வியாழன், 15 டிசம்பர், 2011

நல்லிணக்க நாயகர் தநல்லிணக்க நாயகர் தோழர் பி. ராமமூர்த்தி - மதுக்கூர் இராமலிங்கம்


இந்திய விடுதலைப்போராட்ட பேரியக்கத் தின் போது காங்கிரஸ் கட்சி, தவணை முறை யில் சலுகை கேட்டு மனு போட்டுக்கொண் டிருந்த காலத்தில் ‘பூரண விடுதலை’ என்ற முழக்கத்தை முதன் முதலாக முன்வைத்தவர் கள் கம்யூனிஸ்ட்டுகள்.

நாடு விடுதலை பெற்ற பிறகு மாநிலங் களின் கட்டமைப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்ற விவாதம் முன்னுக்கு வந்த போது, தட்சிணபிரதேசம் போன்ற காரிய சாத் தியமற்ற ஆலோசனைகள் முன்வைக்கப் பட்ட நிலையில் மொழி வழி மாநிலங்கள் என்ற முழக்கத்தை முன்வைத்தவர்களும் கம்யூனிஸ்ட்டுகள்தான்.

இந்திய ஒன்றியத்தில் தேசிய இனங் களின் மொழி, பண்பாடு, தனித்துவம் பாதுகாக்கப்பட மொழி வழி மாநிலங்களே சிறந்த தீர்வாக அமைய முடியும் என்பது பொதுவுடைமை இயக்கத்தின் தொலை நோக்குப் பார்வை.

1952ம் ஆண்டு தேசத்தின் முதல் பொதுத் தேர்தல் நடந்தபோது இன்றைய தமிழ்நாடு, கேரளத்தின் ஒரு பகுதி, ஆந்திராவின் பெரும் பகுதி, கர்நாடகத்தின் ஒரு பகுதியைக் கொண் டதாக சென்னை ராஜதானி இருந்தது. அந்தத் தேர்தலில் மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தோழர் பி.ராமமூர்த்தி சிறையில் இருந்தவாறே போட்டியிட்டு வெற்றிபெற்றார். கம்யூனிஸ்ட் கட்சிக்கும் திராவிடர் கழகத் திற்கும் ஏற்பட்டிருந்த உடன்பாட்டின் அடிப் படையில் தந்தை பெரியார், பி.ராமமூர்த்தி உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் களை ஆத ரித்து பிரச்சாரம் செய்தார்.

சென்னை ராஜதானியில் கம்யூனிஸ்ட் கட்சி 63 இடங்களில் வெற்றி பெற்றது. நியாய மாக கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில்தான் ஆட்சி அமைந்திருக்க வேண்டும். ஆனால் கொல்லைப்புற வழியாக உள்ளே நுழைந்த ராஜாஜி கட்சி தாவிகளின் உதவியோடு காங். ஆட்சியை தக்கவைத்துக்கொண்டார்.

சென்னை ராஜதானி சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவராக தோழர் பி.ராமமூர்த்தி தேர்வு செய்யப்பட்டார். மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்படவேண்டுமென்று பி.ராமமூர்த்தி தலைமையில் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் தொடர்ந்து சட்டமன்றத்தில் குரல்கொடுத் தனர். தமிழகத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தமிழிலும், கேரளத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மலையாளத்திலும், ஆந்திரத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தெலுங் கிலும் இந்த கோரிக்கைக்காக குரல் கொடுத் தனர். இந்த தொடர் போராட்டத்தின் காரணமா கவே ஆந்திர, கேரள மாநிலங்கள் உருவாகின.

அதன்பின்னரும் கூட சென்னை ராஜ தானி என்றேஅழைக்கப்பட்டு வந்தது. தமிழ் நாட்டிற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைக்கக் கோரி காங்கிரஸ் தியாகி சங்கரலிங்கனார் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற் கொண்டார். அன்றைக்கு இருந்த காங்கிரஸ் அரசு இதற்கு உடன்பட மறுத்தது. சங்கர லிங்கனாரின் உண்ணாவிரதப்பந்தலுக்கு நேரடியாக வந்து பி.ராமமூர்த்தி உண்ணா விரதத்தை கைவிடுமாறும், அனைவரும் சேர்ந்து தொடர்ந்து போராடலாம் என்றும் கூறினார்.

‘இன்றைய ஆட்சியில் வாழ்வதை விட நான் சாவதே மேல்’ என்று கூறிவிட்டார் சங்கரலிங்கனார். 77 நாட்கள் உண்ணாவிரத மிருந்து உயிர் நீத்தார். அவரது மரண சாசனத் தின்படி அவரது உடல் கே.பி.ஜானகியம்மாள், என்.சங்கரய்யா, கே.டி.கே.தங்கமணி போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் ஒப்படைக்கப் பட்டு, மதுரை தத்தனேரி மயானத்தில் கம்யூ னிஸ்ட்டுகளால் இறுதி நிகழ்ச்சி நடத்தப் பட்டது.

சென்னை தமிழகத்தோடு தக்கவைக்கப் பட்டதிலும் தோழர் பி.ராமமூர்த்திக்கு முக்கிய பங்கு உள்ளது என்பது அவரது வரலாற் றாசிரியர் என்.ராமகிருஷ்ணன் கூறும் தகவல்.

1953ம் ஆண்டு பட்ஜெட் விவாதத்தின் போது தோழர் பி.ராமமூர்த்தி ஒரு மணி நேரம் தமிழிலேயே நுட்பமான பொருளாதார விஷ யங்களை எடுத்துரைத்தார். விவாதத்திற்கு பதிலளித்த சி.சுப்பிரமணியம், தமிழில் பொரு ளாதார பிரச்சனைகளை விளக்கமுடியும் என் பதை ராமமூர்த்தி நிரூபித்துவிட்டார் என்று கூறித்தான் தமது பதிலுரையை துவக்கினார்.

1956ம் ஆண்டு டிசம்பர் 27 அன்று தமிழக சட்டமன்றத்தில் தமிழை ஆட்சி மொழி என்று பிரகடனப்படுத்தும் சட்டமுன் வடிவை நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் முன்மொழிந்தார். எதிர்க்கட்சித்தலைவராக இருந்த பி.ராமமூர்த்தி எழுந்து, இந்நாள் தமிழ் நாட்டின் திருநாள் என்று நெஞ்சம் நெகிழ வர வேற்றார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ் ஆட்சிமொழி ஆனால் மட்டும் போதாது. பயிற்று மொழி ஆகவும் வேண்டும் என்றார். ஆனால் இன்றுவரை அது முழுமையாக நிறைவேறவில்லை என்பது நெஞ்சில் முள் ளாய் உறுத்தும் நிஜம்.

நெய்வேலியில் அனல் மின்நிலையம் அமைந்ததிலும், திருச்சியில் ‘பெல்’ நிறுவனம் அமைந்ததிலும், சேலத்தில் உருக்காலை அமைக்கப்பட்டதிலும் தோழர் பி.ராமமூர்த்திக்கு மிகப்பெரிய பங்குண்டு என்பதை தமிழக தொழில் வளர்ச்சியின் வரலாறு அறிந்த அனைவரும் ஒப்புக்கொள்வர்.

மதவெறி சக்திகளால் இன்று முடக்கப் பட்டுள்ள சேதுக்கால்வாய் திட்டம் குறித்து 1967ம் ஆண்டிலேயே நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய மகத்தான தலைவர் பி.ராமமூர்த்தி.

1952ம் ஆண்டு பெரியாறு அணையி லிருந்து கால்வாய் வழியாக வரும் தண்ணீரில் இருந்து மின் உற்பத்தி செய்யும் புனல்மின் திட்டம் உருவாக்கப்பட்டது. முதலமைச்சராக இருந்த ராஜாஜி, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பி.ராமமூர்த்தியை அழைத்து இது குறித்து திருவாங்கூர் கொச்சி அரசின் முதல் வராக இருந்த பட்டம் தாணுப்பிள்ளையிடம் பேச்சுவார்த்தை நடத்த கேட்டுக்கொண்டார். இந்த திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப் படும் மின்சாரத்திற்கு யூனிட்டுக்கு 2பைசா தருவதென்று பேசி, அதற்கு பட்டம் தாணுப் பிள்ளையை சம்மதிக்கச் செய்தார் பி.ராமமூர்த்தி.

இது குறித்து பி.ராமமூர்த்தி குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் இன்றும் அனைவரும் மனதில் நிறுத்தவேண்டிய ஒன்றாகும்.

‘மாநிலங்களுக்கிடையே இதுபோன்ற பிரச்சனைகளில் பேச்சுவார்த்தை நடத் தும் போது, அது இரு மாநிலங்களுக்கும் பயனளிக்கக்கூடியதாக இருக்கவேண் டும். அந்த அடிப்படையில் நடந்தால் வெற்றி காண்பது சுலபம். இல்லையேல் வீண் மனக்கசப்பிலும் மாநில மக்களி டையே ஆத்திரமூட்டும் பிரச்சாரத்திலும் கொண்டுபோய் விடும். இனவெறி தூண் டப்பட்டு இரு மாநில மக்களிடையே மோதல்களில் கொண்டுபோய் விடும்.’

1957ம் ஆண்டு தோழர் இஎம்எஸ் நம்பூ திரிபாட் தலைமையில் முதல் கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சரவை கேரளத்தில் அமைந் தது. கேரளத்திலிருந்து அரபிக்கடல் நோக் கிப் பாய்ந்த பரம்பிக்குளம், ஆழியாறு நதிகளை தமிழ்நாட்டுக்கு திருப்பிவிடவேண்டும் என் பது நீண்ட நெடுநாள் கோரிக்கையாகும். இது குறித்து முதல்வராக இருந்த இஎம்எஸ் நம் பூதிரிபாட் அவர்களிடம் பி.ராமமூர்த்தி பேசி னார். இரு பெரும் தலைவர்களின் முயற்சி யால் உருவானதுதான் பரம்பிக்குளம் ஆழி யாறு திட்டம். ஆழியாறு பரம்பிக்குளம் நதி களில் அணை கட்டி நீரை தேக்கி வைத்து, உபரி நீரை தமிழகத்திற்குத் தருவது என்றும் அதற்காகும் செலவுகளை இரு மாநில அரசு களும் சமமாக ஏற்பது என்றும் முடிவு செய் யப்பட்டது. அதனடிப்படையில் இரு அரசு களும் செலவினை ஏற்று அணை கட்டப் பட்டது. இதன் மூலம் கோவை, ஈரோடு மாவட் டங்களுக்கு பாசனவசதி கிடைத்தது.

ஒன்றாக இருந்த பஞ்சாப் மாநிலம், பஞ் சாப், ஹரியானா என்று பிரிக்கப்பட்ட, பிறகு சண்டிகர் நகர் யாருக்கு என்ற பிரச்சனை எழுந்தது. இரு தரப்பிலும் கொந்தளிப்பான சூழ்நிலை. அப்போது அப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் துடன் பெரும் பங்காற்றியவர் தோழர் பி.ராம மூர்த்தி.

அசாமில் பிரிவினை கோஷம் எழுந்த போதும் தோழர் பி.ராமமூர்த்தி மக்கள் ஒற்றுமையை பாதுகாக்க கட்சியின் சார்பில் முன்னின்றார். அவரது சக தோழரும் போரா ளியுமான ஹர்கிஷன் சிங் சுர்ஜித்து வரைந் துள்ள சொற்சித்திரம் இது: ‘நாட்டை எதிர் நோக்கியுள்ள பல்வேறு பிரச்சனைகளை குறிப்பாக தேசிய பிரச்சனைகளை பி.ஆர். வெகுவிரைவில் புரிந்துகொள்வார். பஞ்சாப் மாநில சீரமைப்பிலும், அதிலிருந்து தோன்றிய பிரச்சனைகளிலும் அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார். அசாம் குறித்து அவர் எழுதிய பிரசுரமானது அச்சமயத்தில் கட்சியின் கண் ணோட்டத்தை விளக்கியது.’

1978ம் ஆண்டு சீமென்ஸ் என்ற ஜெர் மானிய நிறுவனம் பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தை விழுங்க முயற்சி செய்தபோது அதை எதிர்த்து சத்திய ஆவே சத்துடன் போராடியவர் பி.ஆர். அவர் நாடாளு மன்றத்தில் ஆற்றிய உரை தனியொரு நூலா கவே வெளிவந்தது.

இன்றைக்கு சில்லரை வர்த்தகத்தையும் கூட விழுங்க வால்மார்ட் போன்ற பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள் வாய்பிளந்து வருகின் றன. நடை பாவாடை விரித்து நலுங்கு பாடு கிறார்கள் மத்திய ஆட்சியாளர்கள்.

தோழர் பி.ராமமூர்த்தி உயர்த்திப்பிடித்த தேசபக்த, வர்க்க ஒற்றுமை பதாகையை ஏந்தி தேசத்தை, மக்கள் ஒற்றுமையை பாதுகாக்க போராடுவதே அவருக்கு பெருமை சேர்ப் பதாக அமையும்.

செவ்வாய், 21 டிசம்பர், 2010

2ஜி ஊழல்: இழப்புகளை கைப்பற்றுக! -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

மிகப் பிரம்மாண்டமான அளவில் நடை பெற்றுள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலின் விவரங் கள் வெளிவந்துகொண்டிருக்கக்கூடிய சூழ லில், அதனை விசாரிப்பதற்காக கூட்டு நாடா ளுமன்றக் குழுவை அமைத்திட வேண்டு மென்கிற கோரிக்கை தொடர்பாக நாடாளுமன் றத்தில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ள நிலை எப்படித் தீர்வு செய்யப்பட்டாலும், நாடு சட்ட விரோத முதலாளித்துவத்தின் (உசடிலே உயயீவையடளைஅ) ஆழமான பகுதிக்குள் மேலும் மேலும் தள் ளப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது தெளிவு.

சட்டவிரோத முதலாளித்துவம் என்றால் என்ன? மூலதனம், லாபத்தை உச்சத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமென்கிற அரிப் பின் காரணமாக, நாட்டில் உள்ள அனைத்து விதிமுறைகளும் சற்றே வளைந்து கொடுக்க வேண்டும் என்று விரும்பும். அவ்வாறு அவை வளைந்து கொடுக்காவிட்டால் அவற்றை மீறும். ஒப்பந்தங்களை அளிப்பதில் உற்றார் உறவினர்களுக்கு உதவுவது, (உதாரணமாக, பொதுத்துறை நிறுவனங்களான பால்கோ மற்றும் மும்பை, ஜூஹூ, செண்டார் ஓட் டலை முந்தைய தேசிய ஜனநாயகக் கூட் டணி அரசாங்கம் அடிமாட்டு விலைக்குத் தாரை வார்த்தமை போன்று) நாட்டின் பொதுச் சொத்துக்களை இதயத்திற்கு இதமானவர் களுக்குத் தர முன் வருவது, பணத்தைப் பன் மடங்கு பெருக்குவதற்காக சட்டவிரோத வழிவகைகளைக் கண்டறிவது மற்றும் பொதுச் சொத்துக்களைச் சூறையாடுவது முத லியன சட்டவிரோத முதலாளித்துவத்தின் ஒருசில வடிவங்களாகும். முதலாளித்துவ அரசு, முதலாளிகள் சரிசமமாக போட்டி போட் டுக்கொண்டு இயங்குவதற்காக ஒருசில விதிமுறைகளையும் அவற்றை செயல்படுத் தும் நிறுவன ஏற்பாடுகளையும் மேற்கொள் கிறது. ஆயினும் சிறிய மீன்களை பெரிய மீன் கள் தின்பதைப் போன்ற அடிப்படையிலேயே இயற்கை குணத்தைக் கொண்டுள்ள முதலா ளித்துவம், இத்தகு விதிமுறைகளையெல் லாம் தூக்கிக் குப்பையில் வீசி எறிந்துவிடு கிறது. முதலாளித்துவம் என்பது இயல்பா கவே சட்டவிரோதமான நடவடிக்கைகளை ஊட்டி வளர்க்கிறது.

இந்தியா போன்ற நாடுகளில் உலக முத லாளித்துவம் தாமதமாக நுழைந்தபோது (குறிப்பாக அவை உலகமயம் என்னும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளைத் தழுவிக்கொண்ட பின்பு) இத்தகைய சட்ட விரோத நடவடிக்கைகள் அரசாங்கத்தின் நிறு வனங்களிலும் ஊடுருவிப் பரவின. உண்மை யில் ஒட்டுமொத்த அரசாங்கமே அவ்வாறு மாறிப்போனது.

உச்ச நீதிமன்றம், பிரதமரையும் அவரது அலுவலகத்தையும் கூண்டில் ஏற்றக்கூடிய அளவிற்கு நடைபெற்றுள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் அதன் வெளிப்பாடுதான்.

சட்டவிரோத முதலாளித்துவம், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் எந்த அளவிற்கு செயல் பட்டிருக்கிறது, எப்படிச் செயல்பட்டிருக் கிறது என்பதைச் சற்றே விளக்கிடலாம்.

2008 ஜனவரியில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை வெளியிடுவதற்கான உரிமங்களை அளிப்பதற்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது முற்றிலும் விந்தையான, எவருக்கும் விளக்கமுடியாத ஒரு விதியைக் கையாண்டது. அதாவது ‘முத லில் வருபவருக்கு முதலில் விநியோகிப்பது’ என்ற முறையைக் கொண்டு வந்தது. அது மட்டுமல்ல, அந்த 2ஜி உரிமங்களை 2001இல் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே தருவது என் றும் முடிவு செய்தது. நுகர்வோருக்கு ஸ்பெக்ட் ரம் அதிக விலையுள்ளதாக ஆகிவிடக் கூடாது என்பதற்காகவும், அதன்மூலம் கிடைக்கும் ஆதாயங்கள் நுகர்வோரைச் சென் றடைய வேண்டும் என்பதற்காகவும் அவ் வாறு முடிவு மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சகம் அதற்கு விளக்கம் அளித்தது. ஆனால், உரிமங்கள் அளிப்பதற்கான விதி முறைகள் மற்றும் நிபந்தனைகள் மூலமாக இவற்றை உத்தரவாதம் செய்திடவில்லை. விளைவு, உரிமங்களைப் பெற்ற நபர்கள் இவற்றை மிகவும் கொள்ளை லாபத்திற்கு விற்றனர்.

ஐக்கிய அரபுக் குடியரசைச் சேர்ந்த டெலி காம் நிறுவனமான எடிசலாட் (நுவளையடயவ)டிற் கும், மும்பையைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திற் கும் இடையேயான பேரம் மிகவும் பிரம்மாண் டமான தொகைக்கு நடைபெற்றிருக்கிறது. ஸ்வான் டெலிகாம் நிறுவனமானது 13 மாநி லங்களுக்கு (உசைஉடநள) உரிய உரிமங்களை வெறும் 1,537 கோடி ரூபாய்க்கு வாங்கியது. பின் னர், இதில் எவ்விதமான உட்கட்டமைப்பு வசதியையும் செய்யாமலேயே, இவற்றில் 45 விழுக்காட்டினை எடிசலாட் நிறுவனத்திற்கு 900 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் 4,000 கோடி ரூபாய்க்கு) விற்றுவிட்டது. எனவே இவ்வாறு ஸ்பெக்ட்ரம் அலைக்கற் றையின் அப்போதைய சந்தை விலையாக சுமார் 2 பில்லியன் டாலர் இருந்திருக்கிறது. ஆனால் அதற்கு ஸ்வான் கொடுத்த விலை வெறும் 300 மில்லியன் டாலர்களேயாகும். தற்போதைய பரிவர்த்தனை விகிதாசாரத்தின் படி, இதன் பொருள் என்னவெனில் ஸ்வான் நிறுவனம் 2008 ஜனவரியில் கொடுத்த தொகைக்கு, அதைவிட 5.9 மடங்கு அதிக மதிப்புள்ள அலைக்கற்றைகளைப் பெற்றிருக் கிறது என்பதாகும். இவ்வாறு ஸ்வான் நிறு வனம் தான் பெற்ற உரிமங்களைச் செயல் படுத்த ஒரு காசு கூட செலவழிக்காமல், கொள்ளை லாபத்தை ஈட்டியிருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் அரசாங்கம் தான் பெற வேண்டிய தொகையில் ஆறில் ஒரு பங்கினை மட்டும் பெற்றது. இவ்வாறு அரசின் கஜானாவிற்கு வரவேண்டிய தொகையில் 4,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

இழப்பு என்பது இதோடு நின்றுவிடவில் லை. இந்த இழப்பு கூட குறைந்த மதிப்பீடு தான். இதனை இதற்கு அடுத்து நடைபெற் றுள்ள யூனிடெக் - டெலினார்(நார்வே) பேரத் துடன் ஒப்பிட்டால் தெரிந்து கொள்ள முடியும். யூனிடெக் நிறுவனமும், ஸ்வான் நிறுவனம் போன்றே உரிமத்தை நிறைவேற்றுவதற்காக ஒரு காசு கூட செலவழிக்கவில்லை. யூனி டெக் நிறுவனம் தான் பெற்ற 23 மாநிலங்களுக் கான உரிமங்களுக்கும் வெறும் 1651 கோடி ரூபாய் உரிமக் கட்டணமாகக் கொடுத்திருந் தது. பின்னர் இது டெலினார் நிறுவனத்திற்கு தான் பெற்றதில் 60 விழுக்காட்டு பங்குகளை மட்டும் 6,120 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது. இவ்வாறு யூனிடெக் நிறுவனம் அரசுக்கு அளித்ததைவிட ஏழு மடங்கு அளவிலான தொகையைப் பெற்றிருக்கிறது.

இவ்வாறு ‘முதலில் வருபவருக்கு முத லில் விநியோகிப்பது’ என்ற அடிப்படையில் உரிமங்களைப் பெற்ற நிறுவனங்கள் உண்மை யில் டெலிகாம் வணிகத்துடன் தொடர்புள்ள வைகள் அல்ல. இவை இதற்கு முன் அறியப் படாத அல்லது பெயரளவிலான நிழல் நிறு வனங்களாகும். இதுவும் இந்நிறுவனங்களின் நம்பகத்தன்மைகள் (bடியே கனைநள) குறித்து ஐயங்களை எழுப்பின.

எனவேதான் நாட்டின் நலன் கருதி, இவ் வாறு நடைபெற்றுள்ள இமாலய அளவு ஊழல் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று கூறுகிறோம். அதற்காகக் கூட்டு நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட வேண்டும் என்கிறோம். கூட்டு நாடாளுமன்றக் குழுவானது, இக் கூட்டுக் கொள்ளையில் பங்கு கொண்டவர்களை அடையாளம் காண்பது மட்டுமல்ல, அவர்களுக்கு உரிய தண்டனைகளைப் பெற் றுத்தரவும் வேண்டும். மேலும், இவ்வாறு இமா லய அளவில் ஊழல் நடைபெற்ற முறையை நன்கு ஆய்வு செய்து, எதிர்காலத்தில் இது போன்று நடைபெறாதிருக்க எவ்விதத்தில் மாற்றியமைக்கப் பட வேண்டும் என்றும் அது கூறிட வேண்டும். இவ்வாறு செய்வதானது, எதிர்காலத்தில் ஊழலை முற்றிலுமாக ஒழிக்க முடியாவிட்டாலும் அதன் அளவைக் குறைத் திட உதவிடும்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசார ணை நடைபெற வேண்டும் என்று கோருவது நாட்டின் அரசியல் அறநெறியை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல. இதில் நடைபெற்ற ஊழல் காரணமாக அர சுக்கு 1 லட்சத்து 76 ஆயிரத்து 379 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத்துறைத் தலை வர் (சிஏஜி) மதிப்பிட்டிருக்கிறார். நாம் இந்த ஊழல் காரணமாக சுமார் 1 லட்சத்து 90 ஆயி ரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக பலமுறை குறிப்பிட்டிருக்கிறோம். இந்தத் தொகையை மீளப் பெறக்கூடிய வகையில் விசாரணைஅமைந்திட வேண்டும். அடிமாட்டு விலைக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களைப் பெற்றவர்கள் உரிய தொகை யினை அரசுக்குச் செலுத்திட வேண்டும். இதற்கு, தற்போது 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலமிட்ட தொகையினை ஓர் அளவுகோலாக (நெnஉாஅயசம) வைத்துக் கொள்ளலாம். இதனை ஏற்க மறுத்திடும் நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்துவிட்டு, அந்த உரிமங்களைப் புதி தாக ஏலமிட வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம், எவ்வித கூச்சநாச்சமின்றி, மிகவும் கேடுகெட்ட முறையில் கொள்ளையடிக்கப் பட்டுள்ள பொதுச் சொத் துக்களை மீளப்பெறுவதன் மூலம், பொது அற நெறியை (யீரடெiஉ அடிசயடவைல) மீள உறுதிசெய்வது மட்டுமல்ல, இவ்வாறு கைப்பற்றப்படும் தொகை, நாட்டு மக்களின் பெரும்பகுதியினரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திட மிகவும் தேவையான ஒன்றுமா கும். உதாரணமாக, உணவுப் பாதுகாப்பை எடுத்துக் கொள்வோம். நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பத்தின ருக்கும் (வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள்/ வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும்) உணவு தானியங்களை கிலோ 3 ரூபாய் என்ற விலையில் அளித்திட் டால், அதன் மூலம் கூடுதலாக 84 ஆயிரத்து 399 கோடி ரூபாய் உணவு மானியம் அளிக்க வேண்டும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரத்தில் அடிக்கப்பட்டுள்ள கொள்ளையோடு ஒப்பிடும்போது இது அதில் பாதி அளவுத் தொகையேயாகும். எனவே இத்தொகையை மீளக் கைப்பற்றுவதன் மூலம் நாட்டின் உணவுப் பாதுகாப்பை உத்தர வாதப்படுத்த முடியும். அதேபோன்று, நாட்டில் அனைவருக்கும் கல்வி அளிக்க வேண்டும் என்றால், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆண் டிற்கு 34 ஆயிரம் கோடி ரூபாய் வீதம் மொத் தம் 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என்று தேசிய கல்வித் திட்டம் மற்றும் நிர்வாகத் தேசிய நிலையம் (சூஐநுஞஹ-சூயவiடியேட ஐளேவவைரவந கடிச நுனரஉயவiடியேட ஞடயnniபே யனே ஹனஅinளைவசயவiடிn) மதிப்பிட்டிருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக் கீட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ள தொகை யைவிட இது குறைவேயாகும். இந்த ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள சுகாதாரத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை விட 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் அடிக்கப்பட்டுள்ள கொள்ளை ஆறு மடங்கு அதிகமாகும்.

ஆட்சியாளர்கள் இப்போதும் தாங்கள் சாமானியர்களுக்காகவே ஆட்சி செய்வதாக நாடகமாடுவது தொடர்கிறது. இவர்கள் நாட் டின் வளங்களைக் கொள்ளையடித்தவர்களி டமிருந்து அவற்றை மீளக் கைப்பற்றுவதற் கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நிர்ப்பந்திக்க வேண்டும். மேலும், இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட தொகையினை அரசு மீண்டும் கைப்பற்றி, அவற்றை மிகவும் தேவைப்படும் நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பு, கல்வி மற்றும் சுகாதாரத்திற்குப் பயன்படுத்த ஒதுக்க வேண்டும்.

தமிழில்: ச.வீரமணி

இந்தியக் கல்வி ஓர் இமாலய தோல்வி -ஜோ.ராஜ்மோகன்

இருபத்தோராம் நூற்றாண்டில் நாம் இதுவரை கண்டிராத அளவுக்கு கல்விக்கான அபரிமிதமான தேவை ஏற்பட்டுள்ளது. இந் திய சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சி அனைத்தும் கல்வி பெறும் மாணவர் களோடு பின்னிப்பிணைந்துள்ளது.

கல்வியின் தேவையை கருத்தில் கொண்டு நாட்டின் முன்னேற்றத்தை வளர்த்து எடுப்பதற்கு பதில் உலக வங்கியும். சர்வதேச நிதி நிறுவனமும் கொடுக்கும் நிர்ப்பந்தத்தால் தொடர்ந்து ஆட்சியாளர்கள் உலகமய, தனியார் மய, நவ தாராளமயமாக்கல் கொள்கைகளை தீவிரமாக அமலாக்குவதால், கல்வி என்பது நடப்பில் முழுவதும் வியாபார மாக்கப்பட்டுள்ளது,

நம் நாட்டில் கல்வி என்பது அனைவருக் கும் கிடைக்க வேண்டும், கல்விதான் ஒட்டு மொத்த பரந்த வளர்ச்சிக்கு அடிப்படை என் றும் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள் ளது. கல்விதான் பொருளாதாரத்தின் பல தளத் திற்கும் தேவைப்படும் பயிற்சி பெற்ற மனிதர் களை உருவாக்கித் தருகிறது. கல்வி மட் டுமே ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான அடிப் படை; கல்விதான் நாம் நமது சொந்தக்காலில் நிற்பதற்கு பலமளிக்கும்; நமது சுயசார்பை மேலும் வலுப்படுத்தும்; ஒட்டுமொத்தமாக சுருங்கச் சொன்னால் கல்வி மட்டுமே நாம் நமது நிகழ்காலத்தின் மீதும் எதிர்காலத்தின் மீதும் நம்பிக்கையுடன் செய்யும் ஒரு அற்புதமான முதலீடாகும், கல்வி மட்டுமே அறிவையும் திறனையும் எங்கும் பரவச் செய்து உண்மையான தேச வளர்ச்சிக்கு உத வும். ஆகவே கல்வி என்பது நமது வாழ்வாதா ரத்திற்கே ஒரு முக்கியமான அம்சமாகும்.

இந்தியா சுதந்திரமடைந்து 64 ஆண்டு களை கடந்து வெற்றி விழாக்கள் கொண்டா டும் நிலையில் ஆட்சியாளர்கள் கடைப்பிடிக் கும் பொருளாதார கொள்கைகளால் கல்வி கொடுப்பதில் இந்தியா இமாலய தோல்வி அடைந்துள்ளது. இதன் விளைவு, உலகின் மனித வள மேம்பாட்டில் 182 நாடுகளில் இந்தியா 134-வது இடத்தில் உள்ளது.

உலகில் வேறெங்கும் இல்லாத அளவிற்கு பெரும் ஏற்றத்தாழ்வு உள்ள சமுதாயத்தில் ஒவ்வொரு பொருளாதார மட்டத்திற்கும் ஒருவகைப்பட்ட பள்ளிக் கல்வி என்பதும். கொடுக்கும் விலைக்கேற்ப கிடைக்கும் கடைச்சரக்காக கல்வி மாற்றப்பட்டதும் மேலும் சமூக நிலையை மோசமடைய வைத்துள்ளது. இத்தேசம் வறுமையிலிருந்து மீள்வதற்கு ஒரேவழி கல்விதான். ஆனால் தரமான கல்வி மறுக்கப்படுவதால். மேலும் வறுமை நிலைக்கே தள்ளப்படுகின்றனர்.

ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சமத்துவ மான சமூகம் உருவாக கல்வி மிக முக்கிய மான கருவியே அல்லாமல் ஏற்றத்தாழ்வு களை நிரந்தரப்படுத்தும். அவற்றை நியாயப் படுத்தும் நிலைதான் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் கடைப்பிடிக்கும் மிக மோசமான பொருளாதார கொள்கை குறிப்பாக 1986-ல் உலக வங்கியின் வழிகாட்டுதலோடு உரு வாக்கப்பட்ட தேசிய கல்விக்கொள்கை மற் றும் கல்விக்கான செலவுகள் முழுவதுமாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் தலை யில் சுமத்துவதும் கல்விக்கான அரசின் மானி யங்களை படிப்படியாக குறைப்பதும் கல்வித் துறையில் தனியார் பங்களிப்பை அதிகப்படுத் தவும் கல்வியை வணிகமயமாக்கவும் வழி வகுத்தது போன்ற நடவடிக்கைகள் வசதி படைத்தவர்களுக்கு மட்டும் தரமான கல்வி கிடைக்கும் நிலை திட்டமிட்டு உருவாக்கப் பட்டுள்ளது. இதனால் இன்றைக்கும் உயர் கல்விக்கு செல்லும் மாணவர்கள் 10 சதவீதம் பேர் மட்டுமே குறிப்பாக பெண்கள் மற்றும் சமூக பொருளாதார ரீதியில் பின்தங்கிய தலித் மக்கள் உயர்கல்வி பெறுவதென்பது இன்று பெரும் சவாலாக உள்ளது.

கல்வி வியாபாரத்திற்கு அடித்தளமிட்ட தீர்ப்புகள்:-

1993-ஆம் ஆண்டு உன்னிகிருஷ்ணன் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு, கல்வி அடிப்படை உரிமை என்று கூறியது, பின்பு 2002-ஆம் ஆண்டு டி.எம்.எ. பாய் பவுண்டேஷன் மற்றும் கர்நாடக அரசு வழக்கில் பதினோரு நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியல மைப்பு பெஞ்சின் பெரும்பான்மையானவர்கள் ஒரு தீர்ப்பை கொடுத்தார்கள், அதன்படி அத் தீர்ப்பு தனியார் கல்வி நிறுவனங்கள் இலாப வேட்கையை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படக்கூடாது என்று சொன்ன அதே வேளையில், நிறுவனத்தை வளர்த்தெடுப்ப தற்கும் கல்வி வசதிகளை செய்து கொடுத்த லுக்கும் நியாயமான ஒரு உபரியை ஈட்டுவது என்பது லாபம் என எடுத்துக்கொள்ள முடி யாது என்று கூறியது. இதனால் தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டணத்தை கட்டுக் குள் வைத்திருப்பதும் மாணவர்கள் சேர்ப்பு குறித்த கட்டுப்பாடுகளை உருவாக்குவதும் நியாயமான உபரியை சம்பாதிப்பதும் எங்கள் உரிமை என்று தனியார் நிறுவனங்கள் கருத்து தெரிவித்தன. இப்படி இவர்களின் வசதிக்கு ஏற்றவாறு இத்தீர்ப்பை திரித்துக்கூற ஆரம் பித்தனர்.

அதேபோல் 2005-ல் கடந்த பி.ஏ. இனாம்தர் மற்றும் அன்ருக்கும் மகாராஷ்டிரா அரசுக்கும் நடந்த வழக்கில் ஏழுபேர் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் அளித்த தீர்ப்பு, அரசு உதவியற்ற தனியார் கல்வி நிறு வனங்களே கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று சொன்னது. ஆனால் இதை பயன்படுத்திக்கொண்டு லாபம் மட் டுமே நோக்கமாக தனியார் கல்வி நிறுவனங் கள் முறையற்ற கட்டண வசூலில் ஈடுபடக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இதுபோன்ற தீர்ப்புகள் கல்வியை முழு வதுமாக வர்த்தகமாக்க நீதிமன்றமே உடன் பட்டுவிட்டது என்றுதான் பொருள், இதற்காக முழுப்பொறுப்பு அரசுகள் கல்வி கொடுக்கும் பொறுப்புகளிலிருந்து மெல்ல மெல்ல விலகி நிற்பதுதான் அன்றி வேறல்ல.

மேற்கண்ட இரண்டு தீர்ப்புகளிலும் இலா பம். இலாபம் மட்டுமே நோக்கமாக கொண்டு தனியார் கல்வி நிறுவனங்கள் செயல்படக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய பின்னணியில், தனியார் கல்வி நிறுவனங்கள் இலாபம் மட்டும்தான் நோக்கமாக கொண்டு செயல்படுவதோடு மேலும் கல்வி வியா பாரத்தை தீவிரப்படுத்தி முதலீடுகளை பெருக்கிக் கொண்டு மேலும், மேலும் பெறும் கல்வி தொழில் நிறுவனங்களாக மாறியுள்ளன.

கல்வித்துறையில் தனியார் பங்களிப்பு பெருகியுள்ள போதிலும். இந்தியாவில் கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையில் உயர்வில்லை என்பதுதான் உண்மை. தனி யார் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல் கலைக்கழகங்கள், தனியார் சுயநிதி கல் லூரிகள் இலாபம் ஒன்றை மட்டுமே நோக்க மாக கொண்டு செயல்படுகின்றன. மறுபுறம், அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் புறக்கணிக்கப்பட்டு முதுகெலும்பு இல்லாமல் போதுமான அடிப்படை கட்ட மைப்புகள் இல்லாமல் உள்ளன. தொடர்ந்து கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கூடாது என்பதில் அரசுகள் தீர்மானகரமாக உள்ளன.

2004 ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கல்விக்கான நிதியை 6 சதவிகி தம் ஒதுக்குவதாக ஏற்றுக்கொண்டது. ஆனால் இன்றுவரை கல்விக்கான ஒதுக் கீட்டை உயர்த்துவது குறித்து அரசுக்கு எந்த திட்டமும் இல்லை. தற்போது 3.5 சதவி கிதம் கல்விக்கு அரசு ஒதுக்கும் நிதியாக உள் ளது. இதிலிருந்து நாட்டின் கல்வி குறித்து அர சின் அக்கறையின்மையை பார்க்க முடியும்.

இந்நிலையில் அரசு உயர்கல்வியில் அந்நிய முதலீட்டை நேரடியாக அனுமதித்து அந்நிய பல்கலைக்கழகங்களை இந்தியாவிற் குள் அனுமதிக்க துடித்துக்கொண்டுள்ளது. இதனால் அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கு தடையற்ற வகையில் கல்விச் சந்தை யை உருவாக்கி இந்திய உயர்கல்வியை சீர ழிப்பதோடு இந்திய இறையாண்மைக்கே வேட்டு வைக்கும் வேலையை ஐக்கிய முற்போக்கு கூட்டணி செய்து வருகிறது.

நீண்ட காலத்திற்கு பிறகு 2009 கல்வி உரி மைச் சட்டம் நிறைவவேற்றப்பட்டாலும் ஏட் டளவிலான சட்டமாகத்தான் இருக்கப் போகின்றன. 6 வயது முதல் 14 வயது வரை மட்டும்தான் கட்டாயக் கல்வி என்று அறி வித்துள்ளது. மழலையர் கல்வி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி கல்வி முழுமையாக விடப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு குறித்து உறுதியான அறிவிப்பு இல்லாதது போன்ற ஏராளமான ஓட்டைகள் நிரம்பிய சட்டமாக இருக்கப்போகிறது.

கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கிடக் கோரியும் அரசு கல்வி நிலையங்களை மேம்படுத்தக் கோரியும் கல்வி வியாபாரத்தை தடுக்கக் கோரியும் இடதுசாரி இயக்கங்கள் தொடர்ந்து போராடி வருகின்றன.

தமிழ்நாட்டில் அனைவருக்கும் சமச்சீர்க் கல்வி, மாணவர்களின் வீரஞ்செறிந்த போராட் டத்திற்கு பின்பு அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால் கல்வியாளர் ச.முத்துக்குமரன் கொடுத்த பரிந்துரையில் ஒரே வகையான பாடத்திட்டத்தை தவிர மற்ற அனைத்து பரிந் துரைகளும் குழிதோண்டி புதைக்கப்பட்டுள் ளது. சமச்சீர் என்ற வார்த்தைக்கு புதிய அர்த்தத்தை கற்பிக்க முயற்சிக்கிறது. தமிழக அரசு, தனியார் பள்ளிகளின் வியாபாரத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் உறுதி யற்ற அரசாக உள்ளது. இந்த அரசுகளின் வர்க்க குணத்தால்தான் இந்தியாவில் கல்வி மிகப்பெரும் வியாபாரமாக்கப்பட்டு, எல்லோ ருக்கும் கல்வி என்பது கிடைக்காமல் இமா லய தோல்வி அடைந்துள்ளது.

கட்டுரையாளர், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர்

அநீதிகளைச் சட்டமாக்கும் முயற்சி -பிருந்தா காரத் எம்.பி.

உணவுப் பாதுகாப்புச் சட்டமுன் வடிவிற்கானப் பரிந்துரைகளை இறுதிப் படுத்தியுள்ள தேசிய ஆலோசனைக் கவுன் சில் (சூயவiடியேட ஹனஎளைடிசல ஊடிரnஉடை) தன் அறிக்கை யை அளிப்பதற்குப் பதினைந்து நாட்களுக்கு முன்புதான் 2010க்கான உலகப் பட்டினி குறித்த அட்டவணை அறிக்கை (ழுடடியெட ழரபேநச ஐனேநஒ சுநயீடிசவ) வெளியாகி இருக்கிறது. அதில் பட்டினிக் கொடுமை மிகவும் மோசமாகவுள்ள 84 வளர்முக நாடுகளில் இந்தியா 67ஆவது இடத்தில் அங்கம் வகிக்கிறது. ருவாண்டா, சூடான் போன்ற நாடுகளைவிட மோசமான அளவில் இந்தியா இருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், சோனியா காந்தி தலைமையில் இயங்கும் தேசிய ஆலோசனைக் கவுன்சில் இந்த எதார்த்த உண்மை குறித்து கிஞ்சிற்றும் கவலைப் பட்டதாகத் தெரிய வில்லை. தற்போது இறுதிப்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டிருக் கிற பரிந்துரைகள், உணவுப் பாதுகாப்புக்குத் தேவையான சட்ட வடிவத்தை உத்தரவாதப் படுத்தக்கூடிய விதத்தில் இல்லாதது மட்டு மல்ல, பல பரிந்துரைகள் நல்லது செய்வதற் குப் பதிலாகத் தீமை விளைவிக்கக் கூடி யவைகளாகவே இருக்கின்றன. இதில் மிக வும் மோசமானது, அது அனைவருக்குமான பொது விநியோகமுறையை நிராகரித்திருப் பதும், வறுமைக்கோட்டிற்கு மேல் / வறுமைக்கோட்டிற்குக் கீழ் என்கிற பொது விநியோக முறையையே ஏற்றுக்கொண் டிருப்பதுமாகும். இந்த ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால், இனிமேல் இந் தியாவில் அனைவருக்குமான பொது விநியோகமுறை என்பது சட்டப்படி இல்லை என்றாகிவிடும்.

தேசிய ஆலோசனைக் கவுன்சிலின் பரிந்துரைகள் மேலும் பல பிரச்சனைகளை உருவாக்கியுள்ளன. கவுன்சில், அரசாங்கம் மேற்கொண்டுவரும் ஏழைமக்களுக்கு எதி ரான நடவடிக்கைகளுக்கு எதிராக அறிவுரை கள் சொல்வதற்குப் பதிலாக, அவற்றை முழு மையாக ஏற்றுக்கொண்டு, பரிந்துரைகளை அளித்திருக்கிறது. அதுமட்டுமல்ல, அரசாங் கத்தின் ஏழை மக்களுக்கு விரோதமான நட வடிக்கைகளை மக்கள் தெரிந்துகொள்ளக் கூடாது என்பதற்காக, தன்னுடைய மக்கள் விரோத பரிந்துரைகளின்மேல் நளினமான வார்த்தைகளைப் பயன்படுத்தித் தந்திருக் கிறது. குழுவில் இருந்தவர்களில் பொருளா தார நிபுணர் ஜீன் டிரேஸ் (துநயn னுசநணந) தவிர மற்ற அனைவருமே உணவுப் பாதுகாப்புக் குத் தேவையான அடிப்படைத் தேவைகள் குறித்துக் கவலைப்படாமல் அரசின் கொள்கைகளோடு சமரசமாகிவிட்டார்கள்.

பரிந்துரைகளின் விவரங்கள் வருமாறு:
(1) வறுமைக்கோட்டிற்குக் கீழ் / வறுமைக் கோட்டிற்கு மேல் பொது விநியோக முறை என்பது நளினமான பெயர்களில் தொடரும். இவ்வாறு வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்கள் ‘முன்னுரிமைப் பிரிவினர்’ களாக (ஞளு - யீசiடிசவைல ளநஉவiடிளே) மாறுவார்கள். வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் ‘பொதுப் பிரிவினர்’ (ழுநநேசயட ளநஉவiடிளே) என்று பெயரிடப் படுவார்கள். (2) முன்னுரிமைப் பிரிவினர் கிராமப்புற இந்தியாவில் 46 விழுக் காட்டினராகவும், நகர்ப்புறத்தில் 28 விழுக் காட்டினராகவும் இருப்பார்கள். (3) பொதுப் பிரிவினர் கிராமப் பகுதிகளில் 44 விழுக்காட் டினராகவும், நகர்ப் பகுதிகளில் 22 விழுக்காட் டினராகவும் இருப்பார்கள். (4) ஒரு குடும் பத்தை முன்னுரிமைப் பிரிவில் சேர்ப்பதா, பொதுப் பிரிவில் சேர்ப்பதா என்பது அரசாங்கத்தின் முடிவுக்கு விடப்படுகிறது. (5) திட்டக் கமிஷனின் 2004-2005 வறுமை மதிப்பீடுகளின் அடிப்படையில் மாநில வாரியான கிராமப்புற மக்களின் கணக்குகள் சரிசெய்து கொள்ளப்படும். (6) முன்னுரிமைப் பிரிவினர் 35 கிலோ கிராம் உணவுதானியங் களை, அரிசி ஒரு கிலோவிற்கு 3 ரூபாய் என்ற விதத்திலும், கோதுமை ஒரு கிலோ 2 ரூபாய் என்ற விதத்திலும், தினைப் பொருட்கள் (அடைடநவள) ஒரு கிலோவிற்கு 1 ரூபாய் என்ற விதத்திலும் பெற உரிமையுடையவர்கள். (7) பொதுப் பிரிவினர் 20 கிலோ கிராம் பெற உரிமையுடையவர்கள். ஆனால் விலைகள் சம்பந்தப்பட்ட தானியங்களுக்காக விவசாயி களுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலையில் 50 விழுக்காட்டை விஞ்சாது இருக்க வேண்டும். (8) இவை படிப்படியாக சட்டரீதியாக அமல்படுத்தப்படும்.

மத்திய அரசின் அநீதியான அனைத்து முறைகளுக்கும் சட்டமுலாம்
தேசிய ஆலோசனைக் கவுன்சிலானது மத்திய அரசின் அநீதியான அனைத்து வித மான முறைகளுக்கும் சட்ட முலாம் பூசி யிருக்கிறது. நாட்டில் வறிய நிலையில் உள்ளவர்கள் குறித்து அரசின் பல்வேறு அங் கங்கள் பல்வேறு மதிப்பீடுகளை அளித்துள் ளன. திட்டக் கமிஷன், வறியவர்கள் 27 விழுக் காடு என்கிறது, டெண்டுல்கர் குழு 2003-2004இல் எடுத்த மதிப்பீட்டின்படி அது 37 விழுக்காடு ஆகும். சாக்சனா குழுவானது இதனை 50 விழுக்காடு என்கிறது. வாத்வா (றுயனாறய) குழுவானது, ஒரு நாளைக்கு 100 ரூபாய் கூட செலவழிக்க இயலாதவர்கள் 70 விழுக்காட்டினர் என்று கூறியிருக்கிறது. ஒரு நாளைக்கு 20 ரூபாய்கூட செலவழிக்க இயலாதவர்கள் நாட்டின் 77 விழுக்காட்டினர் இருப்பதாக அர்ஜூன் சென்குப்தா குழு அறிக்கை அளித்திருக்கிறது. ஆனால் இதில் எதனையும் தேசிய ஆலோசனைக் கவுன் சில் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக ஒரு புதிய எண்ணிக்கையை அது முன்வைத்திருக்கிறது. எந்த அடிப்படையில் தேசிய ஆலோசனைக் கவுன்சில் வறுமைக் கோட்டிற்குக் கீழான குடும்பங்களைத் தீர் மானித்தது என்பதே நம் கேள்வியாகும். அது கூறியுள்ள கணக்கிற்கு எந்த அறிவியல்ரீதி யான அடிப்படையும் கிடையாது.

வறுமைக் கோட்டிற்கு
மேல் உள்ளவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி
உணவு தானியங்கள் இருப்பு அதிகமாக இருப்பதை அடுத்து, வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு உணவுப் பொருள்கள் மானிய விலையில் அளிப்பதை முற்றிலுமாக நீக்கிவிட வேண்டும் என்று அரசாங்கம் வலி யுறுத்தி வருகிறது. திட்டக் கமிஷன் தன்னு டைய குறிப்பில் வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கும் உணவுப் பொருள்கள் அளிப்பதாக இருந்தால், அவர்களுக்கான விலைகள், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள வர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை மற்றும் அளவு வேறாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறது. தேசிய ஆலோச னைக் குழு இதனை ஏற்கவில்லை. மாறாக, வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு 20 கிலோ கிராம் உணவு தானியங்களை அளித்திடப் பரிந்துரைத்திருக்கிறது. இதற்கு உணவு தான்யங்கள் போதுமான அளவிற்கு இல்லை என்று கூறுவது தவறான வாத மாகும். வேண்டிய அளவிற்கு நாட்டில் உண வுப் பொருள்கள் உற்பத்தியாகின்றன. அரசு செய்ய வேண்டியதெல்லாம் அவற்றைக் கொள்முதல் செய்து, விநியோகிக்க வேண்டி யதுதான். இதில் மாநில அரசுகளுக்கும் பெரும் பங்கு உண்டு. இதில் பொறுப்பைத் தட்டிக் கழிக்க மத்திய அரசு முயல்வதே உண்மை யான பிரச்சனையாகும்.

இவ்வாறு தேசிய ஆலோசனைக் கவுன் சில், உணவுப் பாதுகாப்புச் சட்டமுன்வடி வின் மீது முற்றிலும் அதிருப்தியடையக் கூடிய விதத்தில் பரிந்துரைகளை அளித் திருக்கிறது. இருக்கின்ற பாகுபாடுகளை சட்டரீதியாக மாற்றுகிறது, புதிய பிரிவு களையும் மோதல்களையும் உருவாக்குகிறது, மாநில அரசுகளின் பங்களிப்பினைக் குறைக் கிறது.

உணவுப் பாதுகாப்புச் சட்டம் மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய விதத்தில் நியாய மானதாகவும், முழுமையானதாகவும் இருக்க வேண்டுமானால், அவை குறைந்தபட்சம் கீழ்க்கண்ட அம்சங்களையாவது கொண்டி ருக்க வேண்டும்.

1. வறுமைக் கோட்டிற்குக் கீழ் / வறுமைக் கோட்டிற்கு மேல் என்கிற பாகுபாடுகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்.

2. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 35 கிலோ கிராம் உணவு தானியங்கள் உத்தரவாதப் படுத்தப்பட வேண்டும்.

3. உணவு தானியங்கள் கிலோ 2 ரூபாய் விலைக்கு நிர்ணயம் செய்யப்பட வேண்டும். தினைப் பொருட்கள் மற்றும் தானியங்கள் (அடைடநவள / உடியசளந பசயiளே) கிலோ 1 ரூபாய் என்ற விதத்தில் அளிக்கப்பட வேண்டும். ஏனெ னில் நாட்டின் பல மாநிலங்களில் மக்கள் இதனைப் பிரதான உணவாக எடுத்துக் கொள்கிறார்கள். இவை மிகவும் சத்தான உணவுமாகும்.

4. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மற் றும் பள்ளிக்குச் செல்ல இருக்கும் குறைந்த வயது குழந்தைகள் உட்பட அனைவருக்கும் மதிய உணவை அளிப்பதை சட்டரீதியாக உத்தரவாதம் செய்திட வேண்டும். அதற் கேற்ற வகையில் ஒருங்கிணைந்த ஊட்டச் சத்து மையங்களுக்கு உணவுப் பொருள் களின் ஒதுக்கீட்டை உத்தரவாதம் செய்திட வேண்டும்.

5. பல மாநில அரசுகள் செய்வதுபோல் மேலும் பல அத்தியாவசியப் பொருள்களை கட்டுப்பாட்டு விலையில் அளிப்பதை உத்தரவாதம் செய்திட வேண்டும்.

-தமிழில்: ச.வீரமணி

மீனவர்களை அகதிகளாக்கும் அறிவிப்பாணை -வீர.அருண்

வரைவு கடலோர ஒழுங்கமைவு மண்டலம் அறிவிப்பாணை, மீனவ மற்றும் கடலோர சமூகங்களின் வாழ்வாதாரத்திற்கும் கடல் வளங் களுக்கும் சாவுமணி அடிக்கும் அறிவிப்பாணையாகும். இதில் ஏதேனும் ஆட்சேபணையிருந்தால் தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு பம் மாத்து செய்கிறது.

இயற்கை வளம் கொஞ்சும் கடற்கரையை பெரும் தொழில் நிறுவனங்களுக்கும் கேளிக்கை விடுதிகளுக்கும், சிறப்பு பொருளா தார மண்டலங்கள் என்ற பெயரில் சூறையாட வரும் பன்னாட்டு நிறு வனங்களும் ஏற்கெனவே தீர் மானிக்கப்பட்டுள்ள சதி திட் டத்தை அமலாக்கவே, பழைய சயனைடு புதிய குப்பியில் வரு கிறது. இந்த அறிவிப்பாணை சுனாமி, புயல், சூறாவளி போன்ற பேரிடர்களைக் காட்டிலும் மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தும் பெரும் பேரிடராகும்.

ஆரம்பத்தில் கடலோரப் பகுதி யில் சுற்றுச்சூழல் அழிவிலிருந்து பாதுகாக்கவே கடலோர ஒழுங் கமைவு மண்டல 1991 அறிவிப் பாணை கொண்டுவரப்பட்டது. ஆனால் தொழில் நிறுவனங்கள், சுற்றுலாத் தளங்கள், கேளிக்கை விடுதிகள், இறால் பண்ணைகள், மணல் குவாரிகள் போன்றவற்றை ஊக்குவிக்கும் வகையில் இந்த அறிவிப்பாணை தொடர்ந்து 23 முறை தளர்த்தப்பட்டது. நீர்த்துப் போகச் செய்யப்பட்டது. மேலும் பன்னாட்டு மூலதனத்திற்கு ஆதர வாக சிறப்பு பொருளாதார மண் டலங்கள் கடலோரங்களில் கொண்டு வருவதற்காக மத்திய அரசு வேளாண் விஞ்ஞானி எம். எஸ்.சுவாமிநாதன் குழு அமைத்து புதிய பெயரில் கடலோர மேலாண்மை மண்டலம் 2008 அறிவிப்பாணை யை கொண்டு வந்தது. மீனவ அமைப்புகளும், சுற்றுச்சூழல் ஆர் வலர்களும், தொழிற்சங்கங்களும் இதனை கடுமையாக எதிர்த்தன. தமிழ்நாடு தவிர கேரளா உள்ளிட்ட அனைத்து கடலோர மாநில அரசு களும் தங்கள் எதிர்ப்பை தெரிவித் தன. வேறு வழியின்றி மீண்டும் எம். எஸ்.சுவாமிநாதன் தலைமையில் மூவர் வல்லுநர்குழு 2009 ஜூன் 15ல் அமைக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆய்வு நாடகத்தை நடத்தி யது. 2009 ஜூலை 16ல் 2008 அறி விப்பாணையை நடைமுறைப் படுத்தாமல் காலாவதியாக விட்டு விடலாம் என்று வல்லுநர்குழு பரிந் துரைத்தது. 1991 அறிவிப்பாணை யை பலப்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த சட்டம் வேண்டும் என்றும் முன் மொழிந்தது.

சிஆர்இசட் 1991 அறிவிப் பாணையின் (மூலவடிவின்) படி கடலோரத்தில் தடை செய்யப்பட்ட செயல்பாடுகள்

* அனைத்து வகையான புதிய தொழிற்சாலைகள் அமைப்பதும், இருக்கின்ற தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யும் நடவடிக்கைகள்.

* இடர்விளையக்கூடிய பொருட்களை அகற்றுதல் ஆகிய அனைத்து நடவடிக்கைகள்.

* மீன் பதப்படுத்தும் தொழில் கள் நிறுவுதல் மற்றும் விரிவுபடுத்துதல்.

* அனைத்து வகையான கழிவுநீர் மற்றும் கழிவுப்பொருள்கள் அகற்றும் நடவடிக்கைகள்.

* தொழிற்சாலைகள் மற்றும் நகரங்களின் சுத்திகரிக்கப்படாத கழிவுப்பொருட்களைக் கடலில் கலத்தல்.

* நகரங்களின் கழிவுப்பொருட் கள், ஆலைகளின் திடக் கழிவுகள், மென் சாம்பல் போன்ற பொருட் களை பள்ளத்தை நிரப்புவதற்காக கடற்கரைப் பகுதியில் இருப்பு வைத்தல் போன்ற நடவடிக்கைகள்

* அனல்மின் நிலையங்கள் மற்றும் இதர தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் சாம்பல் மற்றும் இதர கழிவுகளை கொட்டி வைத்தல்.

* நிலம் மீட்புப் பணி, வரப்பு அமைத்தல் அல்லது கடல்நீரின் இயல்பான வளத்தைப் பாதிக்கும் அனைத்து நடவடிக்கைகள்.

* மணல் வாருதல், பாறை களைத் தோண்டுதல் மற்றும் இதர நிலத்தில் பொருட்களை தேடுதல்.

* உயர் பேரலை வரிசையி லிருந்து (ழகூடு) 200 மீட்டர் வரை நிலத்தடி நீரை எடுப்பதற்கான கட்டுமானங்கள்

* கடற்கரை ஒழுங்கமைவு மண்டலம் பகுதியைப் பொருத்த வரை இந்த அறிவிப்பாணையின் 8வது பத்தியில் கூறப்பட்டுள்ள கட்டுமான நடவடிக்கைகள், இதர நடவடிக்கைகள் அனைத்தும்.

* உயர் பேரலை வரிசை மற்றும் கீழ் பேரலை வரிசை வரிசை களுக்கு இடைப்பட்ட பகுதியில் கட்டுமானப் பணிகள்.

* கடல் மணல் குன்றுகள், தேரி கள் மற்றும் இயற்கை அமைப்பு களை அழகுபடுத்தும் நடவடிக்கைகள்.

* முன்னேற்றங்கள் தடை செய் யப்பட்ட பகுதிகளிலும் மீனவ சமூகங்களின் குடியிருப்புகளை, கடலோர முறைப்படுத்துதல் அறிவிப் பாணை 1991 அனுமதிக்கின்றது.

இந்தியா நீண்ட கடற்கரையை கொண்ட நாடு, வாழும் மக்கள் தொகையில் 25 விழுக்காடு கடலும் கடல்சார்ந்த பகுதிகளில் வாழ்கின் றனர். ஒரு கோடிக்கும் மேலான மீனவ மக்களின் வாழ்க்கையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க 1991 அறிவிப்பாணை மூலவடிவில் பாது காக்கப்பட வேண்டும் என்பதே மீனவ மக்களின் கோரிக்கையாகும்.

மத்திய அரசோ கடலோர முறை மை மண்டல 1991 அறிவிப் பாணையை பலப்படுத்துகிறோம் என்று கூறி இதுவரை செய்யப்பட்ட அனைத்து விதிமீறல்களுக்கும் சட்டப்பூர்வமான செயல்வடிவம் கொடுக்கவே புதிய 2010 அறிவிப் பாணை வந்துள்ளது. மீனவ மக்க ளின் எழுச்சியால் தோற்கடிக்கப் பட்ட கடலோர மண்டல மேலாண் மை 2008 அறிவிப்பாணையின் பல பிரிவுகளையும் நியாயப்படுத்துகிறது.

1991 அறிவிப்பாணையை நடை முறைப்படுத்தி கண்காணிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் உரு வாக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கடலோர மேலாண்மை அதிகார அமைப்புகளின் செயல்பாடுகளை யும், அதிகாரங்களையும் நீர்த்துப் போகச் செய்யும் புதிய நிர்வாக முறைகளை முன் மொழிகிறது.

டாக்டர் வா.மைத்ரேயன் தலை மையில் அமைந்த நாடாளுமன்ற நிலைக்குழு அளித்த முடிவுகளை யும், பரிந்துரைகளையும் நிராகரிப் பது நாடாளுமன்ற அவமதிப்பு செயலாகும்.

புதிய அறிவிப்பாணை 2010 அம லானால், பாரம்பரியமாக கடலோரத் தில் குடியிருக்கும் மீனவர்களையே ஆக்ரமிப்பாளர்களாக மாற்றியுள்ளது. கடலோரங்களில் தொழிற்சாலை கள், சிறப்பு பொருளாதார மண்டலங் களாக மாறினால் மாசுபடுதல் அதிகமாகும். கடல்அரிப்புகள் ஏற்படும், மீனவர் வாழிடங்கள் அழியும், அரியவகை உயிரினங்கள் மறைந்து போகும். பூர்வகுடி மீனவ மக்கள் தங்கள் சொந்த மண்ணில் அகதிகளாக்கப்பட்டு புலம் பெயரும் தொழிலாளர்களாக மாற்றப்படுவார்கள்.

கட்டுரையாளர், தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பின்
மாநிலப் பொருளாளர்.

மெகா ஊழல்: விரைவாக விசாரணை தேவை - பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பயணம் தொடர்பான ஆட்டபாட்டங்கள் அடங்குவதற்கு முன்னாலேயே, நாடாளுமன்றத்தில் குளிர் காலக் கூட்டத் தொடரில் புயல் வீசத் தொடங்கி விட்டது. அரசாங்கத்தின் உயர் மட்டங்களில் சமீபத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற மெகா ஊழல்கள் குறித்து ஆதாரங்களுடன் செய்தி கள் வெளியானதைத்தொடர்ந்து இவையே உறுப்பினர்களின் பிரதான விவாதப் பொரு ளாக மாறின. டெலிகாம் அமைச்சகத்தால் 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை தொடர்பான தலைமை கணக்கு மற்றும் தணிக்கைத்துறைத் தலைவ ரின் (சிஏஜி) அறிக்கையானது, கடந்த மூன் றாண்டுகளாக 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக குற்றச்சாட்டுகள் அனைத்தையும் உண்மையே என்பதை உரத்துச் சொல்லியிருக்கிறது. மும் பையில் நடைபெற்றுள்ள ஆதர்ஷ் வீடு கட் டும் சங்க ஊழல் மற்றும் சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட் டிகள் தொடர்பான பல்வேறு ஊழல்கள் தொடர்பாகவும் முழுமையாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, இதில் ஈடுபட்டவர்கள் அனைவரும் குற்றவாளிக் கூண்டில் ஏற் றப்பட வேண்டும். இவை ஊழல்களின் பட்டி யலில் கடைசியாகச் சேர்ந்துள்ள ஊழல்களா கும். இதற்கு முன்பே கனிம வளங்கள் சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஊழல் வெளியாகியுள்ளது.

நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத் தங்களின் கீழான சட்டவிரோத முதலாளித் துவ (உசடிலே உயயீவையடளைஅ) வளர்ச்சியின் வெளிப்பாடே இத்தகைய ஊழல்கள். வேண்டியவர்களுக்கு ஒப்பந்தங்களை அளிப்பதும், பொதுச் சொத் துக்களைத் தங்கள் இதயத்திற்கு இதமானவர் களுக்கு வாரி வழங்கி அவர்களைப் பெரும் பணக்காரர்களாக மாற்றுவதும் சட்டவிரோத முதலாளித்துவத்தின் வடிவங்களில் சிலவா கும். பிரதமர் அவர்களே, சட்டவிரோத முத லாளித்துவம் இந்தியாவை ஆட்டிப்படைக் கிறது என்று பதிவு செய்திருக்கிறார். ஆயினும் அவரது சொந்த அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர்கள் மீதே சட்டவிரோத முதலாளித் துவம் மூலமாக ஊழல் புரிந்ததாகக் குற்றச் சாட்டுக்கள் வந்துள்ளன.

எதிர்க்கட்சிகள் மத்தியில் உள்ள கடுங் கோபத் தீயைத் தணிக்க வேண்டும் என்பதற் காக நாடாளுமன்றம் புதனன்று துவங்குவ தற்கு முன்பே, காங்கிரஸ் கட்சி தன்னுடைய மகாராஷ்ட்ர முதல்வரை நீக்கிவிட்டது. மும் பை ஆதர்ஷ் வீடு கட்டும் சங்கத்தில் நடை பெற்றுள்ள ஊழலுக்குக் காரணமான நபர் களை நீக்கியதன் மூலம் நிலைமைகள் சரி யாகிவிடும் என்று அது நம்பியது. ஆனால் உண்மையில் நிலைமைகள் மேலும் மோச மாக மாறின. அதேபோன்று, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் சுரேஷ் கல்மாடி நீக்கப்பட்டதாலேயே காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான பல்வேறு ஊழல்களையும் மூடி மறைத்துவிட முடியாது.

இவை அனைத்திற்குப் பிறகும் கூட, தலைமை கணக்கு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை, 2ஜி ஸ்பெக்ட் ரம் விற்பனையில் டெலிகாம் அமைச்சகத் தின் முடிவால் அரசின் கஜானாவிற்கு வர வேண்டிய 1 லட்சத்து 76 ஆயிரத்து 379 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக வெளிப் படுத்திய பின்னரும் கூட, டெலிகாம் அமைச் சர் பதவியில் தொடர்கிறார். 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் 1 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 2008 பிப்ரவரியிலி ருந்தே நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வந்தனர். இப்போது குடியரசுத் தலைவருக்கு சிஏஜி அளித்துள்ள அறிக்கையிலிருந்தும், இந்த விஷயம் முழுமையாகப் புலனாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதும், தேவைப்பட்டால் நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைத்து அதன் மூலமாக விசாரணை நடத்திட வேண்டும் என்பதும் தெளிவாகிறது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான ஊழல்கள் மக்கள் மத்தியில் பரவ லாகப் பேசும் பொருளாக மாறியுள்ளது. காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான அமைப்புக் குழு தற்சமயம் தேசிய நாளேடு கள் அனைத்திலும் ஏராளமாக முழுப்பக்க விளம்பரங்கள் அளித்து வருகின்றன. அவற் றில் தாங்கள் செலவழித்த அனைத்தும் நியா யமானதே என்றும் தங்கள் செயல்பாடுகள் அனைத்தும் வெளிப்படையாகவும் தூய்மை யாகவும் நடைபெற்றன என்றும் கூறிவரு கிறது. ஆயினும், காமன்வெல்த் விளையாட் டுப் போட்டிகளுக்கான இணைய தளத்தில் அப்போது காணப்பட்ட விவரங்களைக் கண் ணுறும் எவரும் அதிர்ச்சியடையக்கூடிய விதத்தில் காணப்பட்டன. ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தை புனரமைத்திட அதீத மான அளவிற்கு அதாவது 961 கோடி ரூபாய் செலவழிக்க இருப்பதாக அதில் கூறப்பட்டி ருந்தது. அதேபோன்றுதான் இந்திரா காந்தி ஸ்டேடியத்திற்கு 669 கோடி ரூபாயும், தியான் சந்த் ஹாக்கி ஸ்டேடியத்திற்கு 262 கோடி ரூபாயும், கர்னி சிங் துப்பாக்கி சுடும் மையத் திற்கு 149 கோடி ரூபாயும் செலவழித்திட இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மொத் தத்தில் 44 ஆயிரத்து 459 கோடியே 48 லட்சம் ரூபாய் புனரமைப்புக்காக செலவழிக்கப்பட்டி ருக்கிறது. நாக்பூரில் மிக நவீன வசதிகளு டன் புதிதாக ஒரு ஸ்டேடியத்தைக் கட்டுவ தற்கே 84 கோடி ரூபாய்தான் செலவாகியிருக் கிறது. லஞ்ச ஊழல் தொடர்பாக முன்வைக் கப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளும் முழுமையாக புலன் விசாரணைக்கு உட்படுத் தப்பட வேண்டும். இவ்வாறு கோடிக்கணக் கான ரூபாய் கையாடல்கள் செய்துள்ள கய வர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண் டும். இக்குற்றச்சாட்டுக்களில் பலவற்றைக் குறித்து பல்வேறு ஏஜன்சிகள் ஏற்கனவே புலனாய்வைத் தொடங்கிவிட்டன. ஐ.மு.கூட் டணி-2 அரசாங்கமும் பல் இல்லாத ஒரு கமிட்டி யை இவற்றை விசாரிப்பதற்காக நியமித்திருக் கிறது. இது கயவர்களைக் கண்டுபிடித்துத் தண்டிப்பதற்குப் பதிலாக, அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களிலிருந்து அவர்களைத் தப் பிக்க வைத்து, விஷயத்தை மூடி மறைக்கும் விதத்திலேயே அமைந்திருக்கிறது. இக்குற் றச்சாட்டுக்களுக்கு எதிராக மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) போன்ற ஏஜன்சி கள் மூலம் விரைந்து புலனாய்வினைச் செய்து, குற்றம் புரிந்தோருக்கு எதிராகத் தண்டனை நடவடிக்கைகளை விரைவுபடுத்திட அரசாங் கம் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பதே இன்றைய அவசியத் தேவையாகும்.

ஆதர்ஷ் வீடுகட்டும் சங்க ஊழலானது ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள், மகாராஷ் டிரா மாநில உயர் அதிகார வர்க்கத்தினர் மற் றும் ஆளும் வர்க்க அரசியல்வாதிகள் ஆகிய வர்கள் ஒருவர்க்கொருவர் மிகவும் அற்பத்தன மான முறையில் உடந்தையுடன் செயல்பட்டி ருப்பதைக் காட்டுகிறது. மும்பையில் கொலாபா மாவட்டத்தில் மிகவும் பிரதானமான நிலப் பகுதியில் கார்கில் யுத்தத்தில் இறந்தவர்க ளின் குடும்ப விதவைகளுக்கு ஒதுக்கீடு செய் வதற்காக உருவாக்கப்பட்ட இந்த இடத்தில் இந்தக் கும்பல் 31 மாடிகள் கொண்ட குடியி ருப்பு அபார்ட்மெண்ட் வீடுகள் கட்டியிருக் கிறது. நம் நாட்டைப் பாதுகாத்திட உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு நம் நாட்டில் உள்ள அரசியல்வாதிகளில் சிலர் அளித்தி டும் இத்தகைய மரியாதையைப் பார்க்கும் போது எவ்வளவு வெட்கமாக இருக்கிறது? மிகவும் அடிமாட்டு விலைக்கு, இந்த அபார்ட் மெண்ட்டுகளை தங்களுக்கு மிகவும் வேண் டிய உற்றார், உறவினர்களுக்கு அளித்துள்ள னர். முதலமைச்சரை ராஜினாமா செய்ய வைத்துவிட்டதாலேயே ஊழலை முற்றிலும் மூடி மறைத்துவிடலாம் என்று கருதிவிடக் கூடாது. ராணுவத்தின் ஒரு சில பிரிவுகளும், மகாராஷ்டிரா அரசாங்கமும் இதில் சம்பந்தப் பட்டிருப்பதால், மத்திய அரசின் ஏஜன்சி ஒன் றின் மூலம் உயர்மட்ட விசாரணை நடத்தப் பட்டு, ஊழல் புரிந்தோர் அடையாளம் காணப் பட்டு, தண்டிக்கப்பட வேண்டியது அவசியம்.

இப்போது வெளிவந்துள்ள ஊழல்கள் மட்டுமல்லாமல், இதற்கு முன் வெளியாகி யுள்ள சட்டவிரோதமாக கனிம வளங்கள் கொள்ளை போனது போன்றவை மீது இன்ன மும் உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப் படாமல் இருக்கின்றன. பிரதமர் சட்டவிரோத முதலாளித்துவம் குறித்து எள்ளிநகையாடி யுள்ள அதே சமயத்தில், ஐ.மு.கூட்டணி-2 அரசாங் கமோ தன்னுடைய நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை கண்மூடித் தனமாகக் கடைப்பிடிப்பதன் மூலம், இத்தகைய சட்ட விரோத முதலாளித்துவத்தை ஊட்டி வளர்த்து வருகிறது.

‘டிரான்பரன்சி இண்டர்நேஷனல்’ (கூசயளேயீயசநnஉல ஐவேநசயேவiடியேட) என்னும் அமைப்பு உல கில் உள்ள நாடுகளில் 2010இல் உயர்மட்ட அளவில் ஊழல்கள் இருப்பது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா 87ஆவது இடத்தைப் பெற்றிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. அதிக ஊழல் புரிந்த நாடு 0 என்றும், ஊழலே இல்லாத நாடு 10 என்றும் ஓர் அளவுகோலை வைத்து ஓர் அட்டவணை உருவாக்கப்பட்டதில் இந்தியா 3.3 என்ற இலக்கைப் பெற்றிருக்கிறது. இத் தகைய நிலைமையை அனுமதிக்க முடியாது. நம் நாட்டு மக்களில் பெரும் பகுதியினர் ஊட்டச்சத்துக்குறைவால், பசி, பஞ்சம், பட்டி னியால், அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார் கள். நம்முடைய மக்களின் நியாயமான தேவைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, அரசு பல்லாயிரக்கணக்கான ரூபாய் கொள் ளை போவதற்கு உதவிடும் சட்ட விரோத முத லாளித்துவத்தை ஊட்டி வளர்ப்பதிலேயே குறியாக இருக்கிறது. இவ்வாறு ஆட்சியாளர் கள் ஏழைகளைக் கசக்கிப் பிழிவதன் மூலம் பணக்காரர்களை, மேலும் பணக்காரர்களாக மாற்றக்கூடிய விதத்தில் இந்தியா பணக்காரர் களுக்கான நாடு என்பதை மீண்டும் ஒரு முறை மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறது. நாட் டை நல்வழியில் செலுத்துவதற்கு மட்டு மல்ல, நாட்டு மக்களில் பெரும்பாலானவர்க ளின் வாழ்க்கையை மேம்படுத்திடவும் உயர் மட்டத்தில் உள்ள லஞ்சஊழலை ஒழிப்பது என்பது மிகவும் அத்தியாவசியமாகும்.

வரவிருக்கும் காலங்களில், நாடாளுமன் றம் மேற்குறிப்பிட்ட ஊழல்கள் தொடர்பாக செயல்படவிருக்கும் அதே சமயத்தில், வலு வான மக்கள் போராட்டங்களைத் தீவிரப்படுத்தி, ஊழல் புரிந்திட்டவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வைத்திட இந்த அரசாங்கத்தின் மீது நிர்ப்பந்தத்தை ஏற் படுத்தவேண்டியதும் அவசியம்.

தமிழில்: ச.வீரமணி

ஒபாமாவின் கொள்கைகளை எதிர்ப்பது ஏன்? -டி.கே.ரங்கராஜன் எம்.பி.

அமெரிக்காவின் 44வது அதிபர் பாரக் ஒபாமா இந்தியா வந்துள்ளார். உலகின் அதி காரம் வாய்ந்த பதவி என்று கருதப்படும் இந்த பதவிக்கு ஆப்பிரிக்கர் - அமெரிக்கரான கறுப் பினத்தைச் சேர்ந்த பாரக் ஒபாமா தேர்வு செய் யப்பட்ட பிறகு அவர் இந்தியா வருவது இது முதன்முறையாகும்.

அமெரிக்க அதிபராக பல அறிவு ஜீவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியாக ஜார்ஜ் வாஷிங்டன் 1789ம் ஆண்டு ஏப்ரல் 30ம்தேதி பதவியேற் றார். அதன் பிறகு 219 ஆண்டுகள் கழிந்த பிறகு தான் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் அந்நாட்டில் ஜனாதிபதியாக வர முடிந்துள் ளது. எவ்வளவுதான் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டிருந்தபோதும், ஏகாதிபத்திய நாடான அமெரிக்காவின் சமூக வாழ்க்கையில் இனவெறி எந்தளவுக்கு புரையோடி போயுள் ளது என்பதை இதன் மூலம் உணர முடியும்.

நவம்பர் 8ம்தேதி நாடாளுமன்றத்தில் ஒபாமா உரையாற்ற உள்ளார். அனைத்து நாடா ளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து இடது சாரி உறுப்பினர்களும் அவரது உரையை கேட்க உள்ளனர். கிளிண்டன் ஜனாதிபதியாக இருந்தபோது நாடாளுமன்றத்தில் அவர் ஆற் றிய உரையை இடதுசாரிக் கட்சிகள் புறக் கணித்தன.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த புஷ்சுக்கு நாடாளுமன்றத்தில் உரை யாற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது அரசை இடதுசாரிக் கட்சிகள் ஆதரித்தது தான் இதற்கு காரணம்.

ஒரு மகிழ்ச்சியான மனநிலையில் ஒபாமா இந்தியா வந்துள்ளதாக கூற முடியாது. அமெ ரிக்காவில் நடந்த மாகாண இடைத்தேர்தலில் அவரது ஜனநாயக கட்சி படுதோல்வி அடைந் ததோடு செனட் சபையில் அவரது கட்சி சிறு பான்மையாக குறுகி விட்டது. இதனால் அவ ரது பதவிக்கு ஆபத்து இல்லை என்றபோதும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் அந்நாட்டு மக்களுக்கு அவர் அளித்த வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்ற போகிறார் என்பது கூர்மையாக கவனிக்கப்படும்.

தேர்தலின்போது பாரக் ஒபாமா படாடோ பமாக அறிவித்த பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதே உண்மை. 2010ம் ஆண்டு ஆகஸ்ட்டில் அமெரிக்கா குறித்து வெளியான புள்ளி விபரங்கள் கவலை அளிப்பதாகவே உள்ளது. அந்நாட்டின் 90 சத வீத மக்கள் கடுமையான பொருளாதார சிக்க லில் சிக்கியுள்ளனர். வேலையின்மை தொடர் ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. விலை வாசி விண்ணை தொடுகிறது. 2008ம் ஆண்டு ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட பிறகு பாரக் ஒபாமாவின் செல்வாக்கு சரிந்து வரு கிறது என்பதை கணிப்புகள் கூறுகின்றன.

உற்பத்தியை பெருக்குவது எப்படி என்று உலகிற்கு அமெரிக்கா உபதேசம் செய்கிறது. சர்வதேச நிதியம், உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு ஆகிய சர்வதேச நிதி அமைப்பு களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு உலக நாடுகளுக்கு பல்வேறு நிர்ப் பந்தங்களை தருவதோடு, ஆலோசனை களை வழங்குகிறது அமெரிக்கா. ஆனால், அந்த நாட்டின் பொருளாதார நிலையோ மிக வும் பரிதாபகரமான நிலையிலேயே உள்ளது. இந்த ஆண்டு மட்டும் 140 வங்கிகள் மூடப் பட்டுள்ளன. மேலும் 829 வங்கிகள் சிக்கலில் உள்ளதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

அமெரிக்காவின் கடந்த கால ஆட்சியாளர் கள் பின்பற்றிய உள்நாட்டு, வெளிநாட்டு கொள் கைகளால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டி அதன் மூலம் ஆட்சிக்கு வந்தவர் ஒபாமா. ஆனால், அவரால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதே நிதர்சனம். 2009 அக்டோபரில் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத் தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இந்த விபரத்தை பதிவு செய்துள்ளன.

முந்தைய புஷ் நிர்வாகம் ஏற்படுத்திய பல சிக்கல்களை, கோளாறுகளை தீர்ப்பதற்கு ஒபாமா அளித்த பல வாக்குறுதிகள் நிறை வேற்றப்படவில்லை. ஆப்கானிஸ்தான், பாலஸ்தீன பிரச்சனைகளில் முந்தைய நிர் வாகம் மேற்கொண்ட அதே அணுகுமுறை யையே ஒபாமா நிர்வாகமும் பின்பற்றுகிறது. இராக் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்க முடியவில்லை. அந்த நாட்டில் முறையான ஜனநாயக ஆட்சியை நிறுவவும் இல்லை.

அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு நிதி நிறுவனங்கள்தான் அந்தநாட்டின் பொரு ளாதாரத்தை தீர்மானிக்கின்றன. உலக நாடு களை சுரண்டுவதே அவர்களது நோக்கம். எல்லா வளமும் உள்ள அமெரிக்க நாட்டின் வர்க்க குணம் என்பது ராணுவ தளவாட- தொழிலை (ஆடைவையசல ஐனேரளவசயைட ஊடிஅயீடநஒ) அடிப்படையாக கொண்ட ஒரு நாடாகவே உள்ளது. சுருக்கமாக சொல்வதானால் ஒரு நாள் தீபாவளியை நம்பி சிவகாசி பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகம் முழு வதும் போர் வெடித்து வேட்டுச் சத்தம் கேட் டுக் கொண்டேயிருந்தால்தான் அமெரிக்கா வின் பொருளாதாரம் நிலைபெற முடியும்.

இன்றைக்கு உலகில் 700 முதல் 800 இடங்களில் அமெரிக்கா தனது ராணுவ தளங்களை நிறுவியுள்ளது. சிறிதாகவோ, பெரியதாகவோ நூற்றுக்கும் மேற்பட்ட நாடு களில் அமெரிக்க ராணுவம் உள்ளது. பல் வேறு நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா நேரடியாகவும், மறைமுகமாகவும் தலையிடுகிறது. முன்பு ஈரானுக்கும், இராக்குக் கும் ஒரே நேரத்தில் ஆயுதங்களை விற்றது போல இப்போது இந்தியாவுக்கும், பாகிஸ் தானுக்கும் அமெரிக்கா ஆயுதங்களை விற் பனை செய்கிறது.

1950களில் நாம் உணவுக்கு அமெரிக்கா விடம் கையேந்தி நின்றோம். பிஎல் 480 என்ற சட்டத்தின்படி நமக்கு உணவு வழங்க வகை செய்யப்பட்டது. அமெரிக்க ஒபாமா தன்னு டைய மக்களுக்கு வேலைகேட்க சீனாவை யும், இந்தியாவையும் நாட வேண்டிய நிலை யில் உள்ளார். ஒபாமா ஒற்றை ஆளாக இங்கு வரவில்லை. அவருடன் 250க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் உடன் வருகிறார்கள். அமெ ரிக்காவில் தயாராகும் ராணுவ தளவாடங்கள், விமானங்கள், அணு உலைகள் ஆகியவற் றுக்கு சந்தை தேடி இங்கே வருகிறார் ஒபாமா. இவற்றை நாம் வாங்கினால் அவர்களுடைய நாட்டில் தொழில்வளர்ச்சி ஏற்படும், இதன் மூலம் வேலைவாய்ப்பு உருவாகும். அவர்களது நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை இறக் குமதி செய்து, நமது சந்தையில் விற்க வேண் டும் என்று கோரிதான் வந்துள்ளார்.

ஒபாமாவின் முதல்நாள் பயணத்திலேயே அமெரிக்க நிறுவனங்களுடன் ரிலையன்ஸ் உள்ளிட்ட இந்திய நிறுவனங்கள் 2.2 பில்லி யன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு உடன்பாடு செய்துகொண்டுள்ளன. இரு தரப்பு வர்த்தக ஒத்துழைப்பு அதிகரிக்குமென குதூகலிக் கிறார் இந்திய பெருமுதலாளி டாடா. அமெ ரிக்காவில் 50ஆயிரம் பேருக்கு இந்த உடன் பாடுகளால் வேலை கிடைக்கும் என்கிறார் ஒபாமா. ஆனால் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் என்பதை ஏற்கனவே நிராகரித்துவிட்டார். உயர் தொழில் நுட்ப விஷயங்களில் கட்டுப்பாடு படிப்படி யாகத்தான் தளர்த்தப்படும் என்றும் கூறி விட்டார்

ஆனால் விவசாயம், உயர் கல்வி, இன்சூ ரன்ஸ், வங்கி ஆகியவற்றில் அந்நிய முத லீட்டை அதிகரிக்க வேண்டுமென்று அமெ ரிக்கா நிர்ப்பந்தம் செய்கிறது. இதற்கு மன் மோகன்சிங் அரசும் துணைபோகிறது. சில் லரை வர்த்தகத்தில் தங்களை அனுமதிக்க வேண்டுமென்று வால்மார்ட் அதிகாரிகள் தில்லியில் முகாமிட்டுள்ளனர். இந்தியாவின் பெருநகரங்களில் தங்களது மால்களை நிறுவ அனுமதிக்க வேண்டுமென அவர்கள் நிர்ப்பந் திக்கின்றனர். சில்லரை வர்த்தகத்தில் வால் மார்ட்டை அனுமதித்தால் 4 கோடி சில்லரை வர்த்தகர்களின் நிலை, வாழ்க்கை சீரழியும்.

போபால் விஷவாயு விபத்துக்கு காரண மான ஆண்டர்சனை ஒப்படைப்பது குறித்து ஒபாமா எந்த உறுதிமொழியும் அளிக்க வில்லை. கியூபாவின் மீதான பொருளாதார தடையை நீக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுக்காண்டு தீர்மானம் நிறைவேற் றியபோதும் அதை அலட்சியப்படுத்துவோர் பட்டியலிலேயே ஒபாமாவும் உள்ளார்.

ஒபாமா ஜனாதிபதியாக வந்ததால் கறுப் பின மக்களின் வாழ்க்கை விடிந்துவிட வில்லை. அமெரிக்காவில் வேலையின்மை 9.6 சதவீதம் அதிகரித்துள்ளது. அதில் கறுப் பின மக்களின் வேலையின்மை விகிதம் 49 சதவீதமாக உள்ளது. இனவெறி என்பது பல் வேறு வடிவங்களில் அமெரிக்க சமூக வாழ் வில் தொடரவே செய்கிறது.

எந்தவொரு தனிநபரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ, இடதுசாரிக் கட்சி களோ எதிர்ப்பதில்லை. அவர் பின்பற்றும் கொள்கை என்ன? அவர் எந்த வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்துகிறார் என்பதை பொறுத்தே ஆதரவு அல்லது எதிர்ப்பு என் பதை முடிவு செய்கிறது. அந்த வகையில் ஒபாமா இந்தியாவை ரட்சிக்க வரவில்லை. மாறாக, சுரண்டலை, நிர்ப்பந்தத்தை தீவிரப் படுத்தவே வருகிறார். மரண வியாபாரியாக விளங்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியாகவே இங்கு வருகிறார். அவரது வருகையை எதிர்க்க இடதுசாரிக் கட்சிகள் மட்டுமின்றி அனைத்து தேசபக்தர்களும் முன்வர வேண்டும்.

நவம்பர் 8ம் தேதி நாடு முழுவதும் இடதுசாரிக்கட்சிகள் நடத்திட உள்ள ஏகா திபத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தேசமே அணி திரளட்டும்.

செவ்வாய், 14 டிசம்பர், 2010

ஆர்எஸ்எஸ்: பயங்கரவாதத் தொடர்புகள்- பீபிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் ஆட் ள் பயங்கரவாதத் தாக்குதல்களில் சம்பந்தப் பட்டிருப்பது வெளியுலகத்திற் குத் தெரிய வருவது அதிகரித்திருக்கும் சூழலில், ஆர்எஸ்எஸ் ‘தங்களைப் பாது காத்துக் கொள்ள தாக்குதல்’ கொள்கை யைக் கடைப்பிடிக்கத் துவங்கியிருக் கிறது. அது நவம்பர் 10 அன்று அதன் உயர் மட்டத் தலைவர்கள் பங்கேற்புடன் நாடு தழுவிய அளவில் எதிர்ப்பு நடவடிக்கை களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

2007 அக்டோபர் 27 அன்று நடைபெற்ற ஆஜ்மீர் பயங்கரவாதத் தாக்குதலில் சம் பந்தப்பட்டவர்களில் ஆர்எஸ்எஸ் இயக் கத்தின் மூத்த தலைவரான இந்த்ரேஷ் குமார் மட்டும் அல்ல என்று ஊடகங் களில் வெளிவரும் செய்திகள் தெரிவிக் கின்றன.

2010 அக்டோபர் 22 அன்று குற்ற அறிக் கையைத் தாக்கல் செய்துள்ள ராஜஸ் தான் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு குற்ற அறிக்கையில் இந்த்ரேஷ் குமார் ஒரு சதிகாரர் என்று குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அவரை எதிரியாக குற்ற அறிக் கையில் சேர்க்கவில்லை. அவர் தவிர, குற்ற அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட் டுள்ள மற்ற ஐந்து எதிரிகளில், நான்கு பேர் ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் தொடர்புள்ள வர்கள் என்று பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சதியுடன் தொடர் புடைய ஆறாவது முக்கியமான நபர் இறந்துவிட்டதால் எதிரியாகச் சேர்க்கப் படவில்லை. அவ்வாறு இறந்த நபரும் ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் தொடர்புள்ள வர் என்றும் அது குறிப்பிட்டிருக்கிறது.

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 2008 செப்டம்பர் 8 அன்று மாலேகாவ் பயங்கர வாத வெடிகுண்டுத் தாக்குதலுக்கு, ஒருசில வாரங்களுக்குப்பின், மகா ராஷ்ட்ரா பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு பல ரைக் கைது செய்தது. அவற்றில் ஒரு ராணுவ அதிகாரியும் இந்துத்வா இயக்கத் தைச் சேர்ந்த ஒரு சாமியாரும் உண்டு. தேச விரோத பயங்கரவாத நடவடிக்கை களில் ஈடுபட்டமைக்காக இந்துத்வா வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்படுவது சமீபகாலங்களில் இது முதல் தடவையாகும். இதனைத் தொடர்ந்து மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம் (சிபிஐ) மற்றும் ராஜஸ்தான் பயங் கரவாத எதிர்ப்புப்பிரிவு (ஏடிஎஸ்) மேற் கொண்ட புலனாய்வுகளின் அடிப்படை யில் தற்போதைய குற்ற அறிக்கை தாக் கல் செய்யப்பட்டிருக்கிறது. ஆஜ்மீர் தாக் குதல் மற்றும் ஐதராபாத்தில் 2007 மே 18 அன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்கு தல்களுக்கு இடையேயும் தொடர்புகள் இருப்பதாகப் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 2007 பிப்ரவரி 18 அன்று நடைபெற்ற தில்லி - லாகூர் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் மீதான பயங்கரவாதத் தாக்குதலிலும் இந்த எதிரிகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

மாலேகாவ் வெடிகுண்டுத் தாக்குதல் நடைபெற்றவுடனே, 2008 அக்டோபர் 13 அன்று நடைபெற்ற தேசிய ஒருமைப் பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அரசின் கவ னத்திற்குக் கீழ்க்கண்ட சம்பவங்களைக் கொண்டுவந்தது. ‘‘நாடு முழுவதும் நடை பெற்று வரும் வெடிகுண்டுத் தாக்குதல் களில் பஜ்ரங் தளம் அல்லது இதர ஆர்எஸ்எஸ் அமைப்புகள் சம்பந்தப்பட்டி ருப்பது, கடந்த சில ஆண்டுகளாக நடை பெற்றுவரும் காவல்துறையினரின் புலனாய்வுகளிலிருந்து தெரிய வருகிறது. மகாராஷ்ட்ராவில் 2003இல் பர்பானி, ஜல்னா மற்றும் ஜல்கான் மாவட்டங் களில் நடைபெற்ற சம்பவங்கள், 2005இல் உத்தரப்பிரதேசத்தில் மாவ் மாவட்டம் நடைபெற்ற சம்பவம், 2006இல் நாண்டட் சம்பவம், 2008 ஜனவரியில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் நடை பெற்ற சம்பவம், கான்பூரில் 2008 ஆகஸ் டில் நடைபெற்ற சம்பவம், மற்றும் பல சம்பவங்களை உதாரணமாகக் குறிப்பிட லாம்’’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிட்டிருந்தது. இந்த சம்பவங் கள் அனைத்தும் முழுமையாக புலனாய் வுக்கு உட்படுத்தப்பட்டு, இவற்றிற்குக் காரணமான கயவர்கள் கைது செய்யப் பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தி இருந்தது.

ஆரம்பத்தில், மாலேகாவ் கைதுகளுக் குப் பின்னர், ஆர்எஸ்எஸ் இயக்கமானது, ‘கைது செய்யப்பட்டவர்களுக்கும் ஆர் எஸ்எஸ் இயக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை’ என்று தனக்கேயுரிய பாணியில் பதிலளித்துக் கொண்டிருந்தது. ஆர்எஸ் எஸ் இயக்கத்தின் அகில இந்திய பிரச்சார பிரமுகர் மன்மோகன் வைத்யா, அப்போது ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “சங்பரிவாரத்தின் சித்தாந்தங்களிலி ருந்து அவர்கள் உத்வேகம் பெற்றிருந் திருக்கலாம், ஆயினும் அவர்கள் சங் பரி வாரத்தின் செயலாற்றும் உறுப்பினர்கள் அல்ல’’ என்று கூறியிருந்தார். இவ்வாறு இவர் கூறுவதும் ஒரிஜினல் அல்ல. மகாத்மா காந்தி படுகொலை செய்யப் பட்ட சமயத்தில் நாதுராம் கோட்சே குறித்து சொல்லப்பட்ட வாசகங்கள் தான் இவைகள். ஆயினும் கோட்சேயின் சகோ தரர் ஊடகங்களுக்கு அளித்திட்ட நேர் காணலில், தங்கள் குடும்பத்தில் உள்ள சகோதரர்கள் அனைவருமே ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் உறுப்பினர்கள் என்று பதிவு செய்திருக்கிறார். வேறு சிலர், இந்து அடிப் படைவாதத்தின் உதிரி அமைப்புகள் சில, பொறுமையிழந்து, இத்தகைய பயங்கர வாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறுகிறார்கள். இதே தொனியில், வேறு சில ஆர்எஸ்எஸ் தலைவர்களும்கூட, ‘இயக்கத்திலிருந்து விலகிச்சென்ற சிலர்’ வன்முறை மற்றும் பயங்கரவாத நடவடிக் கைகளில் இறங்கியிருக்கலாம் என்று ஊடகங்களுக்கு அளிக்கும் பேட்டிகளில் ஒப்புக்கொண்டுள்ளார்கள். ஆனால், அதற்காக ஆர்எஸ்எஸ் இயக்கத்தையே ஒட்டுமொத்தமாக பயங்கரவாத அமைப்பு என்று கூறுவது சரியல்ல என்று வாதிட் டார்கள். இதுவும் மகாத்மா காந்தியின் கொலை வழக்கு நடைபெற்ற சமயத்தில் ஆர்எஸ்எஸ் கூறியவைதான். இத்தகைய அடிப்படையில்தான் ஆர்எஸ்எஸ் இயக் கம் அன்றும், ‘‘பயங்கரவாதத்திற்கு எதி ராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியது.

ஆயினும், இப்போது தாக்கல் செய்யப் பட்டுள்ள குற்ற அறிக்கைகளிலிருந்து, பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும், ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கும் இடையே யுள்ள தொடர்புகள் நன்கு வெளிப்பட் டுள்ளன. எனவேதான் ஆர்எஸ்எஸ் தன் உத்தியை மாற்றிக்கொண்டு, பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தங்களுக்குத் தொடர்பு இருப்பதாகத் தவறாகக் கூறப் பட்டிருப்பதாகக் கூறி நாடு தழுவிய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. மூன்று நாட்கள் நடை பெற்ற அதன் அகில பாரதிய கார்யகாரி மண்டல் மாநாட்டின் கடைசி நாளான அக்டோபர் 31 அன்று இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் நடை பெறும் என்றும் லக்னோவில் அதன் தலைவரும், ஐதராபாத்தில் அதன் பொதுச் செயலாளரும் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அதன் பொதுச்செயலாளர் மிரட்டும் தொனியில், பயங்கரவாதத்துடன் ஆர்எஸ் எஸ் இயக்கத்தை தொடர்புபடுத்தியிருப் பதற்கு எதிராக “இந்து சமூகம் சீற்றம் அடைந்திருக்கிறது’’ என்றும் “தேசிய வாத’’ ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நற்பெய ரைக் கெடுத்திட மேற்கொள்ளப்படும் எத்தகைய முயற்சியும் சகித்துக்கொள்ளப் பட மாட்டாது என்றும் கூறியிருக்கிறார். இத்தகைய எதிர்ப்புகள் அரசாங்கங்களை யும் புலனாய்வு அமைப்புகளையும் மேலும் நடவடிக்கை தொடரா வண்ணம் தடுப் பதற்கான நிர்ப்பந்தங்கள் என்பது தெளிவு.

பயங்கரவாதம் என்பது தேச விரோதம்; அதற்கு எதிராக நாடு சிறிதளவுகூட சகிப்புத் தன்மை காட்டக்கூடாது. பயங்கர வாதத்திற்கு மதம் கிடையாது. அனைத்து விதமான பயங்கரவாதமும் ஒன்றை யொன்று ஊட்டி வளர்க்கின்றன. அதன் மூலம் நாட்டின் ஒற்றுமையையும் ஒரு மைப்பாட்டையும் அழிக்க முயற்சிக் கின்றன. எனவே தற்போதைய புலனாய்வு கள் எவ்விதமான தடங்கலுமின்றி நடை பெற்று நாட்டின் நலன்கள் காப்பாற்றப்பட வேண்டும். பயங்கரவாத நடவடிக்கை களில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் அமைப்பு களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக் கப்பட வேண்டும்.

தமிழில்: ச.வீரமணி

புதன், 1 டிசம்பர், 2010

கருணாநிதி அவர்களே, களப்பிரர் காலம் இருண்டகாலம்தான். யாருக்கு? : ஆதவன் தீட்சண்யா

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மூன்றாம் நாள் மாலை (25.06.2010), எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ( except Sun & kalaignar TV ? ) என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. இருபதுக்கும் மேற்பட்ட கட்சித்தலைவர்கள் பங்கேற்று கருத்துரை வழங்கிய பின் கருத்தரங்கத்தின் தலைவர் கருணாநிதி நிறைவுரை ஆற்றினார். ஆற்றினார் ஆற்றினார், ஆறிப் பழங்கஞ்சாகி சில்லிட்டுப் போகும்வரை ஆற்றினார். தமிழ்மொழியின் நிலையை வரலாற்றுப்பூர்வமாக விவரித்துப் பேசப்புகுந்த கருணாநிதி, “இடையிலே களப்பிரர் ஆட்சி வந்தது. அவர்கள் பாலி மொழிக்கு முன்னுரிமை தந்ததால் தமிழ் பின்னுக்குப் போனது. அதுவொரு இருண்டகாலம்… ” என்று போகிறபோக்கில் சொல்லிப்போனார். களப்பிரர் காலம் பற்றிய கருணாநிதியின் இந்தக்கருத்து எந்தளவிற்கு உண்மையானது?

களப்பிரர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தனர்? இங்கிருந்த மூவேந்தர்களையும் வென்று மூன்று நூற்றாண்டுகள் அரசோச்சியது எவ்வாறு என்பவை குறித்து ஒருமித்தக் கருத்து இதுகாறும் எட்டப்படவில்லை. “கி.பி.3ஆம் நூற்றாண்டில்தான் கர்நாடகாவில் நந்திமலையைச் சுற்றி வாழ்ந்த களப்பிரர் என்ற முரட்டுக்குடியினர் மூவேந்தர்களையும் வென்று சுமார் மூன்று நூற்றாண்டுகள் தமிழகத்தை ஆண்டனர்… என்று ஒரு கருத்துள்ளது” ( தமிழகம்- பிரமிப்பூட்டும் ஒரு மக்கள் வரலாறு- முனைவர் கே.மோகன்ராம், முனைவர் ஏ.கே.காளிமுத்து/ பக்கம்- 7 )

“மதுரையைச் சிறிதுகாலம் ஆண்டுவந்த கருநாடகரே களப்பிரர்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகின்றது… வேங்கடத்தைச் சார்ந்து வாழ்ந்து வந்த களப்பிரர்கள் திடீரென்று குடிபெயர்ந்து தெற்கு நோக்கிப் பாய்ந்து பல்லவரையும் சோழரையும் பாண்டியரையும் ஒடுக்கி…” என்கிறார் கே.கே.பிள்ளை ( தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும்/ பக்கம் 184, 185 )

இப்படி களப்பிரர்களை வெளியேயிருந்து வந்தவர்கள் என்று நீலகண்டசாஸ்திரி, ஒளைவை துரைசாமிப்பிள்ளை, மு.அருணாசலம்பிள்ளை, என்று பலரும் சொல்லிக்கொண்டிருக்க, களப்பிரர்களின் தோற்றுவாய் குறித்து பர்டெயின் ஸ்டெயின் வேறுவகையாக சொல்வதை தனது பொற்காலங்களும் இருண்டகாலங்களும் என்ற கட்டுரையில் கவனப்படுத்துகிறார் பொ.வேல்சாமி ( தலித் கலை இலக்கியம் அரசியல்- பக்கம் 154-160).

அதாவது, மூவேந்தர்களையும் வீழ்த்துமளவுக்கு அண்டைப்பகுதிகளில் பெரும் படைபலத்துடன் அரசப் பாரம்பரியங்கள் ஏதும் அப்போது இருந்திருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டும் பர்டன் ஸ்டெயின், “களப்பிரர்கள் மையங்களில் உரு’வாகும் அரசு ஆதிக்கங்கள்,மேலும்மேலும் விளிம்புகளிலுள்ள இனக்குழு சமூகங்களை தமது விவசாய விரிவாக்கத்திற்குள் கொண்டு வந்து அவர்களிடமிருந்து உபரிகளை உறிஞ்சுவதென்பது நடைமுறையாகின்றது. பார்ப்பனர்களுக்கு தானமாக அவர்களது நிலங்களும், அரசனுக்கு வரியாக அவர்களது வியர்வையின் விளைபொருள்களும் வன்முறையாக கைப்பற்றப்பட்டன.

இதற்கு எதிரான எதிர்ப்பு என்பது தொடர்ந்து விளிம்புகளிலிருந்த அடித்தட்டு மக்களிடமிருந்து வந்து கொண்டே இருந்தது. அரச மையங்களின் விவசாய மயமாக்கலுக்கு எதிரான இனக்குழு மக்களின் இந்த எதிர்ப்பின் உச்சக்கட்டமே களப்பிரர் காலம்…” என்கிறார். பர்டன் ஸ்டெயின் கூற்றுப்படி களப்பிரர்கள் இந்த மண்ணுக்கே உரியவர்கள். அவர்கள் தமிழர்கள்தான் என்று க.ப. அறவாணன் போன்றவர்களும் தெரிவிப்பதாக பொ.வேல்சாமி பதிவு செய்கிறார்.

சரி, களப்பிரர்கள் வெளியிலிருந்து வந்தவர்களா இங்கிருந்தே கிளர்ந்தவர்களா என்பது குறித்து வரலாற்றாய்வாளர்கள் அவரவர் முடிவுகளை சொல்லிக்கொண்டிருக்கட்டும். இதில் களப்பிரர் காலம் இருண்டகாலம் என்ற வசை ஏன் வருகிறது? இருண்டகாலம் என்று வரலாற்றாசிரியர்கள் சிலர் குறிப்பிடுமளவுக்கு அப்படி களப்பிரர்கள் என்னதான் செய்தார்கள்?

ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் புகுந்து எரிந்துகொண்டிருந்த விளக்குகளையெல்லாம் ஃப்பூ என்று ஊதிஊதி அணைத்துவிட்டார்களா? அல்லது அப்போதும் ஆற்காடு வீராசாமியே மின்துறை அமைச்சராயிருந்து பவர்கட் செய்து நாட்டையே இருட்டில் மூழ்கடித்தாரா? எதற்கிந்த வசை?

இங்கேதான் இந்திய வரலாற்றை எழுதியவர்களின் சாதிய சாய்மானங்கள் அவர்கள் எழுதிய வரலாறுகளுக்குள் பதுங்கியிருப்பதைக் காண வேண்டியுள்ளது. தமது பார்ப்பன மற்றும் வேளாள சாதிகளுக்கு அனுசரணையாக இருந்த ஆட்சிகள் இருந்த காலத்தையெல்லாம் பொற்காலம் என்றும் தமது சுரண்டும் நலன்களுக்கு எதிராக இருந்த ஆட்சிகளின் காலங்களையெல்லாம் இருண்டகாலம் என்று அவர்கள் மோசடியாக எழுதிவைத்துள்ளார்கள். இந்த எளிய உண்மையை புரிந்துகொள்ளமாமலே கருணாநிதி உள்ளிட்ட பலரும் பிதற்றித்திரிவதுதான் வாடிக்கை. சரி, இருண்டகாலம் என்று இந்த ஆதிக்கசாதியினர் களப்பிரர்கள் மீது காழ்ப்பு கொண்டு சொல்வதற்கு காரணங்கள்தான் யாவை?

அடிப்படையில் களப்பிரர்கள் அவைதீக மரபைச் சார்ந்தவர்கள். தொடக்கத்தில் பௌத்தத்தையும் பின் சமணத்தையும் ஆதரித்திருக்கிறார்கள். இதற்கு முன்பிருந்த ஆட்சியாளர்களால் பார்ப்பனர்களுக்கு பிரமதேயம் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டிருந்த தானங்களை ரத்து செய்துள்ளனர். அந்த நிலங்கள் பொதுப்பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

பார்ப்பனர்களுக்கு சமூகத்தில் இருந்த முற்றுரிமைகளை ரத்து செய்கின்றனர். மக்கள் மற்றும் அரசர்களின் செல்வத்தை கபடமாகப் பறிக்கும் பார்ப்பனர்களின் சடங்குகள், வேள்விகள் தடை செய்யப்பட்டன. இதற்கு அடிப்படையாக இருந்து உதவிய கிராமப்புற கட்டமைப்பினை பயன்படுத்தி வந்த வேளாளர்களின் தனித்த ஆதிக்கமும் கட்டுக்குள் நிறுத்தப்பட்டன, அல்லது மறுக்கப்பட்டன. இது போதாதா இந்த பார்ப்பனர்களும் வேளாளர்களுமாகிய வரலாற்றாய்வாளர்கள் களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்று வர்ணித்து வசை தூற்ற?
“களப்பிரர் காலம் என்பது வெறும் ஆட்சி மாற்றமாக இல்லாமல் அதன் பின்புலத்தில் சில சமுதாய மாற்றங்கள் இருந்திருக்கின்ற காரணத்தால்தான் அவர்களது ஆட்சி, அடிக்கடி ஆட்சி மாற்றங்கள் நடைபெற்று வந்த அந்தக்காலத்திலேயே முந்நூறு ஆண்டுகள் தாக்குப்பிடித்திருக்கிறது” என்கிறார் பேரா.அருணன் ( பொங்குமாங்கடல்- பக்கம் 17 ) இந்த எளிய உண்மையை மயிலை சீனி வேங்கடசாமி போன்றவர்களும் பதிவு செய்துள்ளனர்.
பார்ப்பன, வேளாள ஆய்வாளர்களால் இருண்டகாலம் என்று குற்றம் சாட்டப்பட்ட களப்பிரர் காலத்தில் தமிழில் ஏற்பட்ட வளர்ச்சிநிலை குறித்து மயிலை சீனி வேங்கடசாமி கூறுவதைப் பாருங்கள். “அபிநயம், காக்கைப்பாடினியம், நத்தத்தம், பல்காப்பியம், பல்காயம் முதலிய இலக்கண நூல்கள், நரி விருத்தம், எலி விருத்தம், கிளி விருத்தம், சீவக சிந்தாமணி, பெருங்கதை முதலிய இலக்கிய நூல்கள், விளக்கத்தார் உத்து என்னும் கூத்துநூல், கார் நாற்பது, களவழி நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், எலாதி போன்ற கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலானவை, இறையனார் களவியல் உரை முதலியன களப்பிரர் காலத்தில் தோன்றிய சில நூல்கள். தமி எழுத்து பிராமியிலிருந்து வட்டெழுத்தாக மாறியது களப்பிரர் காலத்தில்தான். ஆசிரிய, வஞ்சி, வெண்பா, கலி என்னும் நான்கு வகைகளுக்குள் தமிழ்ப்பாக்கள் மடங்கிக் கிடந்தது தளர்ந்து தாழிகை, துறை, விருத்தம் என புதிய பா வகைகள் தோன்றியது இந்த இருண்டகாலகட்டத்தில்தான்…” ( முன் குறிப்பிட்ட பொ.வேல்சாமியின் கட்டுரை)
களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்று கூறுகிற கே.கே.பிள்ளை கூட ‘’பூச்சியபாதர் என்பவரின் மாணவரான வச்சிர நந்தி என்பார் மதுரையில் திராவிட சங்கம் ( திரமிள சங்கம் ) ஒன்றை நிறுவினார் ( கி.பி.470.) … பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பல இச்சங்க காலத்தில் இயற்றப் பெற்றவையாம். மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இக்காலத்தில் எழுந்தவையெனத் தோன்றுகின்றன. நீலகேசி, குண்டலகேசி, யசோதர காவியம், சீவக சிந்தாமணி ஆகிய காவியங்கள் தமிழில் தோன்றுவதற்குக் காரணமாக இருந்ததும் இத்திராவிடச் சங்கத்தின் தொண்டே காரணமாகும்…. ” என்கிறார் ( முன்சொன்ன நூல், பக்கம்- 186 )

‘’புத்த மதமும், சமண மதமும் ஏற்றம் பெற்றிருந்த இந்த இருண்டகாலத்தில்தான் தமிழகத்தில் சிறப்பானதொரு இலக்கிய வாழ்வு நடைபெற்றிருக்கிறது. பதினெண் கீழ்க்கணக்கு என்பதன் கீழ் வரும் பல நூல்கள் இந்தக்காலத்தில்தான் எழுதப்பட்டன. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இந்தக்காலத்தில் எழுதப்பட்டவைதான்” என்று இருண்டகால கண்டுபிடிப்பாளர் நீலகண்ட சாஸ்திரி தனது தென்னிந்திய வரலாறு என்ற நூலில் குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்டும் பேரா.அருணன், பெரும்பாலான ஆய்வாளர்களின் கருத்துப்படி இதே காலத்தில்தான் திருக்குறளும் எழுதப்பட்டது என்கிறார்.

அதுமட்டுமல்லாது பௌத்த, சமண மதத்திற்கு ஆதரவான களப்பிரர்கள் சிவபெருமான் திருவந்தாதி, ஆசாரக்கோவை, இறையனார் களவியல் போன்ற பிறசமயங்களின் நூல்கள் வெளிவருவதற்கும் அனுசரணையாகவே இருந்திருக்கின்றனர். ஆக, களப்பிரர்கள் பாலி மொழிக்கு முக்கியத்துவம் தந்து தமிழை வீழ்ச்சியடைய வைத்து இருண்டகாலத்தை உருவாக்கினார்கள் என்கிற கருணாநிதியின் கருத்து வரலாற்றுண்மைக்குக்குப் புறம்பானது.

இப்போது ஒரு பார்ப்பனர்களின் மாநாடோ அல்லது வேளாளர்களின் சைவ சித்தாந்த மாநாடோ நடந்து அந்த மாநாட்டுக்கு கருணாநிதி தலைவராயிருந்து களப்பிரர்களின் காலம் இருண்டகாலம் என்று சொல்லியிருப்பாராயின் அவரது குமைச்சலையும் குற்றச்சாட்டையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

ஆனால் நடப்பதோ உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு. அதில், களப்பிரர் காலத்தில் தமிழ் மொழி வளர்ச்சியடைந்ததா முடக்கப்பட்டதா? அப்போது இலக்கிய, இலக்கண நூல்கள் எதுவும் வெளியானதா இல்லையா என்கிற ரீதியில் மட்டுமே பரிசீலிப்பதை விடுத்து இப்படி யாரோ மண்டபத்தில் எழுதிக் கொடுத்ததை மன்றத்தில் வாசிக்கிறார் கருணாநிதி. கற்றறிந்த ஆன்றோர்கள் கூடியிருப்பதாக நம்பப்படுகிற ஒரு சபையில் இப்படியொரு பொய்யை அவர் சொல்லிப்போயிருக்கிறார்.

“காலப்பறையர் என்பதே களப்பிரர் என மருவியது, ஆகவே நாங்களும் ஆண்ட பரம்பரைதான்” என்ற தமாஷை சீரியஸாகப் பேசுகிற- கருணாநிதிக்கு நெருக்கமான- தலித் அறிவுஜீவிகளோ அல்லது வரலாற்றாசிரியர்களோ அவரை நல்வழிப்படுத்தவேண்டும். தான் மிகுதியும் கொண்டாடி மாநாட்டு இலச்சினையில் பொறித்துள்ள அய்யன் வள்ளுவரையும் அவரது திருக்குறளையும் இந்த வையத்திற்கு தந்தது களப்பிரர்கள் காலம்தான் என்று கருணாநிதி இனியேனும் உணருவாரேயானால், பார்ப்பன வேளாள கருத்துருவாக்கவாதிகள் சொல்லித் தந்த வரலாற்றுப் பொய்களை வாந்தியெடுக்காமல் இருக்கும் வாய்ப்புண்டு.

அவசரத்திற்கு உதவிய நூல்கள்:

1. தலித் கலை இலக்கியம் அரசியல், தொகுப்பாசிரியர்: ரவிக்குமார் ( தலித் கலைவிழாக் குழு, நெய்வேலி)
2.தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் – கே.கே.பிள்ளை ( உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)
3.பொங்குமாங்கடல் – அருணன் ( வசந்தம் வெளியீட்டகம் , மதுரை )
4.தமிழகம்- பிரமிப்பூட்டும் ஒரு மக்கள் வரலாறு- முனைவர் கே.மோகன்ராம், முனைவர் ஏ.கே.காளிமுத்து ( ஜாசிம் பதிப்பகம், திருச்சி )

புத்தரும் அவரது தம்மமும் : அருணன்


அம்பேத்கர் தனது கடைசிக் காலத்தில் புத்த மதத்தைத் தழுவினார் என்பதைப் பலரும் அறிவார் கள். ஆனால் புத்த மதம் பற்றி அவரது பார்வை என்னவாக இருந்தது என்பதைப் பலரும் அறியார்கள். இது பற்றி அவர் பேசியவற்றை, எழுதியவற்றை எல்லாம் ஒரே தொகுப்பாகத் தமிழில் கொண்டு வந்தால் ஒரு முழுச் சித்திரம் கிடைக்கும். அதன் வழியாக மூல பவுத்தத்தை எவரும் தரிசிக்கலாம். கூடவே அம்பேத்கரின் பவுத்தம் வழியாக ஞான மார்க்கத்தைக் கண்டு வியக்கலாம்.

1950 இல் மகாபோதி சங்கத்தின் பத்திரிகை யிலே “புத்தரும் அவரது மதத்தின் எதிர்காலமும்” என்றொரு கட்டுரை எழுதினார் அம்பேத்கர்.

அதே ஆண்டில் கொழும்பில் நடைபெற்ற புத்த மாநாடு ஒன்றில் பங்கு கொண்டு “ இந்தியாவில் புத்திசத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்” என்பது பற்றி உரையாற்றினார். “நான் ஏன் புத்திசத்தை விரும்பு கிறேன்? இன்றைய சூழல்களில் உலகிற்கு அது எவ்வளவு பயனுள்ளது?” என்பது பற்றி லண்டன் பி.பி.சி நிறுவனத்திற்கு ஓர் உரை நல்கினார்.

1956 இல் இதே காலத்தில்தான் “புத்தரும் கார்ல் மார்க்சும்”எனும் நூல் எழுதினார் . இதே காலத்தில் தான் “புத்தரும் அவரது தம்மமும்” என்கிற மகத்தான படைப்பை எழுதி முடித்தார்.

பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பின் 22 ஆம் தொகுதியாகத் தமிழில் இந்தப் படைப்பு வெளிவந்துள்ளது. அதில் உள்ள விபரத் தின்படி அது முதன் முதலாக 1957 இல், அதாவது அம்பேத்கரின் மறைவுக்குப் பிறகு வெளி வந்த தாகத் தெரிகிறது. ஆனால் இது அவரது காலத் திலேயே தனிப்பட்ட சுற்றுக்காகவும் விவாதத் திற்காகவும் அச்சுவாகனம் ஏறியது என்கிறார் ஆய்வாளர் சந்திரபரிள். அப்போதே இதிலுள்ள சில கணிப்புகள் புத்த பிக்குகளின் கோபத்தைக் கிளறும் என்பது அம்பேத்கரிடம் சுட்டிக் காட்டப் பட்ட போது அவர் கூறினாராம்: “இதற்காகப் புத்த பிக்குகள் என்னைத் திட்டினால் கவலைப்பட வேண்டாம். எவ்வளவு காலத்திற்கு உண்மையை மூடி மறைக்க முடியும்?”

அம்பேத்கர் என்ன எதிர்பார்த்தாரோ அது விரைவில் நடந்தது. மகாபோதி சங்கப் பத்திரிகை யில் பிக்கு ஜீவகா இந்த நூலுக்கு விமர்சனம் எழுதினார். அதில் கர்மா கோட்பாட்டை மறுத்த தற்காகவும், அகிம்சை கோட்பாட்டிற்குப் புதிய அர்த்தம் தந்ததற்காகவும், தம்மம்(தருமம்) எனப் பட்டதைத் தனிமனித விடுதலையாகக் கருதாமல் சமூக ஒழுங்கமைப்பாகக் கருதியதற்காகவும், புத்த பிக்குகளுக்கு தீவிர சமூக சேவையை வலியுறுத்தி யதற்காகவும் அம்பேத்கர் கண்டிக்கப்பட்டார். முடிவில் “புத்தகத்தின் தலைப்பை புத்தரும் அவரது தம்மமும் என வைத்ததற்குப் பதிலாக அம்பேத் கரும் அவரது தம்மமும் என வைத்திருக்க வேண்டும்” என்று கிண்டலாகவும் சொல்லி யிருந்தார்.

இந்த விமர்சனம் அம்பேத்கர் காலமான பிறகு வெளி வந்தது. இதனால் இதற்கு தக்க பதிலடி கொடுக்க அண்ணலால் முடியாமல் போனது. ஆனால் இந்த விமர்சனத்தின் மூலம், மூல பவுத்தத்தை அம்பேத்கர் எவ்வளவு கச்சிதமாக உள்வாங்கி, அதைத் தனது நூலில் வெளிப்படுத்தி யிருந்தார் என்பது நமக்குப் புரிந்துபோகிறது.

உண்மையில் தனது நூலின் முன்னுரையில் பவுத்தத்தைப் புரிந்து கொள்வதில் உள்ள சிக்கல் களை அவர் சுட்டிக் காட்டியிருந்தார். குறிப்பாக நான்கு விஷயங்களை விவாதத்திற்காகத் தான் முறைப்படுத்தியிருப்பதாகக் கூறியிருந்தார். அவை:

1. புத்தர் துறவு வாழ்வை மேற்கொண்டதற் கான காரணம்

2. துக்கம் பற்றிய அந்த நான்கு கோட்பாடு கள் புத்தர் போதித்தவையா அல்லது பிற்காலச் சேர்க்கையா?

3. ஆன்மா, கர்மம், மறுபிறப்பு பற்றிய சிந்தனைகள். ஆன்மாவை மறுத்துவிட்டு கர்மம்- மறுபிறப்பு பற்றி மட்டும் பேசிய அந்த விசித்திர முரண்

4. பிக்கு எனப்பட்டவர் முழுநிறைத் தனி மனிதனாக இருக்க வேண்டுமா அல்லது சமூக சேவகராகச் செயல்பட வேண்டுமா?

இந்த முன்னுரையைப் படித்தவுடனேயே நமக்குள் ஒரு பரபரப்பு ஏற்பட்டு விடுகிறது. புத்தரின் வாழ்வு மற்றும் போதனைகள் பற்றி நமது பொதுப் புத்தியில் ஏற்றப்பட்டுள்ள கருத்தியலை இது கேள்விக்குள்ளாக்கி விடுகிறது மிகுந்த ஆர்வத்தோடு நூலைப் படிக்க முடிகிறது.

பிணம், நோயாளி, முதியவர் ஆகியோரைப் பார்த்த பிறகுதான் புத்தர் துறவு வாழ்வை மேற் கொள்ள முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. தனது 29 ஆவது வயதில் அப்படிச் செய்ததாகவும் கூறப்படுகிறது. அவ்வளவு காலம் வரை அந்த மூன்று காட்சிகளையும் அவர் காணாமலா இருந்திருப்பார்? அது அதிசயக் காட்சிகளாகி, அதனாலேயா துறவியாகி இருப்பார்.? இது அறிவுக்குப் பொருந்தவில்லை. உண்மைக் காரணத்தைத் தேடி அம்பேத்கர் பவுத்தத்தின் மூல நூல்களுக்குள் பயணித்தார். “தமிழ்நாட்டில் பவுத்த மறுமலர்ச்சி இயக்கத் தந்தை பண்டித அயோத்திதாசரின் உற்ற நண்பர் பேராசிரியர் இலட்சுமி நரசுவின் பவுத்தம் பற்றிய நூல்கள் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் இந்த நூலை எழுதத் தூண்டுவதாக அமைந்தன” என்று தமிழ்நூலின் நிர்வாகப் பதிப்பாசிரியர் எஸ். பெருமாள் கூறுகிறார். ஆக, பவுத்தம் பற்றிய புதிய ஆய்வுகளையும் கணக்கில் கொண்டு அவர் உண்மையைத் தேடினார்.

சாக்கியர்களின் நாட்டு எல்லையில் கோலியர்களின் நாடு இருந்தது. இரண்டுக்கும் இடையே ரோகிணி ஆறு ஓடியது. அங்கு நதிநீர்ப் பிரச்சினை இருந்தது. அதனால் இரு தேசங் களுக்கும் இடையே மோதல்கள் நடந்தன. நதி நீர்ப் பிரச்சினை இந்தத் துணைக்கண்டத்தில் இன்று நேற்று உருவானதல்ல. அது ஆதிகாலந்தொட்டு நடந்தது. இந்தப் பிரச்சினையில் சாக்கியர்களின் சங்கம் கூடிப் போர் தொடுக்க முடிவு செய்தது. இதன் ஓர் உறுப்பினராகிய சித்தார்த்தர்(புத்தரின் இயற்பெயர்) அந்த முடிவை எதிர்த்தார். “தருமம் என்பது நான் அறிந்த வரையில் பகைமையை பகைமையால் அழிக்க முடியாது என்று அறிவது. அன்பால் மட்டுமே அதை வெல்ல முடியும் என்று உணர்வது” என்று அந்தச் சபையில் பேசினார். கூட்டு முடிவை எதிர்த்த ஒரு தனிமனிதர் என்ற வகையில் அவர் அந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. அதைக் குடும்பத்தை விட்டு வெளியேறுகிற-பரிவ்ராஜகனாக வெளியேறுகிற- பாணியில் நடைமுறைப் படுத்தினார். இது அம்பேத்கர் காட்டுகிற உண்மைச் சித்திரம்.

நதிநீர்ப் பிரச்சினையால் இப்படியொரு இக்கட்டான நிலை ஏற்படாதிருந்தால் அவர் வீட்டைவிட்டு வெளியேறியிருக்க மாட்டார். மனித வாழ்வு பற்றிய மெய்ம்மைகளை அறிவது தான் அவரது நோக்கம் என்றால் அதற்காகத் துறவு வாழ்வை மேற்கொள்ள வேண்டிய அவசிய மில்லை. இல்லற வாழ்வில் இருந்து கொண்டே அதைச் செய்திருக்கலாம். விஷயம் என்ன வென்றால், சமூக வாழ்வில் ஏற்பட்ட சிக்கலும், தனிமனித சிந்தனையில் ஏற்பட்ட அறிவுத் தாகமும் சேர்ந்து அவரை வீட்டைவிட்டு வெளியேற வைத்தது என முடிவு கட்டுவதே பொருத்தமாகப் படுகிறது. இதற்கு மரணம், நோய், மூப்பு போன்ற தவிர்க்க முடியாத துக்கங்கள் பற்றிய சிந்தனையும் ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடும். இது பின்னாளில் புராணமயமாகக் காட்சிப் படுத்தப் பட்டது போலும். புத்தர் மறைந்து பல நூற்றாண்டு கள் கழித்து எழுதப்பட்ட அஸ்வகோஷரின் “புத்த சரிதம்” நூலில் இப்படித்தான் அது சித்தரிக்கப் பட்டுள்ளது.

துக்கம் உண்டு, துக்கத்திற்குக் காரணம் உண்டு, துக்கத்தைத் தொலைக்க முடியும், அதற்கான மார்க்கமும் உண்டு - என்பவை துக்கம் பற்றிய புத்தரின் நான்கு கோட்பாடுகள் பிற்காலத்து பவுத்தர்கள் முதல் இரண்டுக்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுத்து அதையொரு விரக்திச் சித்தாந்தமாக ஆக்கிவிட்டார்கள். இப்போதும்கூட ஆசையைத் துறக்கச் சொன்னார் புத்தர் என்பதே அவரது தத்துவம் பற்றிய சாரமாக வெகு மக்கள் புத்தியில் ஏற்றப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு கோட்பாடுகள் தனிமனித - சமூக ஒழுக்க முறைமை பற்றிப் பேசுவது. அதை நாசூக்காகப் புறந்தள்ளி னார்கள். அம்பேத்கரோ அதுவே புத்த தருமத்தின் அஸ்திவாரம் என்றார்.

“என் தம்மம் துன்பத்தின் இருப்பை ஒப்புக் கொள்கிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை. .ஆனால் அதே அளவில் துன்பத்தை நீக்குவதற்கும் அது முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம். என் தம்மம், நம்பிக்கை, இலட்சி யம் இரண்டையுமே தன்னில் கொண்டது” என்று புத்தர் தன் முதல் விளக்கப் பேருரையை முடித்தார் என்கிறார் அம்பேத்கர்.

இந்தத் துணைக்கண்டத்தில் ஆன்மா மறுப் பை மிக வலுவாக எடுத்துச் சொன்னவர் புத்தர். “அவர் ஆன்மா என்று ஒன்று இல்லை என்று மிகவும் உறுதியான வார்த்தைகளில் மஹாலிக்கு கூறியிருக்கிறார். எனவேதான் ஆன்மா பற்றிய அவருடைய கோட்பாடு அநாத்மா-அதாவது ஆன் மா அற்றது-என அழைக்கப்படுகிறது” என்று மிகச் சரியாகக் கூறியிருக்கிறார் அம்பேத்கர். மரணத் திற்குப் பிறகும் உணர்வு இருக்குமேயானால் அது மரணமாகாது எனும் எளிய உண்மையை மிக வலிமையாகச் சொன்னார் புத்தர். அதே நேரத்தில் தொடரும் கர்மா, மறுபிறப்பு எனும் சொல்லாடல் களும் அவரிடம் காணப்பட்டன. இது முரண் அல்லவா?

இல்லை என்று விவரித்திருக்கிறார் அம்பேத் கர். சொல்லாடலின் ஒற்றுமைதான் இதைப் பிராமணியக் கோட்பாடு போலக் காட்டுகிறதே தவிர, புத்தரின் ஆன்மா மறுப்பும் இதர சிந்தனை களும் இதன் அர்த்தத்தைக் தெளிவாக வேறுபடுத்தி காட்டுகின்றன என்பதைச் சுட்டிக் காட்டியிருக் கிறார். “கடந்த பிறவியின் கர்மம் பெறப்படுகிறது எனக் கூறுவதற்குப் பதிலாக கடந்த பிறவியின் கர்மம் வாரிசுரிமையாகச் சுவீகரிக்கப்படுகிறது என்று கூறுவது உசிதமாயிருக்கும்” என்று சரியாகக் குறிப்பிடுகிறார் அம்பேத்கர். அதாவது புத்தர் குறிப்பிட்டது ஆன்மா கூடுவிட்டுக் கூடு பாய்கிற மறுபிறப்பு அல்ல, மாறாகக் காரண காரியத் தொடர்பால் புதிய தலைமுறையில் ஏற்பட்டிருக் கும் பாதிப்பு. புத்தர் மறைந்து ஒரு சில நூற் றாண்டுகளிலேயே எழுதப்பட்ட அருமையான படைப்பு நாகசேனரின் “மிலிந்த பங்கம்” - அதிலே எதுவும் இடம் மாறாமல்தான் மறுபிறப்பு நடக்கிறது என்றும் அதற்கு உதாரணமாக தீபத் திலிருந்து ஏற்றப்படும் தீபத்தைச் சொல்லியிருக் கிறார்.

விடுதலை,முக்தி எனும் சொல்லாடல்களை ஆன்ம விடுதலை, தமிமனித முக்தி எனும் அர்த்தத் திலேயே பயன்படுத்தியது பிராமணியம், மதத்தின் நோக்கம் அதுவாகவே இருக்க முடியும் என்று சிறிதும் சந்தேகமின்றிச் சொல்லி வந்தது. வருணா சிரமம் எனும் ஒருவகை அடிமைச் சமுதாயத்தில் ஒடுக்கும் வர்க்கங்களாக இருந்த பிராமணர்- க்ஷத்திரியர்களுக்கு இதுவே போதுமானதாக இருந்தது. குற்றவுணர்விலிருந்து தனிமனிதனை விடுவிக்கும் உத்தியாகவும் இது இருந்தது. ஆனால் ஒடுக்கப்பட்ட வருணங்களுக்கு இது போதுமான தாக இல்லை இது சமூக விடுதலையையும், சக மனிதர்களின் நல்வாழ்வையும் கோரியது. இதற் கான மார்க்கமாகவே பிக்குகளை ,அவர்களின் சங்கத்தைத் தயார்படுத்தினார் புத்தர். பிக்கு களுக்கும் புத்தருக்கும் இடையில் நடந்த ஓர் அருமையான உரையாடலை அம்பேத்கர் மேற் கோள் காட்டியிருக்கிறார்.

“ புத்தர் : ஓ ! பிக்குகளே ! நான் உலகத்துடன் சச்சரவிடுபவன் அல்ல. ஆனால் உலகம் என்னுடன் சச்சரவிடுகிறது.

பிக்குகள்: ஐயன்மீர் ! நம்மை நாம் போராளிகள் என்று அழைத்துக் கொள்கிறோம் . எந்த வகையில் நாம் போராளிகளாக உள்ளோம்?

புத்தர்: ஓ ! பிக்குகளே ! நாம் போர் தொடுக்கிறோம். ஆகவே நாம் போராளிகள் என்று அழைக்கப்படுகிறோம்.

பிக்குகள்: ஐயன்மீர்! நாம் எங்கு, எதற்காகப் போர் தொடுக்கிறோம்?

புத்தர்: உயர்ந்த நன்னெறிகளுக்காக , உன்னத நன் முயற்சிகளுக்காக , தெளிந்த நல்லறிவிற்காக நாம் போர் தொடுக்கிறோம். ஆகவேதான் போராளிகள் எனப்படுகிறோம். எங்கெல்லாம் நன்னெறி அபாயத்தில் உள்ளதோ அங்கெல்லாம் போராடுங்கள், வாயடைத்து நிற்காதீர்கள்”

துறவிகளைப் போராளிகள் என அழைத்த போதகர் புத்தரைத் தவிர வேறு யாரும் இல்லை. வருணாசிரமத்திற்கு எதிராகக் காவி உடையில் கலகக்காரர்களை உருவாக்குவதே அவரது நோக்க மாக இருந்தது. இதை புரிந்து கொண்டுதான் பவுத்த பிக்குகளுக்குச் சமூக சேவையைப் புத்தர் வலி யுறுத்தினார் என்று சரியாகவே சொன்னார் அம்பேத்கர். “இல்லறத்தாருக்குத் தொண்டு புரியவே ஒரு பிக்கு இல்லறத்தைத் துறக்கிறார்” என்று அழகாகச் சொன்னார். இது சுய விடுதலை யில் அந்தச் சுயநலத்தில் மூழ்கிப் போயிருந்த பிக்கு ஜீவகா போன்றோருக்குப் பிடிக்காமல் போனதில் ஆச்சரியம் இல்லை.

புத்தர் கூறிய அஹிம்சா தத்துவத்தைக் கொல்லாமையாகவும், புலால் உண்ணாமை யாகவும் மிகவும் சுருக்கிவிட்டார்கள் பிற்காலத்திய பவுத்தர்கள். ஆனால் புத்தரே மாமிச உணவு உண்டு வந்தார். அவர் கடைசியாகச் சாப்பிட்டது சூகரமத் துவம். இதன் அர்த்தம் இளம் பன்றிக்கறி என்று தர்மானந்த கோசாம்பி உள்ளிட்ட அறிஞர்கள் பலரும் சொல்லியிருக்கிறார்கள். இந்த உண்மை யைச் சொல்வதில் பிற்காலத்திய பவுத்தர்கள் மிகவும் கூச்சப்பட்டார்கள். மாமிச உணவு விஷயத் தில் புத்தர் நீக்குப்போக்காக இருந்த காரணத்தால் தான் தனது மார்க்கத்தில் சூத்திரர்களையும், பஞ்சமர்களையும் அவரால் ஈர்க்க முடிந்தது. தாழ்த்தப்பட்ட மக்களின் மகத்தான தலைவர் என்ற முறையில் அம்பேத்கரும் அஹிம்சா பற்றிய சரியான புரிதலைத் தர வேண்டியிருந்தது.

“புத்தர் கூறியுள்ளார்: எதையும் நீங்கள் கொல்ல விரும்பாவண்ணம் அனைத்தையும் நேசி யுங்கள். அஹிம்சைக் கொள்கையை விவரிக்கின்ற உறுதியான உடன்பாட்டு வழி இது, இதிலிருந்து அஹிம்சைக் கொள்கை கொல்லாதே எனக் கூறாமல் அனைத்தையும் நேசி ‘ எனக் கூறுவ தாகவே தோன்றுகிறது. கொல்ல விரும்புதலுக்கும் கொல்லுதலின் தேவைக்கும் இடையிலான வேறு பாட்டையே புத்தர் குறித்தார் என்பது மிகவும் தெளிவாகிறது” என்று அம்பேத்கர் புத்தரது அஹிம்சா கோட்பாட்டின் சாரத்தைப் பிரமாதமாக உள்வாங்கியிருந்தார். தத்துவார்த்த - வரலாற்று நோக்கில் அதை இப்படியாகக் கச்சிதமாக வரை யறுத்தார்: “பிராமணியம் தன்னில் கொல்லுதலில் விருப்பத்தைக் கொண்டுள்ளது. சமணம் தன்னில் எப்போதும் கொல்லாமையில் விருப்பத்தைக் கொண்டுள்ளது. புத்தரின் அஹிம்சை முற்றிலும் நடுநிலைப் பாதையைக் கொண்டதாய் உள்ளது”

அம்பேத்கரை வெறும் சட்ட மேதையாய்ச் சுருக்கிக் காட்டுகிற வேலை இன்றளவும் நடக் கிறது. அவர் அதையெல்லாம் தாண்டி உயர்ந்து நின்றவர். அவர் தேர்ந்த சரித்திர ஞானி , ஆழ்ந்த தத்துவ ஞானி இந்த ஒரு நூலைப் படித்தாலே இந்தக் கூற்றின் உண்மையை எவரும் உணரலாம். புத்தரைப் பற்றியும் அம்பேத்கரைப் பற்றியும் ஒருங்கே அறிய வேண்டும் என்றால் அவசியம் இதைப் படித்தாக வேண்டும் . அந்த வகையில், பிக்கு ஜீவகா கேலியாகக் கூறியிருந்தாலும் இது புத்தரும் அவரது தம்மமும் கூறுவது. இது அம்பேத் கரும் அவரது தம்மமும் கூறுவது இந்த அளவுக்கு இருவரும் ஒன்றிப் போனார்கள்.

அம்பேத்கர் மேலும் வாழ்ந்திருந்தால் மெய் யான பவுத்தத்தை மீட்டுத் தந்ததோடு அதை வெகுமக்கள் மத்தியில் பரவலாக்கிருப்பார். அந்த பாக்கியம் இந்த நாட்டு மக்களுக்கு இல்லாமல் போனது. அதனால்தான் “புத்தம் சரணம்”என்று அதை முற்றிலுமாகத் திரித்துக் கூறுகிற ஒரு நூலை கிழக்குப் பதிப்பகத்தால் வெளியிட முடிந்துள்ளது. இத்தகைய மோசடிகளை முறியடிக்க அம்பேத் கரின் நூலைத் தமிழர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டியது ஒவ்வொரு முற்போக்காளரின் கடமையாகும்.

உதவிய நூல்கள்:

1.புத்தரும் அவரது தம்மமும்-பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 22

2.பகவான் புத்தர்- தர்மானந்தா கோஸாம்பி

3. Social and political Ideas of B.R.Ambedkar- Chandra Bharill

4.புத்தர்: தருமமும் சங்கமும் - அருணன்.

5. Life of Buddha-Asvaghosha-Translated by Samuel Beal

- நன்றி:அண்ணல் அம்பேத்கர் - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் மலர் 2010 திராவிட இயக்கத் தமிழர் பேரவை.