிசீலிக்க வேண்டும், அந்த மாநாட்டில் இந்திய பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று குரல் எழுந்த போது அன்றைய இந்திய அரசு அதற்குக் கடு மையான ஆட்சேபணை தெரிவித்தது. தீண் டாமை, இனப்பாகுபாடு போன்ற அவ்வளவுக் கொடுமையானது அல்ல என்று வியாக்கியா னம் செய்யப்பட்டது. நம் கருத்து இனப்பாகு பாடு கொடுமைகளை விட தீண்டாமை என் பது அதிகபட்சக் கொடுமையானது என்பது தான். எனவே தான் இங்கிலாந்தில் வாழும் தலித் துகளுக்கு இயற்கையாகவே இந்திய அரசைப் பற்றிய இந்த அச்சம் கிளம்பி உள்ளது.

ஆயிரக்கணக்கான குடி மக்கள் (தலித்துக் கள்) பணி இடங்களில், பள்ளிகளில், மருத்து வமனைகளில், அறுவை சிகிச்சை நடக்கும் போதும் கூட பாகுபாடுகள் காட்டப்படுகின்ற னர். 45 சதவிகித தலித்துகள் அவர்களுடன் பணியாற்றும் மேல்சாதி தொழிலாளர்களால் வேற்றுமையுடன் நடத்தப்படுவதாகவும் கேவலமாக சாதி பெயரைச் சொல்லி அவமா னப்படுத்தப்படுவதாகவும் விபரங்கள் கிடைத் துள்ளன. 9 சதவிகித மக்கள் தலித்துகளாக இருப் பதாலேயே பதவி உயர்வு மறுக்கப்பட்டவர் களாக, பத்து சதவிகித மக்கள் குறைந்த ஊதி யம் பெறுவதாக புகார்கள் கிடைத்துள்ளன. சிலர் பயமுறுத்தலுக்கும் ஆளாகிறார்கள்.

கோவென்டரி எனும் பல்கலைக்கழகத் தில் பணிபுரியும் சமூக மற்றும் சாதியின் ஆய்வு மைய ஆய்வாளர் டாக்டர் குர்னாம் சிங் “சாதி குரோதம் அன்றாட நிகழ்ச்சிகளாக நிறைவேற்றப்படுகின்றன. அவர் மொழியி லேயே சொல்ல வேண்டுமென்றால் “நிதம் நடக்கும் நிஜம்” என்பதுதான் சாதிப் பாகுபாடு என்கிறார். சாதி வேற்றுமைகளின் வீச்சை துல்லியமாக அறிய மேலும் நுண்ணிய முயற் சிகள் தேவைப்படுகிறது, நாளுக்கு நாள் இந்த வன்முறை அதிகமாகி வருகிறது என நொந்த உள்ளத்தோடு உரைக்கிறார்.

தலித் அமைப்புகள், இங்கிலாந்து அரசு சாதகமான முடிவு எடுக்கும், சட்ட வரைவு அமலுக்கு வரும், அதைப் பெருவிழாவாகக் கொண்டாடத் திட்டம் தீட்டி வருகிறார்கள். ஆனால் இன்னொரு பக்கம் அச்சமும் அலைமோதுகிறது. இந்திய அரசு இந்தச் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால், பிரிட்டிஷ் அரசு பின்வாங்கி விடுமோ என வும் அஞ்சுகிறது. ஆனாலும் என்ன? இந்திய அரசின் ஆட்சேபணையால் சட்டம் ஆகாமல் (தீண்டாமைக்கு எதிராக) போனால், அடுத்து ஐரோப்பிய மனித உரிமை நீதி மன்றத்திற்கு போகவும் தலித் அமைப்பு (ஹவேi உயளவந னுளைஉசiஅiயேவiடிn ஹடடயைnஉந) தயாராக உள்ளது.

(பி.கு) இந்தக் கட்டுரை பத்திரிகையாளர் அசன் சுரூர் என்பவர் இந்து (3.9.2010) பத்திரிகையில் எழுதிய கட்டுரையைத் தழுவியது.

சனி, 9 அக்டோபர், 2010

ஊக பேர வர்த்தகத்தைத் தடை செய்க - -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

நாடாளுமன்றத்தின் இரு அவை களிலும் ‘‘பணவீக்கத்தின் எதிர்மறை விளை வுகளிலிருந்து சாமானியர்களைக் காப்பாற்றிட அரசை வலியுறுத்தி அவைத் தலைவர்களே கொண்டு வந்த தீர்மானத்தின் மீது முன்னெப் போதும் இல்லாத அளவிற்கு இரு அவைகளி லும் விவாதங்கள் நடைபெற்ற போதிலும், அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் உயர்ந்து கொண்டிருப்பது தொடர்கிறது. சாமா னிய மக்களின் வாழ்க்கைத்தரம் மேலும் மேலும் கடுமையான முறையில் சீர்குலைந்து கொண்டிருக்கிறது.

அரசாங்கம், பணவீக்க அட்டவணைக் காக புதிதாக ஒரு தொகுப்பை 2004-05ஆம் ஆண்டை ‘அடிப்படை ஆண்டாகக்’ கொண்டு, வெளியிட்டிருக்கிறது. புள்ளிவிவரங்களில் அதிகமானவற்றை மறைக்கும் விதத்திலும், பொருளாதாரம் தொடர்பாக கவர்ச்சிகரமான சித்திரத்தை மக்களுக்கு வழங்குவதற்காகவும் அரசாங்கம் விலைவாசி அட்டவணை எண் களை அடிக்கடி மாற்றிக்கொண்டிருக்கிறது. ஆயினும், உணவுப் பணவீக்கம் 2010 செப்டம் பர் 4ந்தேதியுடன் முடிவடையும் வாரத்தில் 15.10 விழுக்காடு உயர்ந்திருக்கிறது, தொடர்ந்து மூன்று வாரங்களாக உணவுப் பணவீக்கத்தின் விகிதம் உயர்ந்து கொண்டிருக்கிறது. தானியங் களின் விலைகள் 7.16 விழுக்காடும், பருப்பு வகைகளின் விலை 6.10 விழுக்காடும் உயர்ந் திருக்கிறது. கோதுமை விலை 10.16 விழுக் காடும், அரிசி 5.74 விழுக்காடும் உயர்ந்திருக்கிறது. பால் 23.41 விழுக்காடும், காய்கறிகள் மற் றும் பழங்களின் விலைகளும் உயர்ந்திருக்கின்றன.

விலைவாசியைக் கட்டுப்படுத்திடக் கோரி நடைபெற்ற பல்வேறு எதிர்ப்பு நடவடிக் கைகளின் போதும், நாடாளுமன்றத்தில் நடை பெற்ற விவாதங்களின்போதும், நாம் முன் வைத்த பல்வேறு கோரிக்கைகளில், ஊக வணிகத்தின் மூலம் ஏற்படும் உணவுப் பண வீக்கத்தைத் தடுத்திட அத்தியாவசியப் பொருட்களின் மீதான முன்பேர/ஊக வர்த் தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்பதும் ஒன்றாகும். மத்திய நிதி அமைச்சர், பதில் அளிக்கையில், இப்பிரச்சனை ஆராயப்பட்டு, தேவைப்பட்டால், குறைந்தபட்சம் தற்காலிக மாகவாவது இத்தகைய நடவடிக்கை எடுக் கப்படும் என்று உறுதி அளித்தார். ஆயினும், இது தொடர்பாக இதுவரை உருப்படியான நடவடிக்கை ஒன்றும் எடுக்கப்படவில்லை.

இதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில் லை. ஏனெனில் இத்தகைய நடவடிக்கை யானது ஊக வர்த்தகத்தில் ஈடுபட்டு கொள்ளை லாபம் ஈட்டிக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களை நேரடியாகப் பாதிக்கும். இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்தில் முன் வைத்த வாதங்களையெல்லாம் அரசு கடந்த காலங்களில் எப்போதும் கண்டுகொள்ளவே இல்லை. ‘‘பணவீக்கத்திற்கு இவை காரணம் அல்ல’’ என்று கூறி நடவடிக்கை எதுவும் எடுக்காமல் மழுப்பிவிட்டது. ஆனால் நாம் முன்வைத்த வாதங்கள் மிகவும் சரி என்பதை ஐக்கியநாடுகள் ஸ்தாபனத்தின் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை உறுதிப்படுத்தி இருக்கிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் இது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு ஒரு குழுவை நிய மித்தது. அக்குழுவானது, ஐ.நா. சபைக்கு ஓர் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அக்குழு 2007 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் உலகம் முழுவதும் பல நாடுகளில் ஏற்பட்ட உணவு நெருக்கடியையும் அடிப்படை உணவுப் பொருள்களின் விலைகளில் ஊகவர்த்தகம் ஏற்படுத்திடும் தாக்கத்தையும் ஆய்வு செய்தது. பின்னர் அக்குழுவின் தலைவர், ‘‘விலைவாசி உயர்வுக்கும், அத்தியாவசிய உணவுப் பொருள்களின் கடும் விலை உயர் வுக்கும் ஊக வர்த்தகமே முக்கிய காரணி யாகும்’’ என்று கூறி இருக்கிறார்.

‘‘குறிப்பாக, உணவுப் பொருட்கள் மீதான சந்தைகளில், ‘விவசாய சந்தை அடிப்படை’ களில் சம்பந்தமே இல்லாத ஹெட்ஜ் நிதியங்கள் (ாநனபந கரனேள), பென்ஷன் நிதியங்கள் (யீநளேiடிn கரனேள), முதலீட்டு வங்கிகள் (inஎநளவஅநவே யெமேள) போன்ற பகாசுரக் கம்பெனிகள் பல புகுந் திருப்பது விலைகளைக் கடுமையாக உயர்த்தி யிருப்பதில் குறிப்பிடத்தக்க பங்கினைச் செய்திருப்பதாக நம்புவதற்குக் காரணமிருக் கிறது. பொருள்களின் விநியோகம் மற்றும் தேவை ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ண யம் செய்யப்பட்டுவந்த விலைவாசி முறையை இது மாற்றி அமைத்துவிட்டது. எனவே, மற் றொரு முறை, உணவுப்பொருள்களின் விலை களில் நெருக்கடி ஏற்படுவதற்கு முன் உலக நிதித்துறையில் அடிப்படை சீர்திருத்தம் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.’’

இதுதான் இந்தியாவிலும் நடந்திருக்கிறது. விலைகள் முன்னெப்போதும் இல்லாத அள விற்கு உயர்ந்திருப்பதற்கு இவைதான் காரணங்களாகும். விவசாயப் பொருட்களின் மீது ஊக வணிகத்தின் அடிப்படையில் நடை பெற்றுள்ள வர்த்தகத்தின் மொத்த மதிப்பு ஒவ் வோராண்டும் உயர்ந்துகொண்டே வந்திருக் கிறது. 2009 ஏப்ரல் 1ல் இருந்ததைவிட 2010 ஜனவரி 31ல் இது 102.59 விழுக்காடு அதி கரித்திருக்கிறது. சரியாக ரூபாய் மதிப்பீட்டில் சொல்வதென்றால், 10,13,379.97 கோடி ரூபாய்க்கு இது நடைபெற்றிருக்கிறது. இப்போது பொருட் கள் சந்தைக்கு வரும்போது இருக்கும் விலை யை விட விற்கும்போது அதிகமாக இருந்தால் தான் லாபம் ஈட்ட முடியும். விலைகள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருந்தால்தான் கொள்ளை லாபம் ஈட்டமுடியும். எனவேதான் முன்பேர வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் வர்த்தக சூதாடிகள் விலைகளை உயர்த்திக் கொண்டே இருக்கிறார்கள். அதன் காரணமாக மக்கள் அதிக விலைகொடுத்து பொருட்களை வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

இதேபோன்று உலக அளவில் 2007-08ஆம் ஆண்டில் விலைகள் உயர்ந்ததை ஐ.நா. அறிக்கை விவரிக்கிறது. ‘‘ஊக வர்த்த கம் உணவுப் பொருட்களின் சந்தைகளில் அனுமதிக்கப்பட்ட போதுதான் முதலாவதாக கடுமையான விலைவாசி நெருக்கடி ஏற்பட் டது’’ என்று அறிக்கை தெரிவிக்கிறது. 1998 இல் 440 பில்லியன் டாலர்களாக இருந்த அதன் மதிப்பு, 2002இல் 770 பில்லியன் டாலர்களாக அதிகரித்தது, பின்னர் அது 2007 ஜூனில் 7500 பில்லியன் டாலர்களாக தாவிக் குதித்தது.

அமெரிக்காவில் செயல்பட்டுவந்த லேமன் சகோதரர்கள் (டுநாஅயn க்ஷசடிவாநசள) நிறுவனம் திவாலாவதற்குச் சற்றுமுன் உணவுப் பொருட் களின் மீதான ஊக வர்த்தகம் குறித்து ஓர் ஆய்வை மேற்கொண்டது. 2003க்கும் 2008 மார்ச்சுக்கும் இடையே இது 1900 விழுக்காடு அதிகரித்திருப்பதை அது வெளிப்படுத்தியது. அமெரிக்க டாலர் மதிப்பில் இது 13 பில்லியன் டாலர்களிலிருந்து 317 பில்லியன் டாலர் களாகும். இந்தப் பின்னணியில்தான் வர்த்த கம் மற்றும் வளர்ச்சிக்கான ஐ.நா. மாநாடு (ருசூஊகூஹனு-ருnவைநன சூயவiடிளே ஊடிகேநசநnஉந டிn கூசயனந யனே னுநஎநடடியீஅநவே.) தன் 2009ஆம் ஆண்டு அறிக் கையில், ‘‘இவ்வாறு பொருட்கள் வர்த்தகத் தில் மிகப் பெரிய அளவில் நிதிமூலதனம் செலுத்தப்பட்டிருப்பதானது, பொருள்களின் விலைகளை நிர்ணயிப்பதில் பெரும் பங்காற்றி யுள்ளன. இதற்குமுன் விலைவாசியை நிர்ண யிப்பதில் இருந்த சந்தை அடிப்படைகளை எல்லாம் சம்பந்தமற்றவைகளாக்கிவிட்டன,’’ என்று குறிப்பிட்டிருக்கிறது.

இவ்வாறு ஊக வணிகத்தை விவரிக்கும் அறிக்கை மேலும், ‘‘பொருளை வாங்குபவர், எதிர்காலத்தில் அதற்கு மேலும் அதிக விலை கொடுக்க விருப்பத்துடன் இருக்கிறார் என் பதன் பொருள், எதிர்காலத்தில் அதன் விலை மேலும் உயரும் என்பதேயாகும். எனவே, எதிர் காலத்தில் பொருளின் விலை உயரும் என்று சொல்வது, பங்குச் சந்தைகளில் பொருட் களை விற்பவர்களை, பொருள்களின் விலை களை உயர்த்திக்கொள்வதற்கு சமிக்ஞை காட்டுவது போலாகிறது.’’ என்று தெரிவிக் கிறது. உண்மையில், சிகாகோ மெர்கண்டைல் எக்ஸ்சேஞ்ச்-இல் நிர்ணயிக்கப்பட்ட தானி யங்களின் எதிர்கால விலைகள் உலகம் முழு வதும் நடந்து வந்த தானிய வர்த்தக ஒப்பந்தங் களை நேரடியாகப் பாதித்தது. மேலும், ஊக வர்த்தகத்தில் ஈடுபடும் ஒருவர், மற்ற முதலீட் டாளர்களைப்போல் புதிய மூலதனம் எதையும் உருவாக்கப் போவதில்லை. ஊகவர்த்தகர் திவாலாகப் போகிறார் என்றால், அவருக்குக் கடன் கொடுத்தவர்கள் எந்தத் தொகையையும் அவரிடமிருந்து மீண்டும் பெற முடியாது.

இவ்வாறு உணவுப்பொருள்களின் மீதான பணவீக்கத்திற்கும், சந்தை அடிப்படை களுக்கும் எவ்விதச் சம்பந்தமுமில்லை என்ப தால், ஐ.நா. ஸ்தாபனத்தின் இந்த அறிக்கை யானது, சர்வதேச நிதியத்தில் ஜார்ஜ் புஷ்சால் முன்வைக்கப்பட்ட ‘‘சீனாவிலும் இந்தியா விலும் உணவுதானிய நுகர்வு அதிகரித் திருப்பதுதான் உணவுப் பொருள்களின் விலை உயர்வுக்குக் காரணம்’’ என்ற கூற்றை யும் போலித்தனமான ஒன்று என்பதை உலகிற்கு வெளிப்படுத்திவிட்டது.

உண்மையான வர்த்தகர்களுக்கும் ஊக வர்த்தகர்களுக்கும் இடையே சட்டரீதியாக பாகுபாட்டை ஏற்படுத்திட வேண்டும் என்பது இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந் துரைகளில் முக்கியமான ஒன்றாகும். மக்க ளுக்கு உணவு உரிமையை அளிக்கக்கூடிய விதத்தில் ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் ஒவ் வொரு நாடும் தன்னுடைய சட்டரீதியான கட மைகளை நிறைவேற்றிட, இப்பரிந்துரைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று அறிக்கை கேட்டுக்கொண்டிருக்கிறது.

சாமானியர்களின் நலன்கள் பாதுகாக்கப் பட வேண்டும் என்றால், நாடாளுமன்றத் தின் ஒட்டுமொத்த உணர்வு மதிக்கப்பட வேண்டும் என்றால், ஐமுகூ-2 அரசாங்கமானது, உணவுப் பொருட்கள் பரிவர்த்தனைகளில் செயல் பட்டு வரும் அனைத்துவிதமான ஊக வர்த்தகங்களை யும் உடனடியாகத் தடை செய்ய வேண்டும்.

தமிழில் : ச.வீரமணி

அயோத்தி தீர்ப்பும்-அம்பலமான முகவிலாசங்களும் - டி.கே.ரங்கராஜன் எம்.பி.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் குறித்த தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றத் தின் லக்னோ பெஞ்ச் செப்டம்பர் 30ஆம் தேதி யன்று வழங்கியது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை இந்து மகாசபை, நிர்மோகி அகோரா மற்றும் சன்னி வக்பு வாரியம் ஆகியவற்றிற்கு மூன்றாக பிரித்து வழங்க வேண்டும் என்பது அந்தத் தீர்ப்பின் சாராம்சம்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தரம்வீர் சர்மா, சுதிர் அகர்வால், சிப்கத் உல்லா கான் ஆகிய மூவரிடையே தீர்ப்பு குறித்து ஒத் தக் கருத்து இல்லை. தீர்ப்புரையில் மட்டு மின்றி பல்வேறு அம்சங்களிலும் மூன்று நீதிபதிகளும் முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக நீதிபதி அகர்வால், மூன்று கோபுரம் போன்ற அமைப்புள்ள இந்தக் கட்டடத்தின் நடுக்கோபுரத்திற்கு கீழே உள்ள இடம்தான் ராமர் பிறந்த இடம் என்று இந்துக் கள் காலம் காலமாக நம்பிக்கை கொண்டு வந்துள்ளனர் என்று கூறியுள்ளதோடு, இந்த நம்பிக்கைதான் ராமர் பிறந்த இடம் இதுதான் என்பதற்கு ஆதாரம் என்று கூறியுள்ளார். இந்தத் தீர்ப்புடன் பதவி விலகும் அவரை சாமியார்கள் சபை “வெகுவாக” பாராட்டி யுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் சட்ட நெறிமுறைகளை ஆதாரமாகக் கொள்ளாமல் நம்பிக்கையை ஆதாரமாக்குவதை ரொமிலா தாப்பர், இர்பான் ஹபீப் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள் விமர்சித்துள்ளனர். ‘பண்டைக்கால இந்தியா’ குறித்த பிரபல வரலாற்று ஆய்வாளரான ரொமிலா தாப்பர் ‘ஹிந்து’ பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் “ஒரு சமூகம் என்று கூறிக்கொண்டு தங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் இதுதான் கடவுள் பிறந்த இடம் என்று அறிவிப்பு செய்யக்கூடிய முன் னுதாரணத்தை இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தியுள் ளது. இனி ஏராளமான ‘அவதரித்த இடங்கள்’ என்ற பிரச்சனைகள் உருவாகலாம். வேண்டு மென்றே வரலாற்று ரீதியான சின்னங்களை அழித்தது கண்டிக்கப்படவில்லை என்றால், மற்ற சின்னங்களை அழிப்பதை எப்படி தடுக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பி யுள்ளார். வரலாற்றுக்கு உள்ள மரியாதையை இந்தத் தீர்ப்பு செல்லாக்காசாக்கி உள்ளது. வரலாற்றின் இடத்தில் மத நம்பிக்கையை அமர்த்திவிட்டது என்றும் அவர் சரியாகவே குறிப்பிட்டுள்ளார்.

ரொமிலா தாப்பரின் அச்சம் நியாயமானது. நாளைக்கே ஒருவர், இப்போது நாடாளுமன் றக் கட்டடம் இருக்கும் இடத்தில்தான் அனுமன் பிறந்தார் என்று கூறலாம். இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால், நான் அப் படித்தான் நம்புகிறேன், அதுதான் ஆதாரம் என்று வம்படி வழக்கு நடத்துவதோடு, அயோத்தி குறித்த அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச்சின் தீர்ப்பைக்கூட துணைக்கு அழைக்கலாம்.

அயோத்தி தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து தேசிய, மாநில அரசியல் கட்சிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளன. தீர்ப்பு வெளியானவுடன் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு விடுத்த அறிக்கையில், மக்கள் எந்தவிதமான தூண்டுதலுக்கும், ஆத்திரமூட்டலுக்கும் இரையாகாமல் அமைதியையும், சமூக நல்லி ணக்கத்தையும் பேணுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததோடு, இந்தத் தீர்ப் பினை முழுமையாக படிக்க வேண்டியுள் ளது. தீர்ப்புரையின் தன்மை குறித்து கேள்வி கள் எழக்கூடும் என்று மிகுந்த எச்சரிக்கை யோடு கருத்து தெரிவித்தது. இதேபோன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் “சிக்கலான விஷயங்கள் இந்தத் தீர்ப்பில் உள்ளன. எனவே தீர்ப்பு முழுமையாக கூர்ந்து ஆராயப் படவேண்டும்” என்று கவனமாக கூறியது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக்குழு கூட்டத்தில், தீர்ப்பின் அனைத்து அம்சங்களும் விரிவாக விவாதிக் கப்பட்டு அதன்பின் வெளியிடப்பட்ட அறிக் கையில், “சம்பந்தப்பட்ட நிலத்தை மூன்று பகுதிகளாக பிரிக்க வேண்டும் என்ற இந்த தீர்ப்பு, நம்பிக்கை மற்றும் விசுவாசம் என்பதை அடிப்படையாகக் கொண்டே அளிக்கப்பட் டுள்ளது. மத நம்பிக்கை மற்றும் மதத்தின் மீதான விசுவாசம் ஆகியவற்றை முதன்மைப் படுத்தி ஏற்றுக்கொள்ளும் விதமாக தீர்ப்புரை யின் கண்ணோட்டம் அமைந்துள்ளது. உண் மைகளுக்கும் ஆதாரங்கள் தொடர்பான ஆவ ணங்களுக்கும் மேலாக மேற்கண்ட நம்பிக் கையே முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் ஒரு ஆபத்தான முன்னுதார ணமாக அமைந்துவிடும்” என்று கூறியது.

“மேல்முறையீட்டின் போது உச்சநீதிமன் றம் நமது அரசியல் அமைப்புச்சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள மதச்சார்பற்ற ஜனநா யக அமைப்பு முறையில், நீதித்துறைகளின் நடவடிக்கை மூலமாக இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும்” என்றும் அரசி யல் தலைமைக்குழு கூறியுள்ளது. இதன் பொருள், வெளிவந்துள்ள தீர்ப்பு மதச்சார்பற்ற ஜனநாயக அமைப்பு முறையில் அமைய வில்லை என்பதே ஆகும்.

அதே நேரத்தில் பல்வேறு கட்சிகள் வெளியிட்டுள்ள கருத்துக்களின்படி அந்தக் கட்சிகளின் குணாம்சங்களையும், கண் ணோட்டங்களையும் புரிந்து கொள்ள முடி கிறது. தீர்ப்பு குறித்து பாஜக தலைவர்கள் அனைவரும் திருப்தி தெரிவித்தனர். ராமஜென்ம பூமி பிரச்சனையில் சாதகமான அம்சம் இது என்று பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார். ராமருக்கு கோயில் கட்ட இந்தத் தீர்ப்பு வழிவகை செய்துள்ளது என்றார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. சர்ச்சைக்குரிய இடத்தில் பெரும்பகுதி ராமர் கோவில் கட்டு வதற்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது என்றார் முரளி மனோகர் ஜோஷி. இந்தத் தலைவர்கள் அனைவரையும் ஆட்டுவிக்கும் ஆர்எஸ்எஸ் பீடத்தின் தலைவரான மோகன் பாகவத், யாருக்கும் வெற்றியோ தோல்வியோ இல்லை என்று பெருந்தன்மையாக கூறுவது போல் கூறிவிட்டு, அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்ட வழி ஏற்படுத்தித்தந்த தீர்ப்பு இது என் றும் இந்தக் கோரிக்கை பிற்போக்குத்தனமா னது அல்ல என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

சட்டம் மற்றும் ஆதாரத்தை அடிப்படை யாகக் கொள்ளாமல் வெளிவந்துள்ள தீர்ப்பை ஆர்எஸ்எஸ், பாஜக பரிவாரம் குதூகலத் தோடு வரவேற்பது புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றே. அதிலும் அத்வானி மேலும் ஒருபடி சென்று, அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்ட தாம் நடத்திய ரதயாத்திரை சரியானது என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது என்றார். அநேகமாக அடுத்து அவர், பாபர்மசூதி இடிப்பு சரியானது என்பதுதான் தீர்ப்பின் சாராம்சம் என்று கூட கூறக்கூடும்.

நேரு காலத்திலிருந்து நரசிம்மராவ் காலம் வரை அயோத்தி பிரச்சனையில் குழப்பமான, சந்தர்ப்பவாத நிலை எடுத்து வரும் காங்கிரஸ் கட்சி, இந்தத் தீர்ப்பு குறித்து வெளியிட்ட மாறுபட்ட கருத்துக்களும் அதை பிரதிபலிப் பதாகவே இருந்தது.

தேசத்தையே கவலை கொள்ள செய்த இந்த தீர்ப்பு விஷயத்தில் திமுகவும், அதிமுக வும் ஒரே மாதிரி கருத்து தெரிவித்தன. திருப்தி அளிப்பதாக உள்ளது என்பதுதான் அது.

அதிலும் பகுத்தறிவு பாரம்பரியத்தை பின்பற்றுவதாகக் கூறும் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கலைஞர் உடனடி யாக வெளியிட்ட கருத்து அதிர்ச்சியளிப்ப தாக இருந்தது. அயோத்தி தீர்ப்பு இரு தரப் பினருக்கும் திருப்தியடையக்கூடிய வகை யில் உள்ளதாக அவர் கூறினார்.

ராமர் கட்டிய பாலம் என்பது தங்களது நம் பிக்கை என்று கூறித்தான் ஆர்எஸ்எஸ் பரி வாரம் சேதுக்கால்வாய் திட்டத்தை நீதிமன்றத் தின் மூலம் முடக்கி வைத்துள்ளது. அது குறித்த விசாரணை நடைபெற்றுவரும் நிலை யில், நம்பிக்கை அடிப்படையில் அளிக்கப் பட்டஅயோத்தி தீர்ப்பை இருதரப்பும் ஏற்கக் கூடியதாக உள்ளது என்று முதல்வர் கூறியது வினோதமானது. இந்த வாதம் ஏற்கப்பட்டால் ராமர் பாலம் கட்டியதாக ஒரு தரப்பினர் நம்பு கிறார்கள். எனவே அதை இடிக்கக்கூடாது என்று ஒத்துக்கொள்வது போலாகிவிடும்.

நடைமுறை அரசியலுக்காக இவ்வாறு கூறியதில் ஏற்பட்ட சறுக்கலை சரி செய்யும் வகையில் அவர் நீண்டதொரு அறிக்கையை வெளியிட்டார். ராமர் பிறந்த இடத்தை கண்டு பிடிக்க முடிகிறது. ராஜராஜன் நினைவிடத்தை கண்டறிய முடியவில்லையே என்று ஆதங் கம் வெளியிட்டார். தீர்ப்பு ஏற்படுத்தப்போகும் விபரீதம் குறித்த விமர்சனத்தைவிட, ராஜ ராஜன் குறித்த பெருமிதம் சார்ந்த ஆதங்கமே இதில் அதிகமாக வெளிப்பட்டது.

இவ்வாறு தடுமாறுவதும் சமாளிப்பதும் திமுகவுக்கு புதிதல்ல. இந்தியாவின் இறை யாண்மையை காவுகேட்கக்கூடிய அணு சக்தி உடன்பாடு குறித்த பிரச்சனை முன் னுக்கு வந்தபோது, இடதுசாரிகள் சிந்திப்ப தற்கு முன்பே இதிலுள்ள ஆர்வத்தை நான் சிந்தித்தேன் என்றார். இடதுசாரிகளின் அச் சத்தில் நியாயம் உண்டு என்றும் ஒத்துக் கொண்டார். ஆனால் பிறகு திடீரென தனது நிலையை மாற்றிக்கொண்டு மன்மோகன் சிங் அரசுக்கு ஆதரவாக அதன்மூலம் அமெரிக்கா வுடனான அணுசக்தி உடன்பாட்டுக்கு ஆதர வான நிலைபாட்டினை திமுக எடுத்தது.

பதவிக்காக பகுத்தறிவு கொள்கைக்கு முற்றிலும் முரணான மதவெறி பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கு பெற்றது. அந்தத் தடுமாற்றம் இப்போது அயோத்தி தீர்ப்பு குறித்த கருத்திலும் வெளிப்படுகிறது.

புதன், 6 அக்டோபர், 2010

வருணாசிரமம் வளர்த்தவனே ராஜராஜன்! -அருணன்

தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாண்டு விழாவைக் கொண்டாடியிருக்கிறது தமிழக அரசு. இந்தச் சமயத்தில் புராதனக் கலை-இலக்கியங்கள் பற்றி மாமேதை மார்க்ஸ் கூறி யது நினைவுக்கு வருகிறது. “கிரேக்கக் கலை யும், இதிகாசக் கவிதைகளும் சமுதாய வளர்ச் சியின் சில குறிப்பிட்ட வடிவங்களுடன் தொடர்பு கொண்டிருக்கின்றன என்பதை புரிந்து கொள்வதில் நமக்குச் சிரமம் இல்லை. ஆனால், அவை இன்னும் நமக்கு அழகியல் இன்பத்தைத் தருகின்றன. சில அம்சங்க ளில் அவை உயர்தரமானதாக, நாம் எட்டவே முடியாத இலக்காக நிற்கின்றன என்பதுதான் வியப்பளிக்கும் விஷயமாகும்” என்றார் அவர்.

தஞ்சை கோயிலுக்குள் நுழையும் போது, அதன் கோபுரத்தை நிமிர்ந்து பார்க்கும்போது நம்முள் ஏற்படும் பரபரப்பை, பரவசத்தை தவிர்க்க முடியவில்லை. கம்பீரமான அழகிற்கு, தொன்மையான அதிசயத்திற்கு இருக்கும் தனி ஈர்ப்பு அது. அழகியலுக்கு என்று தனி விதிகள் இருக்கின்றன. அவை வேலை செய்கின்றன.

அந்த 216 அடி உயர கோபுரத்தைச் சற்று தொலைவிலிருந்து பார்க்கும் போது அது வானத்தைத் தொட்டு நிற்பதாகப் படும். மேகத் திரள்கள் அதை உரசிக் கொண்டு போவதாகத் தெரியும். அதன் 16 அடுக்குகளும் ஓராயிரம் ஆண்டுகளாக ஒன்றாக நின்று அந்த ஜாலத் தைச் செய்கின்றன.

உயர் கோபுரங்கள் எல்லாம் பொதுவாகக் கோயிலின் சுற்றுச்சுவர் வாயில்களில் இருக் கும். தஞ்சை பெரிய கோயிலிலோ அது கரு வறை மீதே இருக்கிறது. பிற கோபுரங்களில் எல்லாம் உச்சியானது பல கும்பங்களைப் பொருத்துகிற அளவுக்கு நீள் செவ்வகமாக இருக்கும். இதுவோ மன்னனின் சிரசில் இருக்கும் மணி மகுடம் போல உருண்டை யாக அமைந்து, ஒரே கும்பத்தைத் தாங்கி நிற் கிறது. இந்த பாணி கோபுரத்தில் உலகத்தி லேயே இதுதான் மிக உயரமானது.

கோபுரம் மட்டுமல்ல, அதன் அடிவாரத்தி லிருந்து புறப்படும் முழுக் கோயிலும் அந்தப் பிரகாரத்திற்குள்ளேயே நமக்கு அப்படியே காட்சியளிக்கிறது. அது பூரணமானது. அந்தப் பூரணத்தை எதுவும் மறைக்கவில்லை. மேகங்கள் மறைக்காத முழு நிலா போல அது பூமியில் அமர்ந்திருக்கிறது.

இதெல்லாம் சேர்ந்துதான் அந்த அழகி யல் இன்பத்தை நமக்கு அளிக்கிறது போலும். சில மகத்தான கலைஞர்களின் கற்பனை யில் இது முதலில் எழுந்திருக்க வேண்டும். அதைக் கல்லில் கொண்டு வந்தது சாதாரண சாதனை அல்ல, உலக மகா அற்புதம்.

வினோதம் என்னவென்றால், தஞ்சை யிலும் அதன் சுற்றுப்புறத்திலும் குன்றுகள் இல்லை. அவை சுத்தமான சமவெளிகள். கோயிலுக்கான கற்கள் புதுக்கோட்டையிலி ருந்து வந்திருக்கவேண்டும் என்கிறார்கள். கொண்டு வந்து கொட்டியிருக்கலாம். அந்தக் கற்களை, அவற்றைக் கோபுரமாகக் கட்டி முடிக்க எவ்வளவு கணித ஆற்றல், கட்டடக் கலை நுட்பம், இயந்திரவியல் ஆளுமை இருந்திருக்க வேண்டும்! அனைத்திற்கும் மேலே எவ்வளவு மனித உழைப்பு இருந் திருக்க வேண்டும்! இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்துச் செயல்படுத்த வைக்க ஓர் அரசமைப்பு இருந்திருக்க வேண்டும்! அது, உழைப்புக்கேற்ற ஊதியம் கொடுக்கா மல் உத்தரவால் உழைப்பாளரை ஆட்டி வைக் கிற வல்லாண்மை அரசாங்கமாக இருந்தி ருக்க வேண்டும்! இல்லையென்றால் இது சாத்தியமில்லை.

அதனால்தான் மார்க்ஸ் கச்சிதமாகச் சொன்னார் - “கலைத்துறையின் சில முக் கியமான படைப்புகள் அதன் ஆரம்பகட்ட வளர்ச்சியில்தான் சாத்தியம்”. இன்னொரு தஞ்சை பெரிய கோயிலை மனித சமுதாயம் உருவாக்கப்போவதில்லை. அது ராஜராஜன் காலத்தில்தான் சாத்தியம். அவனது சமகா லத்து ராஜாக்கள் யாரும் இந்த சாத்தியப்பாட் டைப் பயன்படுத்தவில்லை. அவனது மகன் ராஜேந்திரன் கூட கம்பீரத்திலும் அழகிலும் சற்றே குறைவான ஒரு கோயிலைத்தான் கங்கைகொண்ட சோழபுரத்தில் கட்ட முடிந் தது. அதனால்தான் ராஜராஜன் பெருமைக்கு ரியவன் ஆகிறான். நமக்கோ இனி “எட்டவே முடியாத இலக்கு” ஒன்று நம் முன்னாலேயே எழுந்து நிற்கிறது! எனவே, இந்த ஆயிரமாண்டு அதிசயத்தைக் கொண்டாடுவது இயல்புதான்.

ஆனால், தமிழக அரசு இதைக்கொண்டா டிய விதம் இருக்கிறதே, அது பொருத்தமற்றது. தஞ்சைப் பெரியகோயில் எனும் கலை அதி சயத்தை, கட்டட அற்புதத்தைக் கொண்டாடு வதைவிட அது ராஜராஜனின் ஆட்சியைப் புகழ்வதில் அதிக ஆர்வம் காட்டியது. “மக் களாட்சியைத் திறம்பட நடத்தி வாழ்ந்தவன் ராஜராஜன்” என்று முதல்வர் கலைஞர் நற் சான்றிதழ் வழங்கினார். “மத்தியிலும் மாநிலத் திலும் ராஜராஜனின் காலத்தைப் போன்ற தொரு நல்லாட்சி நடைபெற்று வருகிறது” என்று ஒரு போடு போட்டார் காங்கிரசின் மத் திய அமைச்சர் ஜி.கே.வாசன். மாநில அமைச் சர்கள் விடுவார்களா என்ன? கலைஞர்தான் இன்றைய ராஜராஜ சோழன் என்று ஒருவர் சொல்ல, மு.க.ஸ்டாலின்தான் ராஜேந்திர சோழன் என்று இன்னொருவர் முத்தாய்ப்பு வைத்தார். இதற்கு மேல் உச்ச ஸ்தாயிக்குப் போக யாரால் முடியும்? விழா இனிதே முடிந்தது!

ஆனால், தெரிந்தோ தெரியாமலோ ராஜரா ஜன் காலத்து, சில யதார்த்தங்கள் இந்த விழா விலும் வெளிப்பட்டன. ஓதுவார்கள் சிலர் பரி தாபமாக ஒரேயொரு தமிழ்ப்பாடலைப் பாடி னார்கள். பத்மா சுப்பிரமணியமோ ஆயிரம் நடனமங்கையரோடு கணபதி துதியிலிருந்து தனது நிகழ்ச்சியைத் துவக்கி ஆதி சங்கரரின் ஒரு சமஸ்கிருதப் பாடலுக்கு அபிநயம் பிடிப் பதோடு நிகழ்ச்சியை முடித்தார். நிகழ்ச்சித் தொகுப்பாளரோ ராஜராஜன் ஓதுவார்களை மட்டுமல்லாது, வேதபாராயணக் காரர்களை யும் நியமித்திருந்ததை மிகப்பெருமையோடு எடுத்துரைத்தார்.

அது மட்டுமா? இன்று போல அன்றும் பல நூறு அழகு மங்கையர்கள் இதே கோயி லில் ஆடிப்பாடியதை நினைவு கூர்ந்தார். அன்று... இன்று... என்பதெல்லாம் ஒன்றாகிப் போனதாகப் புளகாங்கிதப்பட்டார். அன்று இதே பெரிய கோயிலில் ஆடிய மங்கையர்கள் தேவதாசிகள். இந்தக்காலத்துப் பெண்மணி களை அவர்களோடு ஒப்பிட்டது இவர்களுக் குப் பெருமை சேர்க்குமா என்றெல்லாம் அவர் யோசிக்கவில்லை. உற்சாகத்தின் உச்சியில் அவர் வருணித்துக் கொண்டு போனார். இந்த நிகழ்ச்சிக்குத் தான் ஏகப்பட்ட முக்கியத் துவம், விளம்பரம். நாட்டுப்புறக் கலைகள் எல் லாம் பின்னுக்குத்தள்ளப்பட்டன.

வருணாசிரம எதிர்ப்பையும், ஆணாதிக்க எதிர்ப்பையும் தனது வாழ்நாள் முழுக்க வெளிப் படுத்தி வந்த பெரியார் இன்று இருந்தால் என்ன சொல்லியிருப்பார்? பெரியாரின் மாண வர்கள் என்றும், அண்ணாவின் தம்பிகள் என்றும் சொல்லிக்கொண்டு முதல்வர் உள் ளிட்ட திமுக தலைவர்கள் நிகழ்ச்சியை ரசித் துக் கொண்டிருந்தார்கள். பக்கத்திலே பாஜக வின் இல.கணேசன் உட்கார்ந்திருந்தார். முடி வில் பேசிய முதல்வருக்கு அப்போதுதான் தனது தலைவர்களின் நினைவு வந்தது போலும். “இந்த நிகழ்ச்சியின் சில கருத்துக் களை நாம் ஒப்புக்கொள்ளாவிட்டாலும்” என்று சற்றே காபந்து செய்து கொண்டு பத்மா சுப்பிரமணியத்தைப் பிரமாதமாகப் பாராட்டி னார். மார்க்சியவாதிகளும் பரதநாட்டியம் என்கிற அற்புத நடனவடிவத்தை ரசிப்பவர் களே. ஆனால் அதன்மூலம் சொல்லப்படுகிற கருத்தையும் கவனிக்கிறார்கள்.

விஷயம் இதுதான். எத்தனை மூடிகள், எவ்வளவு திரைகள் போட்டு மறைத்தாலும் வரலாற்று உண்மைகள் வெளிப்பட்டுத்தான் நிற்கும். பழம்பெருமை பேசும்போது எது மெய் யான பெருமை என்பதை உணர்ந்து, எது இன் றைக்கு சமூக வளர்ச்சிக்கு உதவும் என்ப தைப் புரிந்து பேச வேண்டும். நடந்தது எல் லாம் நல்லதே என்று பேச ஆரம்பித்தால், பிறகு ஏன் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட் டங்கள் நடத்தப்பட்டன என்பதற்கு விடை கிடைக்காமல் போய்விடும்.

இதே ராஜராஜன் காலத்திற்குப் பிறகுதான் தமிழகத்தில் சாதியத்தின் கொடூரப்பிடி இறுகி யது. ஆணாதிக்கத்தின் ஆலவட்டம் அதிக ரித்தது. 1940களில் நடந்த இனாம்தாரி ஒழிப் புப் போராட்டங்களும், தேவதாசி முறை ஒழிப்பு இயக்கங்களும் அவை 20ம் நூற் றாண்டிலும் தொடர்ந்தன என்பதற்குத் தெளி வான சாட்சியங்கள்.

தஞ்சை பெரிய கோயிலுக்கு எப்படி ஓரா யிரம் ஆண்டு வரலாறு உண்டோ, அதே கால வரலாறு நிலப்பிரபுத்துவத்திற்கும் உண்டு. இந்தக்கோயில் அன்றையத் தமிழகத்தின் கலையியலுக்கும், கட்டடத் தொழில்நுட்பத் திற்கும் எப்படி அற்புதமான எடுத்துக்காட்டோ, அதேபோல இது அன்றைய நிலப்பிரபுத்துவ ஆதிக்கச்சமூகத்தின் நெடிதுயர்ந்த அடையா ளமும் கூட. புராதனங்களுக்கெல்லாம் இத்த கைய இரட்டைத் தன்மை உண்டு.

இதை உணர்ந்து முன்னதைப்போற்றிப் புகழலாம், பின்னதைப் படிப்பினையாக நினைத்துப்பார்க்கலாம். இத்தகைய தெளி வான வரையறை எல்லாம் தமிழக ஆட்சியா ளர்களுக்கு இல்லை. அவர்கள் கோயில் கட்டுமானத்தின் பெருமையோடு, ராஜராஜன் காலத்து சமூக அமைப்பையே புகழ ஆரம் பித்துவிட்டார்கள். கூடவே தங்களையே ராஜராஜனாகவும், ராஜேந்திரனாகவும் நினைத் துக் கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். இது அர சியல் ஆதாயக்கணக்கு, தற்பெருமை உத்தி.

இதில் எல்லாம் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள் என்றாலும், இதனால் எழும் சரித் திர அபத்தத்தைப் புரிந்து கொள்ள ராஜராஜன் காலத்து சமூக வாழ்வைச் சற்றே நினைவு படுத்த வேண்டியுள்ளது. அவன் தமிழைக் காத்தான், வளர்த்தான் என்பது எவ்வளவு தூரம் உண்மை என்பதையும் பார்க்க வேண்டும்.

இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தித்தான்- ராஜராஜ சோழன் காலத்தில் தான் தமிழகத்தில் நிலப்பிரபுத்துவம் வேர் பிடித்து நின்றது. மூன்று வகை நிலவுடை மையாளர்கள் தோன்றினார்கள். பெரும்பா லான நிலங்கள் பெரும் வேளாளர்களுக்குச் சொந்தமாக இருந்தன. இது “வெள்ளான் வகை” எனப்பட்டது. அரசுக்கு வரி செலுத்திய கிராமம் இந்த வகையைச் சார்ந்தது என்கிறது திருவாலங்காட்டுச் செப்பேடு. கிராமத் தொழில் செய்வோருக்கு ஊழிய மானியமாக ஒதுக்கப்பட்ட நிலம் இரண்டாவது வகையா கும். பிராமணர்களுக்குத் தானமாக தரப்பட்ட “பிரமதேயம்”, “தேவதானம்” எனப்பட்டவை மூன்றாவது வகையாகும்.

நிலமானது பிராமணர்கள் குழு ஒன்றுக் குக் கூட்டாகத் தரப்பட்டால் அது பிரமதேயம், அதுவே தனியொரு பிராமணருக்குத் தரப்பட் டால் அது “ஏகபோக பிரமதேயம்”. கல்கி எழு திய “பொன்னியின் செல்வன்” சரித்திர நாவ லில் அநிருத்த பிரம்மராயர் என்கிற மந்திரி வருவார். இவருக்குப் பத்துவேலி நிலம் இப் படி ஏகபோக பிரமதேயமாகத் தரப்பட்டதாக அன்பில் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.

“முதலாம் ராஜராஜன், ராஜேந்திரனின் ஆட்சிக்காலங்களில் பிரமதேயக் கிராமங் களின் தனித்தன்மையைக் காக்க வேண்டி இதர வகுப்பினரின் நில உரிமைகள் சுருக்கப் பட்டன” என்கிறார் புகழ்பெற்ற வரலாற்றாளர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார். இதற்குச் சில திட்டவட்டமான ஆதாரங்களைத் தந்திருக் கிறார் அவர். அவை-”ராஜராஜனின் 17ம் ஆண்டில் (கி.பி.1002) ஒரு பொதுக்கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி பிரமதேயங்களில் நிலம் வைத்திருக்கும் மற்ற வகுப்பினர் எல் லோரும் தங்களுடைய நிலங்களை விற்று விடவேண்டும். நிலம் பயிரிடுவோரும் மற்ற நில மானியங்களை அனுபவிப்போரும் மட் டும் இதற்கு விதிவிலக்கு. அவ்வாறு விற்கப் பட்ட நிலங்களை வாங்கும் பிராமணர்கள் பணத்தை உடனடியாக இதற்காக நியமிக்கப் பட்ட விசேஷ அதிகாரியிடம் கட்டிவிட வேண்டும். ராஜகேசரி சதுர்வேதி மங்கலத் தில் இவ்வாறு விற்கப்பட்ட நிலங்களை அர சனின் தமக்கை குந்தவை தேவியாரே வாங்கி அவ்வூர்க் கோவிலுக்குத் தானமாக அளித் தார். இதுபோன்று முதலாம் ராஜேந்திரன் காலத்திலும் புலியூர்க் கோட்டத்தில் உள்ள வேளச்சேரி என்னும் பிரமதேயத்திற்கும் ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டது”

ராஜராஜ சோழன் காலத்து சமூகக் கட்ட மைப்பு வருணாசிரமமே என்பதை இது துல் லியமாகக் காட்டுகிறது. அதுவே தங்களது ஆதிக்கத்திற்கு ஏற்றது என்று நிலப்பிரபுக் களும், அவர்களது தலைவராகியப் பேரரசரும் உணர்ந்து அதை நிலைநிறுத்தியிருக்கிறார் கள். கோவில் கட்டுமானமும், அதைச் சுற்றிப் பின்னப்பட்ட சமூக உறவுகளும்கூட அடிப் படையில் நிலப்பிரபுத்துவக் காப்பு வேலைகளே.

கோவில்களுக்குத் தானமாக வழங்கப் பட்ட நிலங்களே “தேவதானம்”. சிவன் கோவில் என்றால் சூலாயுதமும், விஷ்ணு கோவில் என்றால் சங்கு சக்கரமும் பொறிக்கப்பட்ட கற்கள் அந்த நிலத்தில் ஊன்றப்பட்டன. இந்த நிலங்களிலிருந்து கிடைத்த வருமானத் தைக் கொண்டு வருணாசிரமக் கல்வி போதிக்கப்பட்டது. நீலகண்ட சாஸ்திரியார் கூறுகிறார்- “உயர்கல்வியானது சாதி தழு வியே கற்பிக்கப்பட்டது. மடங்கள்-கோவில் களைச் சார்ந்த பள்ளிகளிலும் கல்லூரிகளி லும் இது பயிற்றுவிக்கப்பட்டது”

முதலாம் ராஜேந்திரன் காலத்தில் தென் னாற்காடு மாவட்டத்தின் (எண்ணாயிரம்) ராஜராஜ சதுர்வேதி மங்கலத்தில் ஒரு கல் லூரி இயங்கியது. அங்கே 340 மாணவர்களும், 14 ஆசிரியர்களும் இருந்தார்கள். அவர்கள் படித்ததும் இவர்கள் சொல்லிக்கொடுத்ததும் சமஸ்கிருத நூல்கள். நான்கு வேதங்கள், பல சூத்திரங்கள், ரூபாவதரா இலக்கணம் போன்ற வையே அந்தக் கல்லூரியின் பாடத்திட்டம். ஆக, வேதக்கல்வி சொல்லிக்கொடுத்தது தான் சோழர்கால ஆட்சி.

இதிலே வேதனையானதொரு நகைமுரண் உண்டு. அதை சாஸ்திரியார் முத்தாய்ப்பாகக் கூறுகிறார்- “சமஸ்கிருதத்தில் உயர்படிப்பு முறை அமைந்திருந்தது குறித்து நமக்கு மேற் கண்ட விபரங்கள் தெரிகின்றன. ஆனால், அதே காலத்தில் தமிழ்க் கல்வியின் தன்மை எவ்வாறு இருந்தது என்பது பற்றி நம்பிக்கை யான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை”

வருணாசிரமத்தின் ஒரு முக்கியமான கூறாக, தாய்மொழிக் கல்வியைப் புறக்கணித்து சமஸ்கிருதத்தை முனனிறுத்துவது இருந் தது. இடைக்காலத்தில் சமண-புத்த மதங் களை ஒழித்துக்கட்டத் தமிழ் இசைப்பாடல்க ளைப் பயன்படுத்திக்கொண்டார்களே தவிர, காரியம் முடிந்ததும் மீண்டும் தங்கள் பழைய நிலைமைக்குத் திரும்பி விட்டார்கள். அதைத் தான் ராஜராஜன் - ராஜேந்திரன் காலம் உணர்த்துகிறது. சிதம்பரம் கோவிலில் பதுக் கப்பட்டிருந்த மூவர் தேவாரத்தை ராஜராஜன் மீட்டெடுத்தான் என்பதும் கர்ண பரம்பரைக் கதையாகக் கூறப்படுகிறதே ஒழிய வலுவான கல்வெட்டு ஆதாரம் இல்லை.

மற்றொரு புகழ்பெற்ற வரலாற்றாளரான கே. கே.பிள்ளையும் கூட கீழ்க்கண்ட முடிவுக்கே வந்தார் - “பிற்காலச் சோழர் காலத்தில் வட மொழியும் வடமொழி நூல்களும் எந்த அள விற்குப் போற்றி வளர்க்கப்பெற்றன என்ப தைத் தெளிவாய் அறிந்து கொள்ள முடிகின் றது. ஆயின், தமிழ்மொழி வளர்ச்சி பற்றி அறிந்து கொள்வதற்கான ஆதாரம் ஏதும் கிடைக்க வில்லை” தேவாரம் ஓதுவதற்குக் கோவில்க ளில் ஓதுவார்களை நியமித்தான் ராஜராஜன் என்பதைத் தவிர மற்றபடி அவனது காலத்து கல்வி முறை சமஸ்கிருத மயமாகவே இருந்தது. கோவிலில் அர்ச்சனை மொழியாக சமஸ்கிருதம் இருந்தது என்றே நீலகண்ட சாஸ்திரியார் கருதுகிறார். அதற்கு ஏராளமான கல்வெட்டு ஆதாரம் உண்டு என்கிறார்.

அரசு நிர்வாக அமைப்பில் சில புதுமை களைச் செய்தான். உள்ளாட்சி அமைப்பு களை முறைப்படுத்தினான் என்பது உண் மையே. ஆனால் அவையெல்லாம் வருணாசி ரமக் கட்டமைப்பிற்குள் உள்ளடங்கியவையே என்பதை மறந்துவிடக்கூடாது. பிரபலமான உத்திரமேரூர்ச் சாசனம் அன்று நிலவிய கிராம சபை பற்றிப் பேசுகிறது. அதன் உறுப்பினர் களது தகுதி பற்றியும் பேசுகிறது. அதில் ஒன்று- “பிராமணர் அல்லாதவர்கள் கிராம சபையில் உறுப்பினராகும் தகுதியற்றவர்கள் ஆவர்” இதன் பொருள் பிரமதேயக் கிராமங் களை பிராமணர்களே நிர்வாகம் செய்து கொண்டார்கள் என்பது. பிற கிராமங்களை பிராமணரல்லாத நிலப்பிரபுக்கள் நிர்வாகம் செய்து கொண்டார்கள். இந்த இரண்டிலும் பஞ்சமர்கள் போன்ற அடித்தட்டு உழைப் பாளிகளுக்கு எந்தப்பங்கும் இல்லை என் பதே யதார்த்தமாகும். அவர்கள் கிட்டத்தட்ட அடிமை நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள். இவர்களில் பண்ணையடிமைகளும் இருந் தார்கள், தினக்கூலிகளும் இருந்தார்கள்.

இதிலே பெண்கள் நிலை மிகப் பரிதாப மானது. தஞ்சாவூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு இரு பெண்கள், அவர்களது நண் பர்கள், உறவினர்கள் தங்களைத்தாங்களே விற்றுக்கொண்டார்கள். வயலூர் கோவிலுக் குத் திருப்பதிகம் பாடவும், ஈசனுக்கு வெண்சாமரம் வீசவும் மூன்று பெண்கள் விலைக்கு வாங்கப்பட்டார்கள்.

இது பிற வேலைகளுக்கு விற்கப்பட்டவர் கள், வாங்கப்பட்டவர்கள். தேவரடியார்கள் என்று தாசித் தொழிலுக்காகவே உருவாக்கப் பட்டவர்கள் கதை தனி. அது பற்றி நிறைய கல் வெட்டுக்கள் கிடைத்துள்ளன. தென்னாற் காடு திருவக்கரை சந்திர மவுலீசுவரர் கோவி லுக்கு சில வேளாளப்பெண்மணிகள் தேவரடி யார்களாக கி.பி.1098ல் விற்கப்பட்டார்கள். “எங்களடியாள் அங்காடியும் இவள், மகள் பெருங்காடியும், இவள் மக்களும் திருவக்கரை உடைய மாதேவர்க்கு தேவரடியாராக நீர் வார்த்துக் கொடுத்தோம்” என்பது நம்மை உருக்கும் அக்னி வார்த்தைகள்.

சதி எனப்படும் உடன்கட்டை ஏற்றுகிற பழக்கம் சங்க காலத்திலேயே துவங்கிவிட் டது. அது சோழர்கள் காலத்தில் சர்வசா தாரணமாக நடந்தது. ராஜராஜனின் தந்தையா கிய சுந்தரசோழன் மாண்டபோது அவனோடு உடன்கட்டை ஏறினாள் அவனது மனைவி வானவன் மாதேவி என்பாள். தென்னாற்கா டில் கிடைத்த வீரராஜேந்திரனின் (கி.பி.1063-1070) கல்வெட்டு ஒன்று கணவனை இழந்த மனைவியின் மனப்போராட்டத்தை உணர்த்து கிறது. தனது சக்களத்திகளுக்கு அடிமையாக வாழ்வதைவிட அவள் உடன்கட்டை ஏற விரும்பினாள். இதைத் தடுக்க முயன்றவர் களைக் கண்டு அவளுக்கு கோபம் வந்த தாகப் பொறித்து வைத்திருக்கிறார்கள். இதன் மூலம் அன்று நிலவிய பலதார மணத்தின் கொடுமை, மனைவியே விரும்பி உடன் கட்டை ஏறியதாகத் தோற்றம் காட்டும் தந்திரம் எனப் பல செய்திகள் வெளிப்படுகின்றன.

பொருளியல் வாழ்வில் நிலப்பிரபுத்துவ மும், அதன் சமூகக் கட்டமைப்பாக வருணா சிரமமும் இருந்தன என்பதே ராஜராஜன்-ராஜேந்திரன் காலத்து நடப்பாகும். வருணா சிரமம் வளர்த்தவர்களே இவர்கள். இதை மறந்துவிட்டு அவர்களைப் போலவே தற்போ தைய மத்திய - மாநில அரசுகள் இயங்குகின் றன என்று காங்கிரஸ், திமுக தலைவர்கள் மார்தட்டுவது கேலிக்குரிய விஷயமாகும். எது பெருமை என்று தெரியாமலேயே பெருமை யடித்துக் கொள்வதாகும்.

பெரியார்-அண்ணா பெயரை ஒருபுறம் சொல்வதும், ராஜராஜன்-ராஜேந்திரன் பெயரை மறுபுறம் சூடிக்கொள்வதும் முற்றிலும் முரணான விஷயங்கள் என்பதை திமுக தலைவர்கள் உணர வேண்டும். கட்சிக் கரைவேட்டி கட்டிக்கொண்டு, புதிய அரசு செயலகக் கட்டிடத்தில் அமைச்சர் நாற்காலி யில் உட்கார்ந்து கொண்டு, இருபுறமும் பெண் கள் சாமரம் வீசவேண்டும் என்று நினைக் கக்கூடாது!

வரலாற்றை முன்னோக்கி நடத்த வேண் டுமே தவிர, பின்னோக்கி நகர்த்தக்கூடாது. தமிழனின் புராதனக் கலை ஆற்றலைப் போற்றுவோம், பாதுகாப்போம். அதே நேரத் தில் அவன் கடந்து வந்த சமூக-பொருளாதார ஒடுக்குமுறைக்கு மீண்டும் திரும்ப மாட் டோம் மாறாக சமத்துவ சமுதாயப் பாதையில் நடைபோடுவோம் என்பதில் உறுதியாக இருப்போம்.

ஆதாரங்கள்:

ஆயசஒ யனே நுபேநடள டிn ஹசவ யனே டுவைநசயவரசந

சோழர்கள் - கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி

சோழர் வரலாறு - கே.கே.பிள்ளை

தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும் - வே.தி.செல்லம்

காமன்வெல்த்: ‘ப்ரைவேட் வெல்த்’ சுரண்டல் -வெங்கட்

அக்டோபர் 3 முதல் 14 வரை சர்வதேச காமன் வெல்த் விளையாட்டுகள் இந்திய தலைநகரான புதுதில்லியில் நடை பெற உள்ளது . காமன்வெல்த் என்பது 54 முன் னாள் பிரித்தானிய காலனிய நாடுகளை கொண்ட கூட்டமைப்பு ஆகும். 1930 ல் முதன்முதலாக இந்த விளையாட்டுகள் கனடா நாட்டில் நடைபெற்ற பொழுது 11 நாடுகள் பங்கேற்றன. ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விளையாட்டுகள் , 1942 மற்றும் 1946 ஆம் ஆண்டுகளில் இரண்டாம் உலக போர் காரணமாக நடைபெறவில்லை. இந்த விளை யாட்டு தொடங்கும்போது பிரிட்டிஷ் பேரரசு விளையாட்டுகள் (க்ஷசவைளைா நுஅயீசைந ழுயஅநள) என்று அழைக்கப்பட்டது. பின்னர் 1954 ல் பிரிட் டிஷ் பேரரசு மற்றும் காமன் வெல்த் விளை யாட்டுகள் (க்ஷசவைளைா நுஅயீசைந யனே ஊடிஅஅடிறேநயடவா ழுயஅநள ) என்று அழைக்கப்பட்டு, பின்னர் 1970 ல் பிரிட்டிஷ் காமன் வெல்த் விளையாட்டுகள் (க்ஷசவைளைா ஊடிஅஅடிறேநயடவா ழுயஅநள) என்று அழைக்கப்பட்டது. கடைசியாக 1978 ல் தற் போதுள்ள காமன் வெல்த் விளையாட்டுகள் என்ற பெயரைப் பெற்றது. 2006 ல் ஆஸ்தி ரேலியாவில் நடைபெற்ற இந்த போட்டிகள், தற்போது 19வது முறையாக இந்தியாவில் நடைபெற உள்ளது.

சர்வதேச போட்டிகள் நடப்பதாலேயே பொருளாதார முன்னேற்றத்தை ஒரு நாடு அடையும் என்ற ஆழமான கருத்து பலமுறை பொய்ப்பிக்கப்பட்டுள்ளது. 1965ல் ஜப்பான் நாட்டில் உள்ளடோக்கியோ நகரில் நடை பெற்ற சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கு பிறகு , அந்த நாட்டின் பொரு ளாதார முன்னேற்றம் சரிவடைந்தது. போட்டி கள் நடைபெறுவதற்கு முன்பு 13.1 சதவீதமாக இருந்த பொருளாதார முன்னேற்றம், 5.2 சதவீதமாக 1965ஆம் ஆண்டு குறைந்தது. 1988ல் தெற்கு கொரியாவில் உள்ள சியோல் நகரில் நடந்த சர்வதேச ஒலிம்பிக் போட்டி களுக்கு பிறகு 10.6 சதவீதமாக இருந்த பொருளாதார முன்னேற்றம் 6.7 சதவீதமாக குறைந்தது. மேலும் போட்டி நடைபெறும் நகரத்தின் பொருளாதார பங்களிப்பு அதிகமாக இருக்கும்பட்சத்தில், போட்டிகள் நடந்தபிறகு பொருளாதார தொய்வு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புக்கள் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தில்லி, இந்தியாவின் தலை நகராகவும், நாட்டிற்கு அதிக பொருளாதார பங்களிப்பு அளிக்கக்கூடிய நகரமாகவும் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

2003ல் இந்த விளையாட்டு எங்கு நடை பெறவேண்டும் என்று நடந்த ஏலத்தில் இந் தியா அளித்த வாக்கின்படி பங்கேற்கும் ஒவ் வொரு நாட்டிற்கும் ஒரு லட்சம் அமெரிக்க டாலர் பணமும், விமானப் பயணச் செலவு, தங் கும் மற்றும் உணவு வசதிகள் அனைத்தும் அளிப்பதாக கூறியே இந்த வாய்ப்பை பெற் றது. ஆனால் இந்த விளையாட்டை நடத்தும் அதிகாரத்தை பெற்று ஏழு ஆண்டுகள் முடிந்த பின்னும் கட்டுமானப் பணிகள் மற்றும் விளை யாட்டுத் தளங்கள் அமைத்தல் வேலைகள் இன்னும் முடிவு பெறாமலே இருக்கின்றன. இந்த விளையாட்டை உலகத்தரத்திற்கு நடத் துவதற்காக ரூ.30,000 கோடிக்கும் மேலாக நிதி ஒதிக்கியுள்ளது அரசு. இந்த தொகையையே தற்பொழுது மிஞ்சிவிட்டதால் , 2009-10ஆம் ஆண்டுக்கான தலித் மக்களுக்கான நிதியி லிருந்து, மேலும் ரூ.678 கோடிகளை இந்த விளையாட்டுச் செலவுகளுக்காக தில்லி அரசு ஒதுக்கி உள்ளதாக செய்திகள் வந்துள் ளன. ஆனால் இத்தனை கோடிகள் செலவு செய்தும் தரமான கட்டுமான மற்றும் அடிப் படை வசதிகள் தில்லி நகரில் வந்துள்ளதா என்பது கேள்விக் குறியான விசயமே. ஹெச். எல்.ஆர்.என் (ழடுசுசூ) என்ற ஆராய்ச்சி நிறுவ னத்தின் அறிக்கையின்படி இந்த விளை யாட்டு போட்டிகளுக்கான மத்திய அரசாங்க நிதி ஒதுக்கீடு ரூ.45.5 கோடிகளாக 2005-06ஆம் வருடத்தில் இருந்தது. 2009-10ல் ரூ.2,883 கோடிகளாக உயர்ந்துள்ளது. இது 6,235 சத வீதம் உயர்வு ஆகும். ஆனால் இதே காலகட்டத்தில் கல்விக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு வெறும் 60 சதவீதமே உயர்ந் துள்ளது. மேலும் சுகாதாரம் மற்றும் மருத்துவத் திற்கான ஒதுக்கீடு 160 சதவீதமே உயர்ந்துள் ளது. தொடக்கத்தில் ரூ.1,899 கோடிகளை இலக்காக கொண்ட காமன்வெல்த் விளை யாட்டு போட்டிகள், இன்று ரூ.30,000 கோடி களையும் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. தில்லி நகரை வெளிநாட்டவர் கண்களுக்கு அழகாக காட்டுவதற்காக அரசு மேற்கொண் டுள்ள நடவடிக்கைகள் நம்மை மேலும் ஆச் சரியப்படுத்தியுள்ளது.

முதலில் தில்லியில் உள்ள ஆயிரக்கணக் கான பிச்சைக்காரர்களை அகற்றி, அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பியது அரசு. அப்படி அனுப்ப முடியாதவர்களை அரசு கட்டுப்பாட் டில் உள்ள தங்குமனைகளில் (ளுாநடவநச ழடிஅநள) தள்ளியது. வெளிமாநிலங்களிலிருந்து வந்து கூலி வேலை செய்யும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை, அவர்கள் தங்கி வந்த திறந்தவெளி பொது இடங்களில் இருந்து அகற்றியது. குடிசைப் பகுதிகளை மூங்கி லால் ஆன தட்டைகள் மூலம் மறையும் படி வேலிகள் அமைத்தது. வெளிநாட்டவருக்கு இந்தியாவின் ஏழ்மை தெரிந்துவிடக் கூடா தென்று. முக்கிய சாலைகளில் வாழ்வாதாரத் திற்காக வணிகம் செய்து வரும் சிறு வியாபாரி கள் மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளை அகற்றியது. நாடாளுமன்றத்தின் அருகில் உள்ள ஜந்தர் மந்தர் என்ற இடம் அரசின் தவறான கொள்கைகள் மற்றும் திட்டங்களை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களின் தளமாக வெகு நாட்களாக இருந்து வருகிறது. இந்தியாவின் எல்லா பகுதிகளில் இருந்து மக்கள் இங்கு தங்கி தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். அந்த இடத்தில் இருந்த போராடும் மக்களை அகற்றி, இரவு நேரங்க ளில் அங்கு தங்கக் கூடாது என்ற ஆணை யையும் பிறப்பித்துள்ளது அரசு. கடைசியாக அனைவரையும் வீட்டிற்கு வெள்ளை அடித்து தங்களது இல்லங்களை புதுப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்தது அரசு. இந்தியாவில் உள்ள ஏற்றத்தாழ்வு மற்றும் ஏழ்மையை அகற்ற பல விதமான போராட்டங்கள் மற்றும் கருத்தி யல் பகிர்வுகள் நடந்து வரும் வேளையில், இந்தியாவின் ஏழ்மையை மறைத்து, வெளி நாட்டவர் கண்களுக்கு அழகாக காட்ட எப்படி ஒரு எளிய வழியை கையாண்டுள்ளது தில்லி மற்றும் மத்திய அரசாங்கம்.

பலகோடி ரூபாய் பணம் செலவழிப்பதால் தில்லியில் அடிப்படை கட்டுமான வசதிகள் பெருகி, சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறும் என்று எண்ணினால், அதிலும் சிக்கல்தான். பல தரப்பில் இருந்து ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்த வண்ணம் இருக் கிறது. சரிந்துவிழும் பாலங்கள், நீர்க்கசியும் விளையாட்டுத்தள கூரைகள் என தினம் தோறும் படிக்கும் செய்திகளை பார்க்கும் போது, இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் உண் மையெனவே நம்ப வேண்டியிருக்கிறது. சமீ பத்தில் மத்திய கண்காணிப்பு ஆணையம் வெளியிட்ட ஒரு இடைக்கால அறிக்கை இந்த ஊழல் குற்றச்சாட்டுகளை ஊர்ஜிதப் படுத்துகிறது. அந்த அறிக்கையின்படி தகுதி யற்ற நிறுவனங்களுக்கு அதிக விலையில் பணிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும், பணிகள் ஒப்பந்த முறையில் கொடுக்கப்பட்ட தில் பல முறைகேடுகளும், குளறுபடிகளும் உள்ளன என்றும், புதுப்பிக்க வேண்டிய தேவை இல்லாத இடங்களையும் புதுப்பிப்ப தற்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றும், கட்டுமானப் பணிகளின் தரமின்மை போன்ற விசயங்கள் அந்த அறிக்கையில் சுட்டிக்காட் டப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களு டன் ஒப்பந்தம் செய்தது முதல் பல விளை யாட்டு பொருட்களை வாங்கியது வரை அனைத்திலும் ஊழல் இருப்பது தெளிவாக வெளிவந்துள்ளது.

இதைத் தவிர இந்த விளையாட்டு மற்றும் அதன் தொடர்பான கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர் ஒப்பந்த தொழிலாளர் கள் மிகவும் மோசமான முறையில் சுரண்டப் பட்டு வருகின்றனர். மக்கள் உரிமைக்காக போராடும் இயக்கமான பி.யு.டி.ஆர்(ஞ.ரு.னு.சு) வெளியிட்டுள்ள அறிக்கை இந்த சுரண்டலை ஊர்ஜிதப்படுத்துகிறது. இந்த அறிக்கையின் படி தொழிலாளர்களுக்கான அனைத்து பாது காப்பு சட்டங்களும் மீறப்பட்டுள்ளது. தொழி லாளர்களுக்கான குறைந்தபட்ச கூலி மறுக் கப்பட்டுள்ளது, குறிப்பிட்ட வேலை நேரம் கடைப்பிடிக்கப்படாமல் அதிக நேரம் வேலை செய்ய பணிக்கப்படுகின்றனர். போதிய குடிநீர், குளியலறை மற்றும் கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் அறவே வழங்கப்படவில்லை. ஒப் பந்தக் காரர்கள் அரசுடன் இணைந்து இந்த மாபெ ரும் ஊழலில் பங்கு வகிப்பதாகவும், இதை எதிர்த்து முறையீடு செய்ய வழியின்றி தொழி லாளர்கள் அடிமை வாழ்க்கை வாழ்கின்றனர் என்று இந்த அறிக்கை கூறுகிறது. அவர்கள் வேலை செய்யும் இடம் மற்றும் தங்கும் இடங் களில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும், அவர்களுக்கான குறைந்தபட்ச மருத்துவ வசதிகூட செய்துதரப்படவில்லை என்கிறது இந்த அறிக்கை. இப்படி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அடிப்படை உரிமை மற்றும் வசதிகள் மறுக்கப்பட்டு மிகவும் மோசமான முறையில் சுரண்டப்படுவதுதான் உலகத்தரம் என்று அரசு கருதுகிறது என்பதே இதிலிருந்து நமக்கு புரிகிறது.

இப்படிப்பட்ட முறைகேடுகள், காலதாம தம், ஊழல், சுரண்டல், மற்றும் தரமில்லா கட்டுமான பணிகளுடன் தொடங்கும் இந்த காமன்வெல்த் விளையட்டுகள், இந்தியாவை எப்படி உலகத் தரத்திற்கு உயர்த்தும்?

(கட்டுரையாளர், ஆராய்ச்சி மாணவர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுதில்லி.)

பாபர் மசூதி: வரலாற்றுச் சான்றுகள் -டி.ஞானையா

வால்மீகி இராமாயணத்தின்படி இராம பிரான் திரேத்தா யுகத்தில் பிறந்தவர். அவரு டைய ஆட்சியான இராமராஜ்யம் பாரதத்தின் பொற்காலம் எனப்படுகின்றது. (அன்று தென் னகம் பாரதத்தின் ஒரு பகுதியாக இருக்க வில்லை!) திரேத்தாயுகம் மட்டும் பன்னி ரண்டு லட்சத்து தொண்ணூற்று எட்டாயிரம் ஆண்டுகளாகும் (12,98,000), இதற்குப்பின் துவாபராயுகம், எட்டுலட்சத்து அறுபத்தி நான்காயிரம் (8,64,000), இப்பொழுது நடப்பது கலியுகம், நான்கு லட்சத்து முப்பத்து இரண்டா யிரம் (4,32,000); அடுத்து வரப்போவது கிருத கயுகம். திரேத்தாயுகத்தில் பிறந்த காரணத்தி னால் தான் பாஜக ஆட்சிபுரியும் மாநிலங்க ளில் பள்ளிப் பாடநூல்களில் “ஒன்பது லட் சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இராம பிரான் ராமராஜ்யத்தின் பொற்காலம் இன்றும் இந்திய மக்களின் உள்ளங்களில் பசுமை யாகத் தைத்து நிற்கின்றது” என்று எழுதப் பட்டுள்ளதைக் காணலாம்.

லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இராமபிரானின் பிறந்த இடத்தை அயோத்தியில் கறாராக அடையாளம் “கண்டுபிடித்துள்ளது” பாஜக - ஆர்எஸ்எஸ்!

அயோத்தியில் பாப்ரி மசூதி 1528ம் ஆண்டு பாபரின் ஆளுனர் மீர்பாக்கியால் கட்டப்பட்டது (பதிவு செய்யப்பட்ட வரலாறு). பாபர்தான் முகலாய சாம்ராஜ்யத்தை நிறுவி னார் (1526-1855). இவருடைய மகன் ஹூமா யுன் (1530-1556), 26 ஆண்டுகளும், இவரு டைய மகன் மாபெரும் அக்பர் (1556 - 1605), 49 ஆண்டுகளும் ஆண்டனர். இந்த அக்பர் மாமன்னனைத்தான் இந்திய தேசியத்தை உருவாக்கிய தந்தை என்று ஜவஹர்லால் நேரு தனது வரலாற்றின் காட்சிகள் என்ற நூலில் குறிப்பிடுகிறார்.பாபர் ஒரு இலக்கிய வாதி. இவருடைய இந்திய குறிப்புகள் பாபர் நாமா எனப்படுகின்றன.

இவர் தனது மகன் ஹூமாயினுக்கு எழுதி வைத்துச் சென்ற உயிலில் (மரண சாசனம்) : “எனது மகனே! இந்தியாவில் பல மதப்பிரிவுகளைச் சார்ந்த மக்கள் வாழ்கின்ற னர். இப்படிப்பட்ட ஒரு நாட்டின் ஆட்சிப் பொறுப்பை மன்னாதி மன்னரான அல்லா உனது கரங்களில் ஒப்படைத்திருப்பதற்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும். ஆதலால் உனது கடமைகளாவன.

உன்னைப் போன்றோரை மததுவேஷம் பாதித்துவிட அனுமதிக்கக்கூடாது. மக்களின் எல்லாப்பிரிவினரின் மத ஆசாரங்கள் மற்றும் உணர்வுகளை கணக்கிலெடுத்துக் கொள்வது அவசியம்.

குறிப்பாக பசுவதை செய்வதை தவிர்த்து விடு, எந்த மக்கள் பிரிவினரின் வழிபாட்டுத் தலங்களையும் அழிக்காதே, அடக்குமுறை வாளால் அல்லாமல் அன்பெனும் வாளாலும், கடமை உணர்வாலும்தான் இஸ்லாமை சிறப்பான முறையில் பரவச் செய்யலாம்.

இப்படி உயில் எழுதி வைத்துச் சென்ற மாமன்னன் பாபர்தான் அயோத்தியில் இராமர் பிறந்த இடத்திலிருந்த (ராமர் ஜென்மபூமி) இராமர் கோவிலை இடித்துவிட்டு மசூதியைக் கட்டினார் என்று இந்துத்துவாவாதிகள் வாய்க் கூசாமல் அபாண்ட பழி சுமத்துகின்றனர்.

இம்மசூதி கட்டப்பட்ட காலத்தில் (16ம் நூற்றாண்டில்) வாழ்ந்தவர் துளசிதாசர். இவர்தான் 1575ம் ஆண்டு பேச்சுமொழியில் (அவதி - இந்தி) இராமசரித்திரமனாஸ் என்ற ராமாயணம் எழுதிய இராமபக்தர். புரியாத பழமை சமஸ்கிருதத்திலுள்ள வால்மீகி இரா மாயணம் மக்கள் படித்ததில்லை. படிக்கவும் இயலாது. இது “தெய்வமொழி!” சாதாரண இந்துமக்கள் வடநாட்டில் துளசிதாஸ் ராமா யணத்தைப் படித்துதான் பக்தி பரவசமடைந்து இல்லங்களில் ராமசரித்திரமனாஸ் வைத்துக் கொள்கிறார்கள். துளசிதாசர் வேறுபல பக்தி இலக்கிய நூல்கள் எழுதியுள்ளார். இவர் ஒரு துறவி, மதப்போதகர், மதக்கவிஞர். இவருக்குப் பிறகுதான் ராமாயணம் பிரபல்யமானது. பாப்ரி மசூதி கட்டப்பட்ட 30, 40 ஆண்டுகளுக்குள் இவை எல்லாம் எழுதப்பட்டன.

அக்பரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். துளசிதாசருக்கு நெருங்கிய முஸ்லீம் நண்பர் ரஹீம்கான் கானா என்பவர். இவர் சமஸ்கிரு தத்திலும், இந்தியிலும் (அவதி) பிரசித்திபெற்ற கவிஞர், இவர்கள் இருவரின் விருப்பப்படி அக்பர் ஆட்சியின் நிதி அமைச்சர் தோடர் மால் (இந்து) வாரணாசியில் அனுமார் கோவில் கட்டிக்கொள்ள அக்பரின் வாழ்த்துக்களுடன் நிலம் தானமாகக் கொடுத்து இன்றும் துளசி அனுமார் மந்திர் அங்கு நிமிர்ந்து நிற்கின்றது. இராமர்கோவில் இடிக்கப்பட்டிருந்தால் தனது எதிர்ப்பை, வேதனையை வெளியிட்டிருப்பார். இராமர்கோவில் அயோத்தியிலும், வாரணாசி யிலும் கட்ட அக்பரிடம் இடம் கேட்டிருந்தால் அல்லது பாபரால் இடிக்கப்பட்டிருந்தால் அக் பர் நிச்சயமாக இராமர்கோவில் கட்டிக் கொடுத்திருப்பார். அயோத்தியில் இன்றும் எழில்மிகு காட்சியளிக்கும் பிரம்மாண்டமான அனுமார் மாளிகை கூட 1754ல் நவாப் மன்சூர் அலியால் கட்டப்பட்டது. இவையாவும் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள். வரலாற்றுப் புரட்டர் கள் இவைகளையெல்லாம் இருட்டடிப்பு செய்து வருகின்றனர். பாடநூல்களில் “செக் யூலர்” கல்வியில் இடம்பெறுவதில்லையே!

சீக்கிய மதப்பிரிவு நிறுவனர் குருநானக் (1469-1538), பாப்ரி மசூதி கட்டப்பட்ட காலத் தில் வாழ்ந்த பெருமகனார். காஷ்மீர் முதல் இலங்கை வரை, சோமநாத், வாரணாசி, மதுரா, பிருந்தாவன் என விரிவான சுற்றுப்பயணம் செய்தவர். மெக்கா, மெதினாவிற்குக் கூட சென்று வந்துள்ளவர். பாப்ரி மசூதி கட்டப்பட்ட பிறகு பத்து ஆண்டுகள் வாழ்ந்த பேரறிஞர், இராமர் கோவில் இடிக்கப்பட்டிருந்தால் அமைதி காத்திருக்கமாட்டார். பிரபல வங்காள சனாதன பிராமண முனிவர் சைத்தன்யா, 1486ல் பிறந்து பாப்ரி மசூதி கட்டப்பட்ட பிறகு 35 ஆண்டுகள் வரை வாழ்ந்தவர். இராமர் கோவில் இடிக்கப்பட்டிருந்தால் இவர் வாய் மூடி மவுனியாக இருந்து இருக்கமாட்டார்.

இக்கட்டத்திற்குபின் தோன்றிய முனி வர்களோ, 19ஆம் நூற்றாண்டின் பிரபலமான இந்து முன்னோடிகள் ராஜாராம் மோகன்ராய் (பிரம்மசமாஜம்), தயானந்த சரஸ்வதி (ஆரிய சமாஜம்), தேவேந்திரநாத் தாகூர் போன்றவர் களோ காங்கிரசின் பிரபல இந்து தலைவர் களான மதன்மோகன் மாளவியா, லாலா லஜ பதிராய், சுவாமி ஷ்ரதானந்தா, பால கங்காதர் திலகர், காந்தி, மோதிலால் நேரு போன்றவர் கள் எவருமே இராமர் கோவில் இடிக்கப்பட்ட தாக ஏன் அறிந்திருக்கவில்லை? பாஜகவின் பதில் என்ன?

முதல் சர்ச்சை - பிரிட்டிஷ் விஷமம்!
அலகாபாத் பல்கலைக் கழகத்தின் “மத்திய நவீனகால வரலாற்றுத்துறை முதல் வர் (ழநயன டிக வாந னநயீயசவஅநவே டிக அநனநைஎயட யனே அடினநசn ாளைவடிசல) பேராசிரியர் டாக்டர் சுஷில் மஹிவத்சவா 1985ஜனவரி ப்ரோப் (யீசடிநெ) என்ற மாத இதழில் பாப்ரி மசூதி சர்ச்சை பற்றி கூறுவதாவது;-

ஃபைசாபாத்தில் (கயணையயென)சிப்பாய் கலகம் வெடித்தபொழுது அயோத்தி மகந்த்கள் (மடா திபதிகள்) பிரிட்டிஷாரை பகிரங்கமாக ஆத ரித்தனர். பிரிட்டிஷ் ராணுவத்திற்கு தங்கும் இடமும் உணவுப் பொருள்களும் கொடுத்து உதவினர்.சிப்பாய் கலகம் அடக்கப்பட்டபின் மகந்த்களுக்கு சன்மானமாக பாப்ரி சொத்துரி மையுடன் வழங்கப்பட்டது. இராமர் பிறந்ததை குறிக்கும் வகையில் மேடை அமைத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது.பாப்ரி மசூதி யையும் இந்த மேடையையும் பிரித்துக்காட் டும் வேலியும்(கநnஉந)இவைகளுக்கிடையில் அமைக்கப்பட்டது என்று ஃபைசாபாத் மாவட்ட கெஜெட்டை ஆய்வுசெய்து எழுதியுள்ளார். இராமர் பிறந்த இடம் மசூதி வளாகத்தில்தான் உள்ளது என்று உரிமை கொண்டாட இந்துக் களை பிரிட்டிஷார் ஊக்குவித்தனர் என்றும் ஸ்ரீவத்சவா எழுதுகின்றார்.

இந்தப்பிரச்சனை 1853ஆம்ஆண்டு முதல் முதலில் சிலரால் எழுப்பிவிடப்பட்ட பொழுது இந்துக்களும் முஸ்லிம்களும் ஊர் பஞ்சாயத்துப்பேசி 1855ல் ஒரு உடன்பாடு கண்டனர். பிரச்சனை தலை தூக்காமல் நான்கு ஆண்டுகள் அமைதி நிலவியது. 1859ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மாவட்ட ஆட்சியர் வடக்கு நுழைவாயிலின் மூலம் மட்டும்தான் முஸ்லிம் நுழைய வேண்டும் என உத்தரவு போட்டார். ஊர்மக்கள் ஆட்சேபம் கிளப்பி பஞ் சாயத்து முடிவை மாற்றக்கூடாது எனக்குரல் எழுப்பினர். ஆனால் பிரிட்டிஷ் மாவட்ட ஆட் சியர் உடனே தலையிட்டு பஞ்சாயத்து உடன் பாட்டில் கையொப்பமிட்ட இந்து-முஸ்லிம் பெரியவர்களை ஃபைசாபாத் சாலையோர முள்ள பெரிய ஆலமரத்தில் தூக்கிலிட்டார்.

ஆனால் இந்து முஸ்லிம் மக்கள் இந்த ஆலமரத்தை புனித வழிபாட்டு நினைவுச் சின்னமாக்கிவிட்டனர். ஆதலால் பிரிட்டிஷ் கமிஷனர் தலையிட்டு 1860ஆம் ஆண்டு அந்த மரத்தை வேரோடு பிடுங்கி எறிந்து புனித உடன்பாட்டுத் தடயங்களை அளித்தனர்.

இதற்குப்பின் 1949 வரை (89 ஆண்டுகள்) மக்கள் அமைதிகாத்து முஸ்லிம் மக்கள் வடக்கு வாயில் வழியாகவே சென்று தொழுகை நடத்தி வந்தனர். நாடு விடுதலைபெற்றபின் 1949ஆம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி நள்ளிர வில் 50, 60 பேர் கொண்ட ஒரு ஆர்எஸ்எஸ் அணி மசூதி வாயிலை உடைத்து நுழைந்து அதன் மத்திய மண்டபத்தில் (னுடிஅந) குழந் தை இராமர், சீதா பிராட்டியார் ஆகியோர் சிலைகளை நட்டுவைத்து இவர்களின் திரு உருவங்களை சுவர்களில் காவி மஞ்சள் நிறத் தில் வரைந்து வைத்தார்கள். இராமர் தோன்றி விட்டதாக புரளியை மறுநாள் காலை கிளப்பி விட்டனர். காவல்துறை கான்ஸ்டபிள் ஹன்ஸ் ராஜ் இதைத் தடுக்க முயன்றும் பயனில்லை.

மறுநாள் (1949 டிசம்பர் 22) காலை காவலர் மாதாபிரசாத் இதுபற்றி புகார் செய்து முதல் தகவல் அறிக்கை எழுதினார். இவ்வறிக்கை யில் ஆர்எஸ்எஸ்காரர்களான ராம்தாஸ், ராம் சுக்லாதாஸ், சுதர்சனதாஸ் ஆகியோர் 50, 60 பேர் கும்பலாக வந்து இதைச் செய்ததாக எழுதப்பட்டுள்ளது.

இந்த வெடிகுண்டை பாப்ரிமசூதிக்குள் வைக்க திட்டமிட்டதே அன்றைய மாவட்ட ஆட்சியர் கே.கே.நய்யார்தான். இவர் ஆர்எஸ் எஸ் பிரமுகர், தனது திட்டத்தை நிறைவேற்றி பிறகு சிறிது காலத்திலேயே வேலையை ராஜினாமா செய்து ஜனசங் (முன்னாள் பாஜக) கட்சியில் பகிரங்கமாக சேர்ந்து பணியாற்றி நாடாளுமன்றத்தில் ஜனசங் எம்.பி.யாக (1967-70) உயர்த்தப்பட்டார். இறுதியில் 1992ல் மசூதியே இடிக்கப்பட்டது.

காஷ்மீர்: எண்ணெய் ஊற்றும் இந்துத்துவம் -அசோகன் முத்துசாமி

“என்ன நடக்கும் என்றால் வெறும் கூடு மட்டும்தான் இருக்கும். அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவை நீங்கள் வைத்துக் கொள்கிறீர்களோ அல்லது இல் லையோ, அதன் உள்ளடக்கம் முழுவதும் காலி செய்யப்பட்டுவிட்டது.’’
(ஏ.ஜி.நூரனி, பிரன்ட்லைன், செப்டம்பர் 24, 2010)

இது இப்போது யாரும் கூறியது அல்ல. கூறியவர் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த வரோ அல்லது அரசியல் விமர்சகரோ அல்ல. 1964ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சர் குல்சாரி லால் நந்தா நாடாளு மன்றத்தில் பெருமையுடன் கூறிக் கொண்டது இது. நிற்க.

ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் சேரு வதற்கு ஒப்புக் கொண்டபோது போடப் பட்ட ஒப்பந்தம் அப்போதே மீறப்பட்டது. (அதாவது உடனடியாக மீறப்பட்டது.) அதன் சுயாட்சி பாதுகாக்கப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதி அதற்காக வகுக்கப்பட்ட அரசியல் சட்ட விதிகளா லேயே அழிக்கப்பட்டது என்று நூரனி மேலும் விளக்குகின்றார். ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்படாத மத்திய அரசாங்கத் தின் அதிகாரம் எதுவும் மாநிலத்திற்கு நீட் டிக்கப்படும் விஷயத்தில் மாநில அரசாங் கத்தின் சம்மதத்தைப் பெற வேண்டும் என்று அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு கூறுகின்றது. அதன் 2வது உட் பிரிவு அப்படி சம்மதம் தெரிவிப்பதற்கான மாநில அரசாங்கத்தின் அதிகாரத்தை மிகத் தெளிவாகக் கட்டுப்படுத்துகின்றது. அதாவது, மாநில, மத்திய அரசாங்கங்கள் தன்னிச்சையாக எதுவும் செய்துவிட முடி யாது. மாநில, மத்திய சட்டமன்றங்கள் அதை அங்கீகரிக்க வேண்டும். இல்லை என்றால் செல்லாது. 1957ம் ஆண்டு அர சியல் நிர்ணய சபையில் நிறைவேற்றப் பட்ட ஒரு தீர்மானத்தின் மூலம் அது கலைக்கப்பட்டவுடன் ஜி.எல்.நந்தா என்ன கூறினார் தெரியுமா?

‘அரசியல் நிர்ணய சபை இப்போது கலைக்கப்பட்டுவிட்டது. ஆதலால், 370ன் 2வது பிரிவு தேவையற்றதாக ஆகி விட்டது. பிரிவு 3ன் படி குடியரசுத் தலை வர் செயல்படுவதற்கு இப்போது தடை யற்ற அதிகாரம் இருக்கின்றது. மத்திய அதிகாரத்தை நீட்டிப்பதற்கு இதைப் பயன்படுத்த முடியும் எனும்போது அதை (370வது பிரிவு) ஏன் ரத்து வேண்டும்? என்று அவர் நாடாளுமன்ற உறுப்பினர் களைப் பார்த்துக் கேட்டார். ’ (மேகு இதழ்)

இதுதான் காஷ்மீருக்கு வழங்கப்பட் டுள்ள சிறப்பு அந்தஸ்தின் உண்மையான நிலைமை. இதைத்தான் ரத்து செய்ய வேண்டும் என்று இந்துத்துவவாதிகள் தொடர்ந்து சாமியாடி வருகின்றார்கள். ஆனால், காங்கிரசோ அதை வைத்துக் கொண்டே மற்ற மாநிலங்களில் உள்ள சாதாரண உரிமைகளைக் கூட காஷ்மீர் மக்களுக்கு வழங்க மறுத்திருக்கின்றது. மறுக்கின்றது.

‘மாநிலப் பட்டியலில் உள்ள ஒரு துறை மத்தியப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டுமானால் நாடாளுமன்றம் மூன் றில் இரண்டு பங்கு பெரும்பான்மையில் அரசியல் சட்டத்திருத்தத்தை மேற் கொள்ள வேண்டும். சரிபாதி மாநிலங்கள் (மாநில சட்டமன்றங்கள்) அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் (அரசியல் சட்டம் 368 வது பிரிவின் 2வது உட்பிரிவு). ஆனால், 370வது பிரிவின்படி, காஷ்மீர் விஷயத் தில் வெறும் ஒரு அரசு உத்தரவின் மூலம் மாநிலப் பட்டியலில் உள்ள அனைத்து துறைகளையும் மத்தியப் பட்டியலுக்கு எடுத்துக் கொள்ளலாம்; மாநில அரசாங் கம் அதை ஏற்றுக் கொண்டால் (மோசடி யாக நடத்தப்பட்ட தேர்தல் அல்லது விரும்பிய முடிவு வருகின்ற வகையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தேர்தல் மூல மாகவோ, காங்கிரஸ் ஆதரவைச் சார்ந்து அதிகாரத்தில் இருக்கின்ற அரசாங்கம்).’ (நூரணி, மே.கு. இதழ்).

பாஜகவைப் பற்றிச் சொல்ல வேண்டி யதில்லை. எப்போதுமே இல்லாததை இருப்பதாகச் சொல்லி, இருப்பதையும் பறித்துக் கொள்வதுதான் அதன் வேலை. சில மாதங்களுக்கு முன்னால் நாடெங்கும் ஒரு போராட்டத்தை நடத்தியது. அதன் மையமான கோரிக்கைகளில் ஒன்று இஸ் லாமிய மாணவர்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் கல்வி உதவித் தொகை (சலுகை என்கிறது பாஜக) வழங்குகின்றது மத்திய அரசு. ஆனால், இந்து மாணவர்களுக்கு எதுவும் வழங்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டியது. நாடெங்கும் மத்திய அரசாங்கத்தாலும், மாநில அரசாங்கங்களா லும் பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் பழங் குடியின மாணவர்களுக்கு பல பத்தாண்டு களாக கல்வி உதவித்தொகை வழங்கப் பட்டு வருகின்றது. அது பல ஆயிரம் கோடிகள் தகும். ஆனால், இந்து மாணவர் களுக்கு எதுவுமே கொடுக்கப் படுவதில்லை என்பதன் மூலம் அந்த மாணவர்கள் இந்துக்கள் இல்லை என் கிறது பாஜக. அதுதானே பொருள்? பின் யார்தான் பாஜகவின் இலக்கணப்படி இந் துக்கள்?

இந்தக் குற்றச்சாட்டைக் கூறுவதன் மூலம் இதுநாள் வரையிலும் ஏதோ வேண் டத்தகாத குப்பை போல் நடத்தப்பட்டு வந்த இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் அற்ப உதவியையும் தடுக்க முயல்கின்றது.

காஷ்மீருக்கு உண்மையில் சிறப்பு அந்தஸ்து எதுவும் நடைமுறையில் இல் லை. 370வது பிரிவு நடைமுறையில் வெறும் காலி டப்பாதான். அது மட்டுமின்றி, அந்தக் காலி டப்பாவைப் பயன்படுத்தி அம்மாநில மக்களுக்கு அடிப்படை உரி மைகள் கூட மறுக்கப்பட்டு வருகின்றது. எனினும், அது இருந்தால்தானே அதை முறையாகப் பயன்படுத்துங்கள் என்கிற கோரிக்கை எழும். அதுவே இல்லாமல் செய்துவிட்டால்? பாஜகவின் திட்டம் அதுதான்.

ஆனால், இந்துத்துவவாதிகளுக்கு பிரச்சனை தீர்வதில் விருப்பமில்லை. நாடு எப்போதும் பற்றி எரிந்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் கள். அதனால்தான், சீத்தாராம் யெச்சூரியும், மற்ற சில தலைவர்களும் பிரிவினைவா தத் தலைவர்கள் சையத் அலி ஷா கிலானி, மிர்வாய்ஸ் உமர்பாரூக், யாசின் மாலிக் போன்றவர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியதை எதிர்க்கின்றனர். அவர்களைச் சந்தித்த தலைவர்கள் குழு வின் சார்பாக சந்திக்கவில்லை, தனிப் பட்ட முறையில் சந்தித்தனர் என்று பாஜக வின் சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருக்கின்றார். போதாக்குறைக்கு ஜம்மு-காஷ்மீர் மாநில பாஜக இந்தக்குழுவை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துள்ளது. காரணம், விஎச்பி, பஜ்ரங்தளம் போன்ற தேசியவாத அமைப்பு களை இந்தக் குழுவில் கலந்து கொள்ளும் படி அழைக்கவில்லை என்பதாம். நாச மாய்ப் போச்சு. மேலும், ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கூடாது, ராணுவத்தை திரும்ப அழைக்கக் கூடாது என்றும் சங்பரிவாரம் கூறுகின்றது. துப் பாக்கி முனையில் ‘அமைதியையும்’ நிலைநாட்ட முடியாது. ஒற்றுமையையும் காப்பாற்ற முடியாது.

ஜம்மு-காஷ்மீர் நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகள் தொடர வேண்டும் - பீபிள் டேமொக்ரசி தலையங்கம்

இறுதியாக, செப்டம்பர் 20-21 தேதி களில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு ஜம்மு - காஷ்மீருக்குப் பயணம் மேற்கொண் டது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் நூறு நாட் களுக்கும் மேலாக பாதுகாப்புப் படையின ருக்கும் மக்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 108 இளம் உயிர்கள் பலியானதை அடுத்து இந்தக்குழு சென்றது. ஜூன் 11 அன்று அங்கே கிளர்ச்சி துவங்கிய உடனேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தை நடத்திட வேண்டும் என்று கோரினோம். ஆகஸ்ட் 6 அன்று நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக விவாதம் நடைபெற்ற சமயத்திலும் இதனை நாம் வலியுறுத்தினோம். புனித ரம் ஜான் மாதம் துவங்குவதற்கு முன்னரே இத னைச் செய்திடுமாறும் நாம் கேட்டுக் கொண் டோம். அப்போது அரசுத் தரப்பில், அங்கே இயல்பு வாழ்க்கைத் திரும்பிய பின் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று வாதிடப்பட்டது. இயல்பு வாழ்க்கைத் திரும்பு வதற்கே இத்தகைய நடவடிக்கைகள் அவ சியம் என்று நாம் திரும்பத் திரும்ப அரசை வலியுறுத்தி வந்தோம். அந்த சமயத்தில் இதனை ஏற்க அரசு மறுத்ததை அடுத்து, அங்கே பதட்ட நிலைமைகள் மேலும் அதிக ரிக்கவும் அதன் விளைவாக எண்ணற்ற அப் பாவி உயிர்கள் பலியாகவும் நேர்ந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதி கள் குழு ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு ஆகிய இரு நகரங்களிலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும், மக்களின் பல்வேறு பிரிவினரையும் சந்தித்தது. மாநில மக்களின் துன்ப துயரங்களை பிரதிநிதிகள் குழுவும் மிகவும் கவலையுடன் கேட்டது. மக்களுக்குத் தங்களின் தார்மீக ஆதரவைத் தெரிவித்தது. முதலாவதாக, அனைத்து அரசியல் கட்சித் தலைமைகளுக்கும், அனைத்துப் பிரிவு மக்க ளுக்கும் மாநிலத்தில் இயல்பு வாழ்க்கையை யும் அமைதியையும் மீளக் கொண்டுவரக் கூடிய விதத்தில் அனைவரும் ஒன்றுசேரு மாறு பிரதானமாக வேண்டுகோள் விடுத்தது. பிரச்சனைகள் அனைத்தையும் பேச்சுவார்த் தைகள் மூலம் தீர்க்க முன்வருமாறும் கேட்டுக் கொண்டது. இந்த உணர்வின் அடிப்படை யிலேயே பிரதிநிதிகள் குழுவில் சென்ற உறுப் பினர்களில் சிலர் மாநிலத்தில் இயல்பு வாழ்க் கைத் திரும்பவும், மக்கள் மீதான துன்ப துயரங் களைப் போக்கிடவும், அப்பாவி உயிர்கள் பலி யாகாமல் பாதுகாத்திடவும் முன்வர வேண்டும் என்று கோருவதற்காக காஷ்மீரில் இயங்கி வந்த பிரிவினை இயக்க தலைவர்கள் பல ரைச் சந்திக்க அழைப்பு விடுத்தனர். ஆனால் அவர்கள் அந்த அழைப்பை ஏற்கவில்லை. பின்னர், பிரதிநிதிகள் குழுவினரே அவர்கள் இடத்திற்குச் சென்றனர். இவ்வாறு திடீரென்று எவரும் எதிர்பாராதவிதத்தில் எடுக்கப்பட்ட நட வடிக்கையானது, தற்போது மாநிலத்தில் நில வும் துன்ப துயரங்களைப் போக்குவதற்காக வும், மக்களுக்கு நிவாரணம் அளித்து இயல்பு வாழ்க்கையை மீளக் கொண்டு வருவதற்காக வும், நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைமை மிகவும் நேர்மையாக நடந்து கொண் டதை காஷ்மீர் பள்ளத்தாக்கின் அனைத்துப் பகுதி மக்கள் மத்தியிலும் கொண்டு சென்றது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஓர் அங்கம் என்று ஒரு மனதாக நிறைவேற்றப் பட்ட 1994 தீர்மானத்தின் அடிப்படையிலேயே நாடாளுமன்றப் பிரதிநிதிகள் குழுவின் அணுகுமுறை அமைந்திருந்தது.

ஸ்ரீநகரில் பல்வேறு பிரிவு மக்களுடனும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருப வர்களுடனும் நடத்திய பேச்சு வார்த்தைகளி லிருந்து, அவர்கள் மிகவும் மனம் நொந்து, நம் பிக்கையற்ற நிலையில் இருப்பதை உணர முடிந்தது. உடனடியாக அங்கே மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இடது சாரிக் கட்சிகள் சார்பில் ஏற்கனவே அரசுக்கு கோரிக்கைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இவற்றில் எதுவுமே இதுவரை அமல் படுத்தப்படவில்லை. இது மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மையையும் அவநம்பிக்கை யையும் ஏற்படுத்தி இருக்கிறது. மக்கள் மத்தி யில் உள்ள அவநம்பிக்கையைப் போக்கிட வும், அரசின் மீது நம்பிக்கையில்லாமல் மக் கள் இருப்பதையும் போக்கிட வேண்டுமா னால் உடனடியாக அரசு, இடதுசாரிகள் முன் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும்.

அடுத்து, ஜம்முவில் பிரதிநிதிகள் குழு வைச் சந்தித்தவர்கள், மத்திய அரசின் அணுகுமுறை முழுமையாக ‘‘காஷ்மீரை மையமாக’’ வைத்தே இருப்பதாகவும், ஜம்மு மற்றும் லடாக் பகுதிகளை அது முழுமை யாகப் புறக்கணித்துவிட்டதாகவும் கூறினார் கள். பிரதிநிதிகள் குழுவிலிருந்து சிலர், புலம் பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்டுகள் முகாம்க ளுக்கு விஜயம் செய்தபோது, அவர்கள் அளித்த விவரங்கள், காஷ்மீரில் உள்ள பிரச்சனைக ளின் மற்றொரு பக்கத்தைக் காட்டின. பள்ளத் தாக்கிலிருந்து 21 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாயமாக வெளியேற்றப்பட்ட இவர்களில், பெரும்பாலான குடும்பங்களுக்கு இன்றைய தேதி வரையிலும் நிரந்தரக் குடியிருப்பு என்று எதுவும் இல்லை. மத்திய அரசாலும் மாநில அர சாலும் அறிவிக்கப்பட்ட அனைத்து உறுதி மொழிகளும் பெருமளவில் இன்றளவும் நிறை வேற்றப்படாத நிலையிலேயே உள்ளன. காஷ்மீர் பண்டிட்டுகள் மற்றும் புலம்பெயர்ந்து வந் துள்ள மக்களின் துன்ப துயரங்களும் உடனடி யாகப் போக்கப்பட வேண்டும்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல நூறு ஆண்டு களாக, முஸ்லிம்களும் பண்டிட்டுகளும் மிக வும் நல்லிணக்கத்துடன் கூட்டாகவே வாழ்ந்து, நாட்டின் சமய ஒற்றுமைக்கு வலு வான அடிப்படைத் தூண்களாக விளங்கி வந் துள்ளனர். நவீன மதச்சார்பற்ற ஜனநாயக இந் தியாவிற்கு அடித்தளமாக விளங்கும் இத்த கைய நல்லிணக்கத்தை அழித்திடக் கூடிய வகையில் அரசின் செயலற்றத் தன்மை இருந்து விடக் கூடாது.

எனவே, இப்பிரச்சனைகளைக் களைந் திட அரசு அவசரகதியில் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். அங்கே இயல்பு வாழ்க் கைத் திரும்புவது என்பது ஜம்மு - காஷ்மீர் மக்களின் துன்ப துயரங்களைப் போக்குவதற் காக மட்டுமல்ல, நாட்டின் நவீன மதச்சார்பற்ற குடியரசை வலுப்படுத்துவதற்கும் வசியமாகும்.

மத்திய அரசும் மாநில அரசும் உருப்படி யான, மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தக்கூ டிய விதத்தில் நடவடிக்கைகளை எடுத்திட வைப்பதற்கு உதவிடும் வகையில் நாடாளு மன்ற பிரதிநிதிகள் குழு பயணம் பயன்பட வேண்டும். இடதுசாரிக் கட்சிகள் சார்பில் முன்வக்கப்பட்ட தீர்மானகரமான நடவடிக் கைகள் இதற்கு அடிப்படையாக அமைந்திட வேண்டும். கடைசியாக, மத்திய அரசு, மத் தியக் குற்றப் புலனாய்வுத் துறையாலோ அல் லது வேறு ஏஜென்சிகளாலோ குற்றம் சாட்டப் பட்டுள்ள பாதுகாப்புப் படையினருக்கு எதி ராக நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். மேலும், சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகள் குறித்தும் மறு பரிசீலனை மேற்கொள்ளப்பட வேண்டும். அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளுடன் சிறை யிலிருப்பவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

தமிழில்: ச.வீரமணி

அநீதிகளுக்கு எதிராக ஆர்த்தெழுவோம் - பி.சம்பத்தோழர் சீனிவாசராவ்...

இந்தப் பெயரைக் கேட்டால் அன்றைய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்ட நிலப்பிரபுக்களும், ஆதிக்க சக்திகளும், அதிகார வர்க்கமும், அதிர்ந்து போவார்கள். இன்றும் அவரது நினைவு இச்சக்திகளுக்கு அச்சமூட்டும் ஒன் றாகவே உள்ளது. மறுபுறம் தஞ்சை மாவட்ட விவசாயிகள், மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கும், தலித் மக்க ளுக்கும் அவரது பெயர் உத்வேகமும், போர்க்குணமும் ஊட்டுவதாக இருந்தது. இன்றளவும் அவரது நினைவு கிராமப்புற விவசாய இயக்கத்திற்கும் தலித் மக்களுக்கும் நம்பிக்கையின் சின்னமாக விளங்குகிறது.

காட்டுத்தீயாக பரவிய விவசாய இயக்கம்
முதன் முதலில் மன்னார்குடி தாலுகா வில் உள்ள தென்பரை கிராமத்தில்தான் விவசாயிகள் சங்கம் துவக்கப்பட்டது. இக்கிராமத்தில் விவசாயிகள் சங்கம் ஆதீனத்தை எதிர்த்து நடத்திய போராட் டம் நிலப்பிரபுக்கள் ஏவிவிட்ட குண்டர் களின் தாக்குதல், காவல்துறையினரின் கைது நடவடிக்கைகள் போன்ற அடக்கு முறைகளை எதிர்கொண்டு மகத்தான விவசாயிகள், விவசாயத்தொழிலாளர் களின் ஒற்றுமையால் வெற்றியடைந்தது. அதன் பிறகு தஞ்சை மாவட்டம் முழு வதும் ஏற்பட்ட நிலைமையைப் பற்றி தோழர் சீனிவாசராவே கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

“ அன்று முதல் தாழ்த்தப்பட்ட விவ சாயிகளிடமும், பண்ணையாட்களி டமும், விவசாயிகள் சங்கம் காட்டுத்தீ போல பற்றிப்பரவ ஆரம்பித்து விட்டது. சமூகத்துறையிலும், பொருளா தாரத்துறையிலும் தாக்கப்பட்டுக் கிடந்த இந்த மக்களுக்கு விவசாயிகள் சங்கம் உயிர் காக்கும் தோழனாக ஆகிவிட்டது. பொதுக்கிணறுகளில் தண்ணீர் எடுப் பதற்கு இந்த மக்களை, ஜாதி இந்துக்கள் அனுமதிக்க மாட்டார்கள். அனுமதிக்கா விட்டாலும் போகிறது. சேரிகளிலாவது கிணறுகள் உண்டா? அதுவும் இல்லை. தொல்லை இத்துடன் நிற்கவில்லை. சாதி இந்துக்களை தூரத்தில் பார்த்து விட்டாலும் உடனே தரையில் விழுந்து கும்பிட வேண்டும். இதுதான் அவர் களுக்கு மரியாதை செய்யும் விதம். தம் எஜமானர்களின் கட்டளைப்படி கீழ்த்தர வேலைகள் அனைத்தையும் இந்த ஆதி திராவிட மக்களே செய்ய வேண்டும். சாதி இந்துக்கள் ஆதி திராவிட மக்களை எவ்வாறு நடத்துகிறார்கள் என்பதைப் பற்றி தென்னிந்திய மக்கள் ஒவ்வொரு வருக்கும் நன்கு தெரியுமாதலால் நான் அதைப்பற்றி விரிவுபட கூற வேண்டிய அவசியமில்லை.

“ஆதலால் நசுக்கப்பட்டு சுரண்டப் பட்டு தத்தளித்துக் கொண்டிருந்த இந்த மனித குலத்துக்கு சுடர் விட்டுப் பிரகாசிக்கும் ஜோதியாக விளங்கியது விவசாயிகள் சங்கம். பல்லாயிரக் கணக்கில் விவசாயிகள் சங்கத்தில் அணி திரண்டனர். 1944ல் 15 ஆயிரம் பேர் கலந்து கொண்ட விவசாயிகள் மாநாட் டையும் நடத்தினர்”

தலித் மக்களின் சமூக உரிமைகளுக்காக
சவுக்கடி கொடுப்பது, சாணிப்பால் குடிக்க வைப்பது போன்ற கடும் ஒடுக்கு முறைகளை அன்றையதினம் மிராசு தார்கள் விவசாயத் தொழிலாளர்களான தலித் மக்களுக்கு எதிராக ஏவிவிட்டனர். இம்மக்களுக்கு எழுச்சியூட்டுவதிலும் போராட்டக்களத்தில் இறக்குவதிலும் தோழர் சீனிவாசராவ் தனிக்கவனம் செலுத்தினார். ‘அடித்தால் திருப்பியடி, உதைத்தால் திருப்பி உதை, திட்டினால் திருப்பித் திட்டு’ என்பது அன்றையக் கூட்டங்களில் தோழர் சீனிவாசராவின் முக்கிய முழக்கமாக இருந்தது. இதனால் தலித் உழைப்பாளிகள் மத்தியில் ஏற் பட்ட ஆவேசத்தையும், எழுச்சியையும் கண்ட ஆதிக்க சக்திகள் கதி கலங்கிப் போனார்கள். பல கிராமங்களில் ஒப் பந்தங்கள் ஏற்பட்டன. கூலி உயர்வு மட்டு மல்ல, தலித் மக்களுக்கு எதிரான சமூக ஒடுக்குமுறைகளைக் கைவிடுவ தாகவும் ஒப்பந்தங்கள் உருவாயின.

1946லேயே திருத்துறைப்பூண்டி பெரியநாயகி கோவில் தேரோட்ட விழா வில் தலித் மக்களுக்கு உரிமை மறுக்கப் பட்டதை எதிர்த்து, மக்களைத் திரட்டி சீனிவாசராவ் முன்நின்று நடத்திய போராட்டம் வரலாற்றில் பதிவு செய்யப் பட்ட ஒன்றாகும். அக்கோவில் கொடி மரத்தில் கொடியேற்றிவிட்டால் 15 நாட் கள் தலித் மக்கள் திருத்துறைப்பூண்டி ஊருக்குள்ளேயே வரக்கூடாது என அக்காலத்தில் கட்டுப்பாடு இருந்தது. இது கண்டு ஆத்திரமடைந்த சீனிவாச ராவ் தலித் மக்களின் கூட்டம் ஒன்றை அவசரமாகக் கூட்டி, கீழ்க்கண்டவாறு முழங்கினார். “தேர் வரும்போது நடு ரோட்டில் தடுக்க வேண்டும். தாழ்த்தப் பட்ட மக்கள் தேரோட்டத்தில் பங்கெடுக் கலாம் என்ற நிலையை ஏற்படுத்த வேண் டும், என்ன வந்தாலும் சந்திப்போம்”.

அவரது அறைகூவலை ஏற்று தலித் உழைப்பாளி மக்கள் பெரும் திரளாகக் களம் இறங்கினர். தேர் புறப்பட்டதும், தலித் மக்கள் உள்ளே புகுந்தனர். ஆதிக்க சக்திகளால் ஏற்பாடு செய்யப்பட்ட வர்கள் இதனைக் கண்டு ஓட்டம் பிடித்தனர். தேர் 15 நாட்கள் அங்கேயே நிறுத்தப்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்று ஒப்பந்தம் ஏற் பட்டது. இப்பேச்சுவார்த்தையில் செங் கொடிச் சங்கத்தின் சார்பாக தோழர்கள் சீனிவாசராவ், பாங்கல் சாமிநாதன், கே.ஆர்.ஞானசம்பந்தம் பங்கேற்றனர். இப்படி ஏராளமான ஊர்களில் தலித் மக் களின் உரிமைகளுக்கான போராட்டங் கள் நடைபெற்று அவர்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டன.

அதிகார வர்க்கத்திற்கு எதிராக
விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் கள், தலித் மக்களின் உயர்விற்காகவும், உரிமைகளுக்காகவும் போராடியபோது, பல சந்தர்ப்பங்களில் அதிகார வர்க்கமும், அமைச்சர்களும் ஆதிக்க சக்திகள் பக்கமே துணை நின்றனர். இவர்களுக்கு எதிராகவும் தோழர் சீனிவாசராவ் கொள் கைப்பிடிப்போடும் நெஞ்சுரத்தோடும் போராடினார்.

விவசாயிகள் இயக்கத்தின் தொடர் போராட்டங்கள் காரணமாக 1946ல் அன் றைய சென்னை மாகாண அரசாங்கம் நீதிபதி அனந்தநாராயணன் கமிஷனை அமைத்தது. இக்கமிஷன் குத்தகை விவசாயிகளை மிராசுதார்கள் நிலத்தை விட்டு வெளியேற்றக்கூடாது என்றும், ஆண்-பெண் விவசாயக்கூலியை உயர்த்திக் கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

நிலவுடைமையாளர்கள் இந்த உத்த ரவை ரத்து செய்ய நடவடிக்கை மேற் கொண்டனர். இதற்கு அன்றைய அமைச் சர் ரங்கபாஷ்யமும் உடந்தையாகச் செயல்பட்டார். இப்பிரச்சனை பற்றி விவாதிக்க நீடாமங்கலத்தில் முத்தரப்பு மாநாடு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற தோழர் சீனிவாசராவ், நீதிபதி அனந்த நாராயணன் கமிஷன் உத்தரவை அமல் படுத்த வேண்டும என உறுதியான குரலில் வாதாடினார். அமைச்சர் ரங்க பாஷ்யத்தை நோக்கி தலையிடுமாறு வலி யுறுத்தினார். இதையொட்டி அமைச்சர் ரங்கபாஷ்யத்திற்கும் தோழர் சீனிவாச ராவிற்கும் நடைபெற்ற வாக்குவாதம் வருமாறு :

சீனிவாசராவ் : ஏஜெண்டுகள் ஏன் இப்படி பிடிவாதம் செய்கிறார்கள். நீங்கள் தலையிடுங்கள்.

பாஷ்யம் : நான் வலியுறுத்த முடியாது.

சீனிவாசராவ் : இதற்கு முத்தரப்பு மாநாடு கூட்டியிருக்க வேண்டிய அவசியமேயில்லை.

பாஷ்யம் : மிஸ்டர் பிஎஸ்ஆர், நீங்கள் ஆத்திரத்தை மூட்டும்படி பேசுகிறீர்கள்.

சீனிவாசராவ் : நீங்கள்தானே அனைவரையும் வரச் சொன்னீர்கள். நிங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

பாஷ்யம் :மிஸ்டர் பிஎஸ்ஆர், நான் யார் தெரியுமா?

சீனிவாசராவ் : மிஸ்டர் பாஷ்யம், ரெவின்யூ மந்திரி.

பாஷ்யம் : நான் நினைத்தால் 8 மணி நேரத்தில் போலீஸ் இங்கே குவிந்து விடும்.

சீனிவாசராவ் : மிஸ்டர் பாஷ்யம், உங்களுக்கு 8 மணி நேரம் வேண்டும். ஆனால், நான் புரட்சி ஓங்குக, என்று கோஷம் போட்டால் 5 நிமிடத்தில் நீங்கள் சுற்றி வளைக்கப்படுவீர்கள். தப்ப முடியாது, ஜாக்கிரதை!

இவ்வாறு சீனிவாசராவ் ஆவேச மாகக் கூறவும் அதிர்ச்சி அடைந்த பாஷ்யம் அங்கிருந்து கிளம்பினார்.

இதன்பிறகு பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர் களும் தோழர் சீனிவாசராவ் மற்றும் தலைவர்களின் மேற்பார்வையில் விவ சாய நிலங்களில் களம் இறங்கினர். இத னைக் கண்டு திகைப்படைந்த நில வுடைமையாளர்கள் பின்னர் வழிக்கு வந் தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னி லையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை யில் ஒப்பந்தம் ஏற்பட்டது.

செங்கோட்டையாக கீழ்த்தஞ்சை
செங்கொடி இயக்கத்தின் தீரமிக்க போராட்டங்களால் தஞ்சை மாவட்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் கள், தலித் மக்கள் தங்களது உரிமை களையும், உயர்வையும் நிலைநாட்ட முடிந்தது. இப்போராட்டங்கள் பொரு ளாதார உரிமை, சமூக உரிமை என்ற இரு கூர்முனைகளைக் கொண்டிருந்தன. கீழ்த்தஞ்சை மாவட்டத்தின் பல நூறு கிராமங்கள் செங்கொடி இயக்கத்தின் கோட்டைகளாக மாறிய வரலாறு இது தான். இதில் தோழர் சீனிவாசராவிற்கு மிக முக்கியமான பாத்திரம் உண்டு.

செப்டம்பர் 30 - சீனிவாசராவ் நினைவுதினம் அவரைப் பற்றிய நினைவுகள் அநீதிகளுக்கு எதிராக நமது உணர்வுகளை தட்டி எழுப்பட்டும். சமூக பொருளாதார உரிமைகளுக்கான வர்க்கப் போராட்டத்தை வலுவாக முன்னெடுத் துச் செல்ல இந்நாளில் சூளுரைப்போம்.